Followers

Friday, September 25, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 12

அரபு மொழியில் ஒரு எழுத்தானது முதலிலும் இடையிலும் கடைசியிலும் எவ்வாறு உரு மாறும் என்பதை உதாரணத்தோடு இந்த பாடத்தில் பார்க்கலாம்....

ا

أبٌ ---------- அபுன் - அப்பா

ناَدِرٌ ------- நாதிருன் - அரிதான

ماَءٌ -------- மாஉன் - தண்ணீர்

---------------------------------

ب

باَسِمٌ --------- பாஸிமுன் - புன்னகை

كَبِيرٌ --------- கபீருன் - பெரிய

طَالِبٌ --------- தாலிபுன் - மாணவன்

-------------------------------

ت

تِجَارَةٌ ------------ திஜாரதுன் - வாணிகம்

كَتَبَ ----------- கதப - எழுதினான்

بَيْتٌ -------------- பைதுன் - வீடு

---------------------------

ث

ثَمَرٌ ------------ தமருன் - பேரித்தம் பழம்

كَثِيْفٌ ------------ கதீஃபுன் - தடித்த

حَرَثَ ------------- ஹரத - உழுதான்

-----------------------------

ج

جَلَسَ ---------- ஜலஸ - அமர்ந்தான்

حُجْرَةٌ --------- ஹூஜ்ரதுன் - அறை

نَاضِجٌ --------- நாதிஜூன் - பழுத்த

----------------------------

ح

حُلْوٌ ------------- ஹூல்வுன் - இனிப்பு

بَحْرٌ ------------- பஹ்ருன் - கடல்

مِلْحٌ ------------ மில்ஹூன் - உப்பு

---------------------------

خ

خَرِيْطَةٌ ----------- ஹரீததுன் - தேசப்படம்

مُخْلِصٌ ----------- முஹ்லிஸூன் - நேர்மையான

شَيْخٌ -------------- ஸைஹூன் - வயோதிகன்

-------------------------

د

دَرْسٌ -------------- தர்ஸூன் - பாடம்

مَادَّةٌ --------------- மாத்ததுன் - விஷயம்

هِنْدْ --------------- ஹிந்த் - இந்தியா

------------------------

ذ

ذَهَبَ ----------------- தஹப - சென்றான்

كِّذْبٌ ----------------- கித்புன் - பொய்

فَوْلاَّذْ ---------------- ஃபவ்லாதுன் - எஃகு

------------------------

ر

رَجُلٌ ----------- ரஜூலுன் - ஆண்

بَارِدٌ ---------- பாரிதுன் - குளிர்ச்சி

كَبِيْرٌ --------- கபீருன் - பெரிய

-----------------------

ز

زَهَرٌ --------- ஜஹ்ருன் - மலர்

وَزِيْرٌ ------- வஜீருன் - அமைச்சர்

خُبْزٌ -------- ஹூப்சுன் - ரொட்டி

------------------------

س

سُوْقٌ -------- ஸூக்குன் - கடைவீதி

اَسْوَدٌ ------- அஸ்வதுன் - கருப்பு

رَئِيْسٌ ------- ரஈஸூன் - தலைவர்

--------------------------

ش

شَمْسٌ --------- ஷம்ஸூன் - சூரியன்

كَشْكُولْ ------ கஸ்கோல் - குறிப்பேடு

حَشِيْشٌ ------- ஹஷீஷூன் - புல்

---------------------------

ص

صَدِيْقٌ ---------- ஸதீகுன் - நண்பன்

قَصِيْرٌ ---------- கஸீருன் - குட்டையான

مُخْلِصٌ ---------- முஹ்லிஸூன் - நேர்மையான

---------------------------

ض

ضَوْءٌ ---------- தவ்வுன் - வெளிச்சம்

حَاضِرٌ --------- ஹாதிருன் - வந்துள்ள

مَرِيْضٌ --------- மரீதுன் - நோயாளி

எழுத்துக்கள் முதல் இடை கடையில் எவ்வாறு அதன் உருவம் மாறுகிறது என்பதை பார்தோம். மாறும் எழுத்துக்களை பல முறை எழுதி பழகி வாருங்கள். மீதம் உள்ள எழுத்துக்களை அடுத்த பாடத்தில் பார்போம் இறைவன் நாடினால்.


No comments: