Followers

Sunday, September 27, 2015

ஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி!சவுதி அரேபியா மாகாணம் யான்பூவில் மெகானிகல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் நியாசுல் ஹக் மன்சூரி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு யான்பூவில் வசித்து வந்தவர். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஹஜ்ஜில் வரும் வெளிநாட்டவருக்கு உதவி செய்வதில் முன்னணியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான India Fraternity Forum (IFF) ல் அங்கத்தினராக மினாவுக்கு வந்தார். 950 பேர் இவ்வாறு தொண்டு செய்ய வந்திருந்தனர். மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். ஆனால் தனது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நெரிசலில் சிக்கி இறந்துள்ளார் மன்சூரி.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

இவரது தாயும் தந்தையும் இந்த வருட ஹஜ்ஜூக்கு வந்துள்ளார்களாம். அவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் அவர்கள் எங்கு தவித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இறைவன் இவரது தாய் தந்தையரை நலமுடன் இருப்பிடத்தில் சேர்ப்பிப்பானாக!

மன்சூரி செய்த இந்த செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். நன்மையை நாடி ஒரு செயலை செய்து அதில் இன்று உயிர் பிரிந்துள்ளது. மன்சூரியின் பாவங்களை இறைவன் மன்னித்து சுவனபதியில் சேர்ப்பானாக! இவரது தாய் தந்தையர் நலமுடன் தங்களின் இருப்பிடத்தை அடைவார்களாக! சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் பல லட்சம் ஹாஜிகளுக்கு இறைவன் நன்மையை வாரி வழங்குவானாக!

தகவல் உதவி
சவுதிகெஜட்
27-09-2015

4 comments:

Anonymous said...

ஒரு நொடியில் உலகை உருவாக்கியவனுக்கு இதை தடுக்க முடியவில்லையே ஏன்?

முஹம்மத் அலி ஜின்னா said...

“இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல்” மனது வைத்தால், அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக்கொள்ள முடியும்:

அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியரும் 60 லட்சம் பாக்கிஸ்தானியரும் வேலை செய்ன்றனர். இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியரும் பாக்கிஸ்தானியரும் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

ஆக இந்தியரும் பாக்கிஸ்தானியும் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. ஏமனுக்கெதிராக சவூதியும் மற்ற அரபுநாடுகளும் போர் அறிவித்தன. பாக்கிஸ்தான் போர் செய்வான், நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம் என மனப்பால் குடித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ராணுவம் “எங்களுக்கும் ஏமனுக்கும் எந்த பிரச்னையுமில்லை. ஆகையால் நாங்கள் ஏமனுக்கெதிராக போர் செய்ய மாட்டோம். உனது போரை நீயே செய்” என அறிவித்து விலகிவிட்டது. இதனை ஈரான் அரசாங்கமும் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றது.

இந்த சூழ்நிலையில், பாக்கிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்றுத்தருவோமென ஒரு முட்டாள் துபாய் ஷேக்கு அறிவித்தான். அவசர அவசரமாக மோடியை அபுதாபிக்கு அழைத்து ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயிலிருந்து மோடி மூலம் பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான். அன்று முதல், அரேபியாவில் வாழும் இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் “அடத்தூ !!. இவனெல்லாம் ஒரு முஸ்லிமா. காபிரை விட மோசம். இவன் இனிமேல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன” என சொல்லி அரபிகளை விட்டு விலகிவிட்டனர். அதாவது, யாராவது அரபு நாடுகளை உதைத்தால், இனி இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்.

இது இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. இரண்டு நாடுகளும் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து, மோடியும் நவாஸ் ஷெரீப்பும் இணைந்து “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என அறிவிக்க வேண்டும்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியமூன்று நாடுகளும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

முட்டாள் அரபியால் என்ன புடுங்கமுடியும்?.

Dr.Anburaj said...


என்ன முகம்மது அலி சுன்னா ? என்ன ஒரு மாதிாியாக எழுதி விட்டீர்கள்.அரேபிய மயக்கம் தெளிந்து விட்டதா ? சவுதிகாரன் பண்ணும் வம்படிகள் கண்டு உள்ளம் கொதிக்கின்றதா ? சவுதிகாரன் ஒரு காட்டறபி. ? மன்னா் குடும்பது ஒரு பெரும் கூட்டம் அரசு வருமானத்தை தின்று கொளுத்துப் போய் அட்டுழியம் செய்து கொண்டிருக்கின்றது.
ஷியா முஸ்லீம்களை கொன்று குவிக்க எதையும் செய்யும் வாகாபிய சவுதி அரசு.
இஸ்லாமிய இயக்கத்திற்கு புனிதம் கௌரவம் சோ்ப்பது தா்க்காகளில் அடங்கி இருக்கும் வெ வாழ்க்கை வாழ்ந்த பொியோா்கள்தாம். அரேபிய முகம்மது அல்ல.முகம்மதுவை மறப்பது நல்லது.

முஹம்மத் அலி ஜின்னா said...

// என்ன முகம்மது அலி சுன்னா ? என்ன ஒரு மாதிாியாக எழுதி விட்டீர்கள்.அரேபிய மயக்கம் தெளிந்து விட்டதா ? //
------------

எங்களைப் பொருத்தவரை "அல்லாஹ், திருக்குரான், பெருமானார்(ஸல்)", ஆகிய மூன்றில் நீ சொதப்பினால், உன் மீது ஜிஹாத் செய்துவிடுவோம்.

மற்றபடி எங்களுக்கு அரபி என்ன மாமனா மச்சானா?. அவனுக்கும் எங்களுக்கும் என்ன உறவு?. ஒரு தினார் குறைவாக கொடுத்தால், ஹஜ் செய்ய அனுமதிப்பானா சவூதி?.
---------

அரேபியாவில் வாழும் 80 லட்சம் ஹிந்துக்கள் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும். “பாதி அரேபியாவை ஹிந்துக்களுக்கு தனி மாகாணாமாக தராவிட்டால், நீ மீண்டும் ஓட்டகம் மேய்க்க வேண்டியதுதான்” என மிரட்டினால், அரபி பொத்திக்கொண்டு தந்துவிடுவான்.

அப்புறம் உங்களுடை ஹிந்து மாகாணத்தில், எத்துனை கோயில்கள் வேண்டுமானாலும் நீங்கள் கட்டலாம். பிரச்னையென்ன?.

மெக்காவை பாக்கிஸ்தானுக்கு கொடுத்துவிட்டு மீதி அரேபியா அனைத்தையும் ஹிந்துக்கள் எடுத்துக் கொண்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.