
சில ஆண்டுகளுக்கு முன் யுவன் இஸ்லாத்தை ஏற்ற போது அவரது குடும்பத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டதாக ஊடகங்கள் திரித்துக் கூறின. இளையராஜாவுக்கும் யுவனுக்கும் இதனால் பெரும் சண்டையே மூண்டதாக கற்பனை கதைகளை அள்ளி விட்டனர். இந்து மதத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட இளையராஜாவால் இதனை தாங்கிக் கொள்ள முடியாதுதான். அன்றைய அரபுலகிலும் இதே போன்ற பிரச்னைகள் வெடித்தது. ஒரே குடும்பத்தில் தந்தை இஸ்லாத்திலும் மகன் சிலை வணக்கத்திலும் இருந்த வரலாறுகள் நெடுக உண்டு.
இங்கு இளையராஜா முதலில் சிறிது எதிர்ப்பை தெரிவித்தாலும் தனது மகனின் முடிவை பின்னர் அங்கீகரித்துக் கொண்டார். தனக்கு சங்கராச்சாரியாரிடம் கிடைக்காத சமத்துவம் தனது மகனுக்கு இஸ்லாத்தில் கிடைத்துள்ளதே என்று தற்போது எண்ணி இன்புறுவார். பல இரவுகள் தூக்கமின்றி தவித்த தனது மகனுக்கு இன்று இஸ்லாத்தால் புது வாழ்வு கிடைத்துள்ளதே என்று எண்ணி உவகையுறுவார். ஜபருன்னிஷா என்ற இஸ்லாமிய மருமகளை பெற்றதன் மூலம் உலக இஸ்லாமிய குழுமத்தில் இளையராஜாவும் அவரையறியாமல் புகுந்துள்ளார். அண்ணன் கார்த்திக்கையும், தங்கை பவதாரிணியையும், தந்தை இளையராஜாவையும் தனது அழகிய இஸ்லாமிய நடவடிக்கைகளால் கவர்ந்து அவர்களையும் இந்த சத்திய இஸ்லாத்தில் யுவன் இணைப்பாராக! நாமும் அந்த குடும்பம் நேரான வழியை தேர்ந்தெடுக்க வாழ்த்துவோம்.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் திருமந்த்ரத்தின்படி வாழ்வை அமைத்துக் கொள்ள இளையராஜாவுக்கும் அழைப்பு விடுப்போம்.
No comments:
Post a Comment