Followers

Thursday, September 10, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 5

அரபு இலக்கணத்தில் 'குறில் உயிர்க் குறிகள்' எவ்வாறு எழுத்துக்களில் அமரும் என்று போன பாடங்களில் பார்தோம். இனி அரபு இலக்கணத்தில் 'நெடில் உயிர்க் குறிகள்' எவை என்பதை பார்போம்

أ - அலீஃப், و - வாவ், ي - யா ஆகிய இந்த மூன்று எழுத்துக்களும் அரபி மொழியில் 'நெடில் உயிர்க்குறி' களாக செயல்படும். அது எவ்வாறு என்பதை இனி பார்போம்.

1. அரபு எழுத்துக்குப் பின் 'ا' என்ற உயிர்க்குறி சேரும் போது எழுத்து நெடிலாக எப்படி மாறுகிறது என்று பாருங்கள்.

ب + ا = با ------------ ப + அ = பா

ج + ا = جا ---------- ஜ + அ = ஜா

ح + ا = حا ---------- ஹ + அ = ஹா

ن + ا = نا ----------- ன + அ = னா

د + ا = دا ------------ த + அ = தா

و + ا + وا ----------- வ + அ = வா

ك + ا = كا ----------- க + அ = கா

س + ا = سا --------- ஸ + அ = ஸா

2. அரபு எழுத்துக்குப் பின் 'و' என்ற நெடில் உயிர்க் குறி சேரும் போது அந்த எழுத்து எவ்வாறு உரு மாறுகிறது என்பதையும் இனி பார்போம்.

ب + و = بو ------------- போ - BO

ج + و = جو ------------- ஜோ

ح + و = حو ------------- ஹோ

ن + و = نو ------------- நோ

د + و = دو ------------- தோ - DOW

ك + و = كو ------------ கோ

س + و = سو ------------ ஸோ


அரபு எழுத்துக்குப் பின் 'و' வும் 'தம்மஹ்' குறியீடு அதாவது ஒரு சிறிய சுழி மேலே போடப்பட்டால் 'நெடில் ஊகாரமாக' மாறும்.

بوُ ---- பூ

جوُ ---- ஜூ

حوُ ---- ஹூ

نوُ ---- நூ

دوُ ---- தூ

كوُ ---- கூ

سوُ ---- ஸூ

இப்போது உச்சரிப்பு எவ்வாறு மாறுகிறது என்பதை விளங்கியிருப்பீர்கள்.

3. நெடில் உயிர்க் குறியான 'ي' என்ற எழுத்தும் கஸரவும் சேர்ந்து வந்தால் நெடில் ஈகாரம் உண்டாகும். அதன் உதாரணங்களைப் பார்போம்.

بيِ --------- பீ BEE

جيِ --------- ஜீ

نيِ --------- நீ

كيِ --------- கீ

سيِ --------- ஸீ

இது வரை நாம் படித்ததை ஒன்றுக்கு மூன்று தடவை தொடர்ந்து எழுதி பழகி வருவோம். இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்......








No comments: