Followers

Monday, September 21, 2015

தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பற்றி இந்து பத்திரிக்கை புகழாரம்!



700 மருத்துவ முகாம்களை நடத்தி 10000 ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ பரிசோதனை களையும் மருந்துகளையும் பெற்றுச் செல்கின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பின்தங்கிய ஊரான மேலப் பாளையத்தில் 350 நபர்கள் தங்கள் கண்களை பரிசோதித்துக் கொண்டு மருத்துவ உதவிகளையும் பெற்றுச் செல்கிறார்கள். இது கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பெருநாளன்று திருநெல்வேலி டிஎன்டிஜே கிளை சார்பாக 15 டன் இறைச்சியை 15000 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர். மேலப் பாளையம், பாளையங்கோட்டை, ஏர்வாடி, அம்பா சமுத்திரம், பொட்டல் புதூர், கடைய நல்லூர், தென்காசி, புளியங்குடி, சங்கரன் கோவில், செங்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த இறைச்சியை வருடா வருடம் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பின்பற்றி வேறு சில அமைப்புகளும் தற்போது மருத்துவ முகாம்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

தகவல் உதவி
தி ஹிந்து நாளிதழ்
15-09-2014

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வைத்து நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிகளை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முதல் வேன்.. 19-09-2015



அரசியலில் ஓட்டுக்காக எவரிடம் இந்த அமைப்பு செல்வதில்லை. அரசு அதிகாரங்கள் எதுவும் இந்த அமைப்பிடம் இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட பல லட்சம் இளைஞர் பட்டாளம் மட்டுமே இந்த அமைப்பின் சொத்து. மக்களின் நன்கொடைகளை வைத்தே ஒரு அரசாங்கத்தைப் போன்று இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வா அமைப்புகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் இருந்து பாடம் பயின்று கொள்ளட்டும். பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மத அமைப்பு எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தவ்ஹீத் ஜமாத்தை முன்னோடியாகக் கொண்டு இந்துத்வாவாதிகள் தங்களை திருத்திக் கொள்வார்களாக! மதுவிலும், மூடப் பழக்கத்திலும் சாதி வெறியிலும் சிக்கி சிதறிக் கிடக்கும் எனது சகோதர இந்து மக்களை இனியாவது அழிவின் பக்கம் கொண்டு செல்லாமல் ஆக்கபூர்வ பணிகளை இந்துத்வாவாதிகள் முன்னெடுப்பார்களாக!

2 comments:

Dr.Anburaj said...

இந்து பத்திாிகை எப்போதும் இந்து சமய அமைப்புகளுக்கு எதிரான கருத்தையே எழுதும்.
ஆகவே இந்து வின் கருத்தை பாிசீலனை செய்யத் தேவையில்லை. இந்து சமயத்தையும் சமூகத்தையும் மராமத்து செய்ய வேண்டியதுள்ளது என்பது உண்மை. திருமணமங்கள் கொடைவிழாக்கள் என்று நிறைய விரயங்கள் செய்கின்றாா்கள் என்பது உண்மை. அது தவறு என்ற கருத்தும் நிறை உள்ளது.மராமத்து பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்துக்கள் பொதுவான பெயாில் நற்பணிகளைச் செய்வாா்கள். முஸ்லீம்கள் தங்கள் சமூகத்திற்கு பெயா் புகழ் கிடைக்க வேண்டும் என்ற சமூகத்தின பெயாில் செய்கின்றாா்கள்..

Dr.Anburaj said...

அாிமா சங்கம் ரோட்டாி சங்கம் என்று நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கானன தொண்டு நிறுவனங்களை இந்துக்கள் நடத்திக்கொணடுதான் இருக்கின்றாா்கள். எதற்கு எடுத்தாலும் இந்துத்துவா வாதிகள் என்று எழுதுவது முட்டாள்தனமாக தோன்றுகிறது.