Followers

Saturday, January 16, 2016

அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் !அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் :-)

20 வருடங்களுக்கு முன்பெல்லாம் எங்கள் வீட்டில் பெரிய அண்டாவில் கூழ் கிண்டுவார்கள். அப்பளம், படையான் போன்றவைகள் வீட்டிலேயே செய்வதற்காக காலை 5 மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் ஒன்றாக கூடி அப்பளம், படையான், கொத்தரவத்தல், மோர் மிளகாய் போன்றவைகளை இட வந்து விடுவார்கள். காலையிலேயே வீடு பெருநாள் போல ஜே ஜே என்று இருக்கும். வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் என்று அமர்க்களப்படும். சிறுவர் சிறுமிகளுக்கோ ஏக கொண்டாட்டம். எங்கள் வீட்டின் வாசல் பெரிதாகையால் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களும் எங்கள் வீட்டில்தான் அப்பளம் மற்றும் படையான்களை காய வைப்பார்கள். அதெல்லாம் ஒரு காலம்....

தற்போது எல்லாம் கடைகளில் பாக்கெட் போட்டு கிடைப்பதால் அப்பளம் மற்றும் படையான் போடும் பழக்கமும் நின்று விட்டது. சவுதியிலும் கடைகளில் அப்பளம் பல டிசைன்களில் கிடைக்கிறது. அப்பளத்திற்கு சவுதிகள் வைத்துள்ள பெயர் 'ஹூப்ஸ் அல் ஹிந்த்' அதாவது 'இந்திய ரொட்டி' என்று பெயரிட்டுள்ளார்கள். :-) புரோட்டாவைப் போல வட்டமாக இருப்பதனால் இதனை ரொட்டி என்று நினைத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.

சாம்பார், ரசம், மீன் குழம்பு என்று எந்த குழம்புக்கும் தொட்டுக் கொள்ள இந்த அப்பளமானது ஏற்றதாக மாறி விடும். பாகிஸ்தானிகள் இதே அப்பளத்தை சற்று டிசைன் மாற்றி செய்கிறார்கள். கேரளாவில் அப்பளம் பிரியாணிக்கும் இருக்கும். எப்படியோ இந்தியர்களின் உணவு பழக்கத்தில் என்றுமே இடம் பிடித்த அப்பளத்தைப் பற்றியும் ஒரு பதிவு தேற்றியாகி விட்டது. :-)

4 comments:

Dr.Anburaj said...சவுதிகளில் பண்பாடு மிக்கவா்களுக்கு குறைவு ஒன்றும் இல்லை. ஆகவேதான் இந்துஸ்தானத்தில் இருந்து வரும் அப்பளத்திற்கு

ஹூப்ஸ் ” அல் ஹிந்த்'”

எனறு பெயா் வைத்துள்ளாா்கள். அல் ஹிந்த்'என்று படிக்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது. அல என்றால் உயா்ந்த சிறந்த என்று பொருள்படும் தானே. அல்குரான் என்பது போல். எனது கருத்து சாியானதுதானே .சிறந்த மகிமை பொருந்திய ஹிந்து என்று இந்தியா்களை இந்துஸ்தானத்தை ஹிந்து என்ற வாா்த்தையை மதித்துப் போற்றுகின்றாா்கள் எனப் பொருள் கொள்ளலாமா

ஆதிரை நாயகன் பதில் சொன்னால் கேடகவிரும்புகின்றேன்.

Dr.Anburaj said...


அப்பளம் பொறித்து தின்னப் பயன்படும் என்று அறிவோம். அரேபிய மத அடிமை


மாநாட்டிற்கு விளம்பரம் செய்யவும் பயன் படும் என்பதை இன்று அறிந்து கொண்டோம்.


விளம்பரம் செய்யப்பட்ட அப்பளம் பொறித்து தின்பதற்கு தகுதியானதா ?

Dr.Anburaj said...

01--மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்’ என்பார்கள். அந்த மாம்பழமும் ஊட்டாத சோற்றை குழந்தைகளுக்கு ஊட்டுவது அப்பளம்தானே! அப்பளம், பப்படம், பப்பட், அப்பளா என பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த மொறுமொறு அயிட்டம், இந்திய உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. திருவிழா மற்றும் விசேஷங்களில் காய்கறிகளும் உளுந்தில் செய்த பப்படமும் இடம்பெற்றிருந்ததாக சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறது. ‘அப்பளித்துருட்டுபவது’ என்பதே அப்பளமானது என்று தேவநேயபாவாணர் விளக்கம் அளிக்கிறார்.
02-அப்பளித்தல் என்றால் சமனாகத் தேய்த்தல் என்று பொருள்.
03--கல்யாணம் என்றால் இலையில் முதலிடம் பிடிக்கும் அப்பளம் கடவுளுக்கு படைப்பதிலும் இடம் பெறுகிறது. குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ‘அன்னபிரசன்னம்’ எனப்படும் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுதலில் அப்பளமும் உண்டு.

