Followers

Tuesday, September 15, 2015

குர்ஆனை வியந்து போற்றிய இந்தி நடிகர் நானா படேகர்!



மகாராஷ்ட்ராவில் வறுமையினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த விவசாயிகளுக்கு உதவும் முகமாக மகாராஷ்ட்ராவில் உள்ள மராத்வாடா மாவட்டத்தில் லாட்டூர் மற்றும் உஸ்மானாபாத்தில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த உதவியை இந்தி குணசித்திர நடிகர் நானா படேகர் தனது சொந்த செலவில் வழங்குகிறார். சென்ற ஆகஸ்ட் 10 ந் தேதி 62 ஏழை விவசாயிகளுக்கு தலா 15000 வீதம் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 113 ஏழை விவசாயிகளுக்கு தலா 15000 ரூபாயை நன்கொடையாக அளித்தார் நானா படேகர்..

அந்த விழாவில் அவர் பேசும் போது ....

'விவசாயிகளே! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்! வாழ்க்கையில் போராட பழகிக் கொள்ளுங்கள். இஸ்லாமிய விவசாயிகளையும் பாருங்கள். அவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஏனெனில் புனித குர்ஆன் தற்கொலை செய்து கொள்வதை பாவம் என்று அவர்களுக்கு போதிக்கிறது. இந்த அறிவுரையானது எனது மனதை மிகவும் தொட்ட ஒன்று.

சரத் பவார், நாராயண் ரானே போன்ற தலைவர்கள் அரசியல் பாகுபாடுகளை தூரமாக்கி ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க முன் வருவார்களாக! அவர்களின் விளைந்த பொருட்களின் விலையை ஸ்திரப்படுத்த முயற்சிக்க வேண்டும்' என்று தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

தகவல் உதவி
பிஸினஸ் ஸ்டேண்டர்ட்
06-09-2015

எதற்கெடுத்தலும் குர்ஆனையே பிடித்து ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு நானே படேகரின் இந்த விளக்கம் சிறந்த பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குர்ஆனின் மகிமையை அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழும் முஸ்லிம்கள் நன்கு உணர்ந்ததாலேயே அதனை இந்த அளவு மதிக்கின்றனர். குர்ஆனின் அருமையும் பெருமையும் அதனை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

On the percentage of suicide of Muslim farmers being negligible, Patekar said, "This is because Holy Quran terms suicide as a sin and the betrayal of God's will. This teaching of Quran touches my heart," the actor added.


http://www.business-standard.com/article/pti-stories/nana-patekar-gives-aid-to-kin-of-farmers-who-committed-suicide-115090600617_1.html

3 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

ஹுபால் சிலை மீது சத்தியம் செய்து "முஹம்மதின் தலையை கொய்து வருகிறேன்" என உருவிய வாளுடன் கிளம்பிய மாவீரர் கலிபா உமர் அவர்கள் செல்லும் வழியில் திருக்குரான் வசனங்களை கேட்டு கண்ணீர் வழிந்தோட உடல் நடுநடுங்க பெருமானாரின்(ஸல்) கைகளைப்பற்றி இஸ்லாத்தை தழுவினார்.

இந்தியாவிலும் ஹிந்து சகோதரர்கள், நமது முன்னோர் தழுவியது போல் ஒரு நாள் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவுவர், இன்ஷா அல்லாஹ்.

Dr.Anburaj said...


அவர் ஒரு கிணற்றுத்தவளை.இந்து மதம் போதிக்கும் அன்புள்ளம் கொண்டவா். புத்தனின் போதனைகள் இரத்தத்தில் ஊறியுள்ளது. வாழ்க வளமுட்ன்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// புத்தனின் போதனைகள் இரத்தத்தில் ஊறியுள்ளது.//
---------------

அதாவது புத்தனின் போதனைகளை புரிந்து கொண்டவன் திருக்குரான் போதிக்கும் சத்தியப்பாதைக்கு வந்துவிடுவான் என்கிறாய். சரிதான்.