Followers

Sunday, September 13, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 7

தமிழின் மெய் எழுத்துக்களின் மேல் சிறு சுழி அல்லது புள்ளியிடுவதைப் போல க், ங், ச், ஞ், ட், ண் அரபியில் எழுத்துக்களின் மேல் புள்ளியிடுவதை சுக்குன் - Sukūn – سُكُون என்கிறோம். தமிழைப் போலவே இதற்கும் அரை மாத்திரை அளவே உச்சரிப்பில் வரும்.




---------------------------------------------


இகர வரிசையில் உள்ள எழுத்துக்களை இகர நெடிலாக மாற்றுவதற்கு எழுத்துக்களுக்கு பின்னர் சுக்கூன் பெற்ற யா ي சேர்த்தால் அந்த எழுத்தை இகர நெடிலாக படிக்கவேண்டும் ஈ, பீ, தீ, சீ இதைப்போன்று.


اِيْ ஈ

بِيْ பீ

تِيْ தீ

ثِيْ சீ

جِيْ ஜீ

سِيْ ஸீ

رِيْ ரீ

زِيْ சீ

سِيْ ஸீ

شِيْ ஷீ

ضِيْ ழீ

தற்போது இகர நெடிலில் சுக்கூன் எவ்வாறு பயன்படுகிறது என்று விளங்கிக் கொண்டோம். அகரம், இகரம், உகரம் சுக்கூன், ஃபதஹ என்ற இலக்கண வார்த்தைகள் உங்களுக்கு புரிவதில் சிரமம் ஏற்பட்டால் எழுத்துக்களை மட்டும் மனனம் செய்து கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டு முறை எழுதி பழகுங்கள். தானாகவே உங்களுக்கு மொழி புரிய ஆரம்பிக்கும்.

உகர வரிசையில் உள்ள எழுத்துக்களை உகர நெடிலாக மாற்றுவதற்கு எழுத்துக்களுக்குப் பின்னர் சுக்கூன் பெற்ற و என்ற எழுத்து வர வேண்டும். அதன் உதாரணங்களைப் பார்போம்.

اُوْ ஊ

بُوْ பூ

تُوْ தூ

ثُوْ சூ

جُو ஜூ

حُوْ ஹூ

دُوْ தூ

رُوْ ரூ

سُوْ சூ

شُوْ ஷூ

ظُوْ ழூ

இப்போது சுக்கூன் இங்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளங்கிக் கொண்டோம். சொல்லப்பட்ட பாடங்களை தொடர்ந்து எழுதியும் படித்தும் வாருங்கள். விளங்காத சில இடங்களை நண்பர்களிடம் கேட்டு விளங்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.





No comments: