Followers

Thursday, September 03, 2015

பார்பனர்களும் இஸ்லாத்தை தழுவப் போகிறார்களாம்!பார்பனர்களும் இஸ்லாத்தை தழுவப் போகிறார்களாம்!

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்திலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கஸ்தூரிபா வித்யாலயாவில் பகுதி நேர ஆசிரியர்களாக சமஸ்கிரத ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த பணியில் 99 சதவீதம் பார்பனர்களே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக முன்பு 7200 அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிதி நிலையை காரணம் காட்டி அரசானது 5000 மாத ஊதியமாக கொடுக்கிறது.

இது பற்றி பகுதி நேர சமஸ்கிரத ஆசிரிய சம்மேளனத்தைச் சேர்ந்த தீபக் துபே கூறுகிறார் 'வெங்காய விலையிலிருந்து விலைவாசி அனைத்தும் விஷம் போல் ஏறியுள்ளது. ஆனால் அரசோ 7500 லிருந்து தற்போது 5000 மாக மாத சம்பளத்தை குறைத்துள்ளது. செப்டம்பர் 14 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டம் நடத்தவுள்ளோம். 3000 பகுதி நேர ஆசிரியர்கள் 746 சென்டர்களில் பணிபுரிபவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால் ஒட்டு மொத்தமாக அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானித்துள்ளோம்' இந்த காலத்தில் 5000 என்பது மிக சொற்ப சம்பளமே. அரசு இவர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.


தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் முன்பு இஸ்லாத்தை நோக்கி வந்தனர். தற்போது பார்பனர்களின் கவனமும் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 'நான் தலையில் பிறந்தேன்: நீ காலில் பிறந்தாய்: நான் பிராமணன்: நீ சூத்திரன். நீ தொட்டால் தீட்டு' என்றெல்லாம் இந்த காலத்திலும் சொல்லிக் கொண்டிருக்காமல் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற பரந்த மனப்பான்மைக்கு பிராமணர்களும் வந்தால் அவர்களையும் வரவேற்க இஸ்லாம் காத்துக் கொண்டுள்ளது.

அன்றைய அரபுலகில் குறைஷிகளும் நம் ஊர் பார்பனர்களைப் போல் பிறப்பின் பெருமையை பேசித் திரிந்தார்கள். மக்களை அடிமைகளாக நடத்தினர். ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் சந்தைகளில் விற்கப்பட்டனர். இது அனைத்தையும் உடைத்தெறிந்தது இஸ்லாம். இறைவன் நாடினால் அதே நிலையை நமது தமிழகத்திலும் பார்க்கலாம்.

தகவல் உதவி:
டைம்ஸ் ஆஃப் இந்தியா
03-09-2015

4 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

இது மிகவும் வரவேற்கத்தக்கது. இட ஒதுக்கீடு தராவிட்டால் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறிவிடுவோமென 1932ல் பூனாவில் காந்தியை மிரட்டி தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கினார் அம்பேத்கர். இட ஒதுக்கீட்டுக்கு பகிரமாக இஸ்லாத்துக்கு மாறமாட்டேன் என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.

இப்பொழுது பார்ப்பனரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவோமென மிரட்டி பார்ப்பன பாஜக அரசாங்காத்தை மண்டியிட வைக்கின்றனர். இவர்களுடைய மிரட்டல் வெற்றி பெற்றால், இது ஒரு பெரிய அலாவுதீன் பூதமாக விஸ்வரூபமெடுக்கும். வேலையில்லா இளைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் முதல் ஜாதித்தலைவர்கள் வரை இஸ்லாத்துக்கு மாறிவிடுவோமென மிரட்ட ஆரம்பித்துவிடுவர். அரசாங்கம் செயலிலழந்துவிடும். மோடி ராஜினாமா செய்யும் நிலைக்கு வந்துவிடுவார். இஸ்லாத்தை கூட்டங்கூட்டமாக ஹிந்து சகோதரர்கள் தழுவுவர்.

இன்ஷா அல்லாஹ், இந்தியா இஸ்லாமிஸ்தானாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

முஹம்மத் அலி ஜின்னா said...

// தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் முன்பு இஸ்லாத்தை நோக்கி வந்தனர். தற்போது பார்பனர்களின் கவனமும் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. //
-----------------

ப்ராஹ்மணர்கள்தான் இஸ்லாத்தை முதன்முதலில் இந்திய துணைக்கண்டத்தில் தழுவினர்.இன்றூ "இந்தியா-பாக்கிஸ்தான் காஷ்மீரில்" வாழும் இரண்டு கோடி முஸ்லிம்களும் ஒரு காலத்தில் பார்ப்பண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது கண்கூடு. அப்சல் குருவின் மூதாதையர் பார்ப்பண பண்டிதர்.

1400 வருடங்களூக்கு முன்பு "பாக்கிஸ்தான் காஷ்மீர் ஆப்கான்" நிலப்பரப்பு பார்ப்பனரின் ஆர்யவர்த்தா தேசமாக இருந்தது. மெக்கா பார்ப்பனர் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியதும், ஆர்யவர்த்தாவும் இஸ்லாத்தை தழுவியது. இன்றும் பாக்கிஸ்தானில் பட், புட்டோ, ராவ், சவ்த்ரி, கார் போன்ற பிராஹ்மண குலப்பெயர்கள் சர்வசாதாரணம்.

ஆகையால்தான் தமிழ்நாட்டில் பிறந்த பாரதி "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என பாடினார்.

ashick ilahi said...

எனக்கு இந்த செய்தி விளங்கவே இல்லை😞

Dr.Anburaj said...

திரு.ஆஷிக் அறிவுள்ள உங்களுக்கு முட்டாள்களின் பேச்சும் செயலும் விளங்காதுதான். முஸ்லீம்களாக மாறிவிடுவோம் என்று யாரும் பேரம் பேச இது என்ன கடைச்சரக்கா ? மாறிவிட்டுத்தான் போகட்டுமே? மனஉறுதி குன்்றிய பேதைகள் இந்து சமூகத்திற்கு தேவையில்லை. ஒழிந்து போவதுதான் நல்லது.