04.‘‘கல்லிடைக்குறிச்சி அப்பளம் ருசிக்க முக்கிய காரணம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரே. உளுந்தில் செய்யப்படும் சாதாரண அப்பளம் மட்டுமல்ல... இரண்டு உளுந்து அப்பளங்களை ஒன்றாக சேர்த்துச் செய்யப்படும் டபுள் அப்பளம், மிளகு அப்பளம், கார அப்பளம், அரிசி அப்பளம், மரவள்ளிக்கிழங்கு அப்பளம் என்று ரகவாரியாகச் செய்கிறோம்’’ என்கிறார், பிரபல ‘சங்கர் அப்பளம்’ உரிமையாளர் சங்கர்.
05.இப்படி நான் அப்பளம் இட்ட செயல் முறையை ஒளிப்படமாகப்
பார்க்கவேண்டுமென்றால் ஆர்வத்துடன் கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்குங்கள்

http://www.youtube.com/watch?v=l-KMgutDJEg&feature=plcp

Dr.Anburaj said...


மாம்பழம் பற்றிய அாிய தகவல்கள்

இணையத்தில் முஸ்லீம் வீரர்கள் பெரும்பாலும் தங்கள் முகலாய ராஜாக்களின் புகழ் பாடுவதில் பெருமைகொள்கிறார்கள் என்பதை சமீபகாலமாக நிறைய பார்க்க நேரிடுகிறது. ஏதோ முகலாயராஜாக்கள் வந்து தான் இந்த நாட்டுக்கு பல பொக்கிஷங்களை அள்ளிக்கொடுத்தார்கள் என்று கூறி புலகாங்கிதம் அடைந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அந்த விதத்தில் சமீபத்தில் இணையத்தில் பார்த்த ஒரு முகலாய ராஜாக்கள் பற்றிய பொய்யான பெருமைகளில் ஒன்று 'மாம்பழம்'.

அதாவது முகலாய ராஜாக்களில் ஒருவர்தான் மாம்பழத்தையே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார் என்றும் அதனால் தான் நாமெல்லாம் மாங்கனி சுவைக்கிறோம் என்றும் பெருமைபட்டுக்கொண்டிருந்ததை இணையத்தில் காண முடிந்தது. ஆனால் அது பொய் என்பதையும் எந்தளவிற்கு வரலாறு தெரியாமல் இவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இனி பார்ப்போம்.

முகலாயர் காலம் என்பதை பொதுவாக பாபர் துவங்கி ஔரங்கசீப் வரை உள்ள காலத்தை இந்தியாவில் முகலாயர் காலம் என்று அறியப்படுகிறது. அத்தகைய முகலாயர்காலம் என்பது அதிகபட்சம் 500 வருஷங்கள் முன்பானதே. ஆனால் இந்தியாவில் ஏன் தமிழகத்தில் மாம்பழத்தின் காலம் அதற்கும் முந்தையது என்பதே உண்மை.

தஞ்சை தமிழ் பல்கலைகழகம் வெளியிட்ட சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் புத்தகத்தில் பார்ப்போம். புத்தகத்தில் உள்ளன மொத்தம் ஆறு தொகுதிகள். கட்டுரைக்காக தேடியது ஆறாவது தொகுதியில்.

மா வரிசை..

இங்கு கீழே உள்ள வரிகள் யாவும் ஆறாவது புத்தகத்தில் பக்கம் 9 -11 வரை உள்ளன.

நீழலுயர்ந்த கிளைகளோடு கூடிய மாவின் - புறநானூறு – 399:4

சோழநாடு இனமான மாவினைக் கொண்ட - பட்டிணப்பாலை - 18

நன்னன் சேய் பாடல் – மலைபடுகடாம் - எ 512

சங்க இலக்கிய தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன்.

அடுத்து தேவாரம்/திருவாசகம்,

காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய தல மரம் – மாமரம். ஒற்றை மாவடியின் கீழே இறைவனும், இறைவியும் உள்ளனர்.

காரைக்கால் அம்மையார் கதையில் மாங்கனி வரும்.

பிள்ளையார் முருகன் புரானத்தில் – மாங்கனி – திருவிளையாடல் படம் உதாரணம்

தகவல்கள் போதுமா, இன்னும் வேண்டுமா ???????

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே!!! மாம்பழம் முக்கனிகளில் ஒன்று தானே…

ஆக தங்கள் அந்நிய மத அடையாளத்தினால் தமக்கு தாமே பாரதத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறோம் என்கிற குற்ற ஊணர்ச்சியால் பாரதத்தின் அடையாளங்களை எல்லாம் தம் மதத்துக்குச் சொந்தம் என்று போலியாக எடுத்துப் போர்த்திக் கொள்பவர்களே தயைகூர்ந்து நீங்கள்பின்பற்றுவது அந்நியாா் நாட்டுமதம் தான்என்பதை ஒத்துக் கொள்ளுங்கள் அல்லது வெட்கப்படாமல் தாய்மதம் திரும்புங்கள். பெருமைக்குரிய பாரத்த நீரோட்டத்தில் கலந்துவிடுங்கள். அப்படி இல்லாவிட்டால் குறைந்த பட்சம் பாரதத்திற்கான பெருமையை சிதைக்காமலாவது இருங்கள்.
நனறி பகுத்தறிவு