Followers

Monday, September 14, 2015

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:

5 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

// சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! //
----------------

இது ஹிந்து தேசம். நீ முஸ்லிமா இந்த நாட்டில் பொறந்ததே தப்பு. உனக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் கிடையாது. போ பாக்கிஸ்தானுக்கு என சொன்னால் என்ன செய்வது?

முஹம்மத் அலி ஜின்னா said...

// நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள். //
-------------------

யாருக்கு என்ன தீங்கு செய்தார் நபிகள் நாயகம்(ஸல்)?. காபிர்கள் ஏன் அவரை கொல்ல முடிவுசெய்தனர்?. எதற்காக பெருமானார்(ஸல்) தனது தாய்மண் மெக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்?.

முஹம்மத் அலி ஜின்னா said...

// சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்: //
-----------------

எனது ப்ராஹ்மின் நன்பர் சொல்கிறார்:

உனது இஸ்லாம் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க.

ஹிந்துக்களை காபிர்கள் என அறிவிக்கிறது திருக்குரான்.

“காபிர் மீது ஜிஹாத் செய்” என திருக்குரான் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.

ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவு படுத்தி, பாக்கிஸ்தான் எனும் நாடு உருவானதற்கு காரணம் திருக்குரான்.

பாரதமாதா மீது ஜிஹாத் நடப்பதற்கு காரணம் திருக்குரான்.

ஹிந்து ராஷ்டிரத்தை ஹிந்துக்கள் இன்று வரை உருவாக்க முடியாமல் போனதற்கு காரணம் திருக்குரான்.

எங்களுடைய ஹிந்து நாட்டில் முஸ்லிம்கள் எத்துனை பள்ளிவாசல்கள் வேண்டுமானாலும் கட்டலாம், எத்துனை ஹிந்துக்களை வேண்டுமானாலும் மதம்மாற்றலாம், ஐவேளையும் பள்ளிவாசலில் “அல்லாஹு அக்பரென்று” லவுட் ஸ்பீக்கர் வைத்து தொழுகை அழைப்பு தரலாம். திருக்குரானை ஹிந்துக்களுக்கு கொடுத்து “சகோதரா, கண்டதையும் வணங்குகிறாயே உனக்கு அறிவிருக்கா?. இஸ்லாத்தை தழுவு” என மதப்பிரச்சாரம் செய்யலாம். தேவைப்பட்டால் இன்னொரு பாக்கிஸ்தானை கூட உருவாக்கலாம்.

ஆனால் சவூதியில் வாழும் 17 லட்சம் ஹிந்துக்களுக்கு வழிபாடு செய்ய ஒரு சிவன் கோயில் கூட கட்டமுடியாது !!. சவூதியில் பகவத் கீதையை வெளியே காட்டினால், எங்களுடைய கையை வெட்டிவிடுவர். வேத மந்திரத்தை தெருவில் உச்சரித்தால், எங்களுடைய நாக்கை அறுத்துவிடுவர். ஹிந்துமதத்துக்கு யாராவது ஒரு முசல்மானை அழைத்தால், பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து எங்களுடைய தலையை உருட்டிவிடுவர். இது நியாயமா?.
--------------

உங்களுக்கு 55 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. எங்களுக்கிருப்பதோ ஒரே ஒரு ஹிந்து நாடு. முஸ்லிம்கள் இருக்கும் வரை எங்களால் நிம்மதியாக வாழமுடியாது. தயவுசெய்து உங்களுடைய முஸ்லிம் நாட்டில் போய் நல்ல முஸ்லிமாக வாழுங்கள். வெளியேறுங்கள்.

Dr.Anburaj said...

..................பாக்கிஸ்தானுக்கு என சொன்னால் என்ன செய்வது?

அப்படி யாரும் சொல்லவில்லை.மிக .... மிக சொற்ப எண்ணிக்கையில் சில அதைவேக்காடுகள் சொல்வதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க அவசியம் இல்லை.
அதற்கு பதில் பயங்கரவாத செயல்களைதடுத்து நிறுத்த ஆவன செய்யுங்கள்.பாக்கிஸ்தானில்பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் சா்வதேச முஸ்லீம் மாநாடுகளில் இந்திய முஸ“லீம்கள் தங்களது கண்டனங்களைத் தொிவிக்க வேண்டும். ஔரங்கசீப் போன்ற மன்னா்களின் ஆட்சியை நினைத்துக் கொண்டு தாங்கள் உயா்ந்தவா்கள் இந்துக்கள் அடிமைகள் காபீா்கள் என்று மனம்புளுங்கி முன்னேற முயலாமல் பிறரை குற்றம் சொல்லி வாழும் போககை நிறுத்த முயலுங்கள். இந்தியா சமதா்மபுமி.அனைத்து சட்டங்களும் பொதுவாக உ்ளளது.முஸ்லீம்களுக்குள்ள பிரச்சனை அனைவருக்கும் உள்ளது.
சுவப்பிாியன் தங்களால் இப்படியும் எழுத முடியுமா ???????????????இந்துக்ள் காபீா்கள்தானே! வேறு என்ன எழுத முடியும் என்ற நிலையில் தாங்கள்
சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! // என்று எழுதியிருப்பது எனக்கு ஆச்சாியத்தைத தந்தது.
” நடமாடும் கோவில் நம்மவருக்கு ”சகமனிதனை- இந்துவோ கிறிஸ்தவனோ முஸ்லீமோ வேறு எந்த பிாிவைப் சாா்ந்தவராக இருந்தாலு்ம் - நடமாடும் கோவில் என்று சொல்லும் திருமந்திர கருத்து இந்த இடத்தில் நினைத்துப் பாா்க்கத்தக்கது.

பாராட்டுக்கள்.நன்றி.நீடுழி வாழ்க! வாழ்க வளமுடன்!
வாழ்க அரேபிய அடிமைத்தனம் நீங்கி!

Dr.Anburaj said...

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை.

அண்டப்புளுகு ஆகாயப்புளுகு. இப்படிப்பட்ட இந்துக்கள் யாரும் இல்லை. காபீா்களளை கொல்ல டீவேண்டும். இந்துமதத்தை அழித்து இந்துக்களை கொல்ல ஹகாத் செய்ய வேண்டும் என்ற கொள்கை உள்ளவா்கள் ஒருவா் நிச்சயம் உள்ளாா். இவர்தான் முகம்மது அலி ஜின்னா