Followers

Saturday, January 23, 2016

மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை!







கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. ஏற்கெனவே, இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருத்துவர்கள் இல்லை என விழுப்புரம் ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் மனு அளித்தனர். சிலர் தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து உண்மை நிலை அறிய ஒரு குழுவை விழுப்புரம் ஆட்சியர் லட்சுமி அமைத்தார்.

கள்ளக்குறிச்சி கோட்டாச்சியர் மாலதி தலைமையிலான அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், ‘கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை’ என கூறி இருந்தார். இந்த நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளும் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு கிணற்றில் குதித்து நேற்று மாலை தற்கொலை செய்தனர். தகவலறிந்த சின்ன சேலம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை பற்றிய முழு தகவல்களும் உடனடியாக தெரியவில்லை. வெளி நபர்களின் பாலியல் தொந்தரவால் மாணவிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2016

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

1 comment:

Dr.Anburaj said...


துணிந்து எதிாத்து நின்று ஜெயிக்க வேண்டும்

போராடிக் ஜெயிக்க வேண்டும் சாதிக்க வேண்டும்

என்ற நினைப்பு இவர்களுக்கு என் இல்லை.

3 போ்கள் கூடடாக தற்கொலை செய்வது ஏன் ?

இதில் சாதியம் என் வந்தது.