
ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்வா இயக்கங்கள் இந்து பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை முழுவதுமாக தூக்க வேண்டும் என்று தற்போது பேச ஆரம்பித்துள்ளது. ஆர் எஸ் எஸ்ஸின் கவலை எல்லாம் இரண்டு சதமான பார்பனர்களின் நலனை சுற்றியே இருக்கும் என்பது நமக்கும் தெரியும். இது பற்றி பீஹாரின் லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் கூறியிருப்பதாவது..
'இந்துத்வாவாதிகளான நீங்கள் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவது பற்றி தற்போது பேசிக் கொண்டுள்ளீர்கள். நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இட ஒதுக் கீட்டை மேலும் அதிகப்படுத்துவோம். உண்மையில் நீங்கள் தாய்ப் பால் குடித்திருந்தால் இட ஒதுக்கீட்டை அகற்று பார்போம்' என்று வசால் விட்டுள்ளார்.
சபாஷ்...... சரியான போட்டி!
2 comments:
ரூ.2000 கோடிக்கு மேல் மக்கள் வாிப்பணத்தை கொள்ளையடித்து விட்டு நீதி மன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ள பணக்கார கொள்ளைக்காரன் சொல்லவது பாிசீலனை செய்ய தக்கது அல்ல. இந்து இயக்கங்கள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவேயில்லை.அவர்களின் கொள்கையும் அது அல்ல. அதில் உள்ள குறைகளைக் களைவதுதான் நோக்கம்.இட ஒதுக்கீட்டின் பலன் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை இனத்தாா்“களில் பரம ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். இதுதான் நியாயாம்.
நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விளக்கும் போது ssocially backward என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது. முற்பட்ட சாதி மக்கள் மிக நன்றாகவே திருந்தி விட்டாா்கள். அவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு கல்வி உதவித்தொகையாவது வழங்க வேண்டும். அதுதான் சமூக நீதி. தற்சமயம் முற்பட்ட சாதி மக்களுக்கு அநீதி செய்யப்பட்டு வருகினறது என்றே நான் முடிவு செய்கின்றேன். தீா்வு காணப்பட வேண்டும்.
Post a Comment