Followers

Tuesday, September 15, 2015

ஏ ஆர் ரஹ்மான் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார்!இந்த கடிதமானது என்னைப் பற்றி சமீபத்தில் வெளியான ஃபத்வாவைப் பற்றியது.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இறைவன் நமக்கும் நபிகள் நாயகத்துக்கும் தனது அளப்பரிய கருணையைப் பொழிவானாக!

"ஒருபோதும் இறைவன் விதித்ததைத் தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று நபியே! நீர் கூறும்; நம்பிக்கையாளர்கள் இறைவனின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக

குர்ஆன் 9:51


'மெசஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு நன்னம்பிக்கையின் அடிப்படையில்தான் இசையமைத்தேன் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல


"முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்

ராஸா அமைப்பைச் சேர்ந்த நூரி என்பவர், 'இப்படியான படத்தை ஏன் தடுக்கவில்லை' என அல்லா, என்னிடம் கேட்டால் என்ன செய்வது?' என்று பேசியிருந்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் இதே மாதிரியான காரணத்துக்காகத்தான். மறுமையில் அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்தை ஒன்றிணைப்பது, தவறான புரிதல்களை சரிசெய்வது, அன்பைப் பற்றிய போதனைகளை, ஏழைகளின் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை பரப்புவது, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை விடுத்து மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வது?

இன்று நபிகள் நாயகம் குறித்த பல தவறான கருத்துக்களை இணையத்தில் காண முடிகிறது. சரியான புரிதல் இல்லாததால்தான் இந்த நிலை. இத்தகைய விஷயங்களை அன்பாலும் கனிவாலும் எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் சரியான விஷயங்களை கொண்டு சேர்த்து புரியவைக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் நினைத்திருந்தேன்.

மத சுதந்திரம் இருக்கும் இந்திய நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

பிரச்சினையை கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. மன்னிப்புக் கோருவோம், உலகில் துன்புறுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பை பிரதிபலிப்பது போலவே பிரார்த்தனை செய்வோம்"

வணங்கும் மக்களுக்கு இதில் இக்குர்ஆனில் நிச்சயமாகப் போதுமான வழிகாட்டுதல் இருக்கிறது.

குர்ஆன் 21:107


என்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது முக நூல் பக்கத்தில் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

----------------------------------------------------

ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்த நூரி காதிரியிடம் சில கேள்விகளை நானும் முன் வைக்கிறேன்.


நூரி அவர்களே,

1) நபிகள் நாயகம் அவர்களுக்கே கொடுக்க கூடாத வழிபாட்டு முறையை தர்காகளில் இறைநேசர்கள் என்று கூறி அவர்களுக்கு ஏன் கொடுத்தீர்கள், அதை ஏன் தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

2) பெண்ணுக்கு மஹர் கொடுக்காமல் மணமகன் வரதட்சனை வாங்கும், திருமணத்தை ஏன் முன் நின்று நடத்தி வைத்தீர்கள் என்று அல்லாஹ் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

3) தலாக்குக்கு குர்ஆனில் அல்லாஹ் சொல்லியதற்கு மாற்றாக கூறப்படும் முத்தாலக்கை ஏன் தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படி எத்தனையோ கேள்விகள் நம்மை நோக்கி மறுமையில் வர இருக்கிறது. எனவே இந்த கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருக்கிறதா எனபதை சிந்தித்து பாருங்கள்.

1 comment:

முஹம்மத் அலி ஜின்னா said...

// மேலும், காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் சரியான விஷயங்களை கொண்டு சேர்த்து புரியவைக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் நினைத்திருந்தேன். //
--------------

எண்ணங்களையும் உள்ளங்களையும் அல்லாஹ் நன்கறிவான் என திருக்குரான் உரைக்கிறது.

திருக்குரானுக்கு எதிரான கருத்தை ஈரான் சென்சார் போர்டு என்றைக்கும் அனுமதிக்காது என அடித்துச்சொல்லலாம். பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை உலக மக்களுக்கு எடுத்துச்சொல்ல மீடியாவை விட சிறந்த சாதனமில்லை. சகோதாரர் ஏ.ஆர்.ரஹ்மானின் உழைப்பு வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக.