

உத்தர பிரதேசத்தில் உள்ளது தாத்ரி நகர். இங்குள்ள பிஷாரா கிராமத்தில் வசித்து வருகிறார் முஹம்மது அஹ்லாக். இவர் தனது வீட்டில் மாட்டுக் கறியை சேமித்து வைத்து சாப்பிட்டார் என்று ஊர் முழுக்க வதந்தியை பரப்பிய இந்துத்வா கும்பல் 50 வயது மதிக்கத்தக்க முஹம்மது அஹ்லாக்கை அடித்தே கொன்றுள்ளது. ஹஜ்ஜூப் பெருநாளன்று கிடைக்கும் கறியை சேமித்து வைத்து ஒரு வாரம் வரை கூட சாப்பிடுவது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வு. இதனை ஒரு பிரச்னையாக்கி இன்று அதனை கொலை வரை கொண்டு சென்றுள்ளது இந்துத்வா. 22 வயதான அவருடைய மகனையும் தாக்கியுள்ளனர் காட்டு மிராண்டிகள். மிக அபாயகரமான சூழலை நோக்கி நமது இந்தியா சென்று கொண்டுள்ளது என்பதனையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
30-09-2015
No comments:
Post a Comment