
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் நிகாரா ஜூம்ஆ பள்ளியில் இன்று தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞன் முன்னேறி சென்று இமாமை தொழ வைப்பதிலிருந்து தடுக்க முயற்சித்துள்ளான். இமாம் அவனை சட்டை செய்யாது தொழுகையை தொடரவே கோபமுற்ற அந்த இளைஞன் வேகமாக இமாமை அறைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடன் ஓடி வந்து அந்த இளைஞனை அப்புறப்படுத்தி காவல் துறை வசம் ஒப்படைத்தனர். பிறகு தொழுகை தொடர்ந்து நடந்து முடிந்தது.
ஷபீர் அஹமது கான் என்ற அந்த காஷ்மீர இளைஞன் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவனாக தெரிவதாக போலீஸார் கூறுகின்றனர். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுகிறானாம். அவனிடம் தங்குவதற்கான ஒழுங்கான எந்த ஆவணங்களும் இல்லை.
இவன் யார்? இவன் உண்மையில் மன நலம் பாதிக்கப்பட்டவனா? அல்லது இஸ்லாமிய எதிரிகள் ஏதேனும் சதி செயலை நிறைவேற்ற இவனை அனுப்பியுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏனெனில் சமீப காலமாக மேற்குலகின் பார்வை மலேசியாவின் மேல் விழுந்துள்ளது. விமானங்களை மறைய வைத்து மலேசியன் ஏர்லைன்ஸை நட்டத்திற்கு உள்ளாக்கினர். மேற்குலகுக்கு அடிபணியாது மலேசிய ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்வதால் அதனை எப்படியாவது சீர்குலைக்க எதிரிகள் மயற்சித்த வண்ணமே உள்ளனர். எதிரிகள் யார் என்பது நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும் :-)
1 comment:
நடந்த தவறுக்கு காஷ்மீரத்து இளைஞனே முழு பொறுப்பு. மதவெறியை வளா்நத்து வெறுப்பை வளா்த்தால் மனேவியாதியஸதா்கள் தான் பெருகுவாா்கள். குண்டுவெடிப்பு வெட்டு குத்து என்று அரேபிய சமயவாதிகளின் முகாம் இரத்த வெள்ளத்தில் முழ்கி இருப்பதற்கு அதுதான் காரணம். இதில் மற்றவா்களுக்கு சம்பந்தம் இல்லை. தன் தவறுக்கு மற்றவா்களை பழி போடும் இழி குணம் இக்கட்டுரையில் காணக்கிடைக்கின்றது.தவறு. ஹராம்.ஏமாற்று வேலை.ஷா்க்.
Post a Comment