Followers

Thursday, September 17, 2015

முன்பு போதைக்கு அடிமையானவர்கள் இன்று ஹஜ் பயணத்தில்!



இந்த வருட ஹஜ் பயணத்தில் திருத்தப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை அரசு செலவில் ஹஜ்ஜூக்கு அனுப்பி வைக்கிறது துபாய் காவல் துறை. இந்த வருட ஹஜ் பயணத்தில் நான்கு பேர் அரசு செலவில் வருகின்றனர்.

'தாருல் பர்' என்ற பெயரில் துபாய் காவல் துறையில் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இதன் பணி போதைக்கு அடிமையானவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு அன்பான முறையில் சிகிச்சை அளித்து அவர்களை சமூகத்தில் ஒன்றர கலக்க விடுவதே. 2009 ஆம் ஆண்டு ஆரமபிக்கப்பட்ட இந்த பணி 2015 வரை 69 ஆட்களை போதை பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்து முடிவில் அவர்களை அரசு செலவில் ஹஜ்ஜூக்கும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளது.

போதை மருந்துக்கு அடிமையான இரண்டு துபாய் நாட்டவர் அதிலிருந்து விடுபட்டு தங்களின் படிப்பையும் முடித்து அரசிடமிரந்து சான்றிதழ்களை பெறுவதையும்தான் நாம் மேலே பார்க்கிறோம்.

தகவல் உதவி
கல்ஃப் நியூஸ்
13-09-2015

போதை மருந்துக்கு அடிமையான ஒரு துபாய் வாசியின் வாக்கு மூலம்

“I tried to kill myself when I was 18, but failed. Then I tried again at 22, but failed again. My last attempt was at 25. I tried hanging myself, cutting my veins and burning myself — all because I was high and depressed,” Salman (full name withheld upon request) told Gulf News.

மதுவினால் நமது தமிழகம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலான கூலி தொழிலாளிகள் தங்கள் வருமானத்தில் பெரும்பாலானவற்றை மதுவுக்கே அர்பணிக்கின்றனர். பள்ளி குழந்தைகள் கூட இன்று குடிக்கு அடிமையாகி உள்ளனர். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அரசு தனது அதிகாரிகளை மதுவின் விற்பனையை அதிகமாக்குங்கள் என்று அதிகாரத்தால் மிரட்டவும் செய்கிறது. தமிழகத்தின் வருங்காலத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது. இறைவன்தான் எனது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: –

“நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: –

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபிகள் அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: –

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

No comments: