Followers

Friday, January 01, 2016

'கருகிய ரொட்டி' - அப்துல் கலாமின் தந்தை"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்... என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்... சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன், என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார். நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை .. என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்... ஆனால் அதற்கு என் தந்தையோ ..

"எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :

" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....

" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கும் பணிவிடை செய்கிறார் .. களைத்துப் போய் இருப்பார் ... ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...

நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...

இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது .... நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

- A.P.J. Abdul kalam
WINGS OF FIRE

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் இறைவன் விதியை ஏற்படுத்தியுள்ளான். கர்வமும் பெருமையும் கொண்ட எவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 57:23

"When I was a kid, my Mom cooked food for us.

One night in particular when she had made dinner after a long hard day's work, Mom placed a plate of 'subzi' and extremely burnt roti in front of my Dad.

I was waiting to see if anyone noticed the burnt roti.

But Dad just ate his roti and asked me how was my day at school.

I don't remember what I told him that night, but I do remember I heard Mom apologising to Dad for the burnt roti.

And I'll never forget what he said: "Honey, I love burnt roti."

Later that night, I went to kiss Daddy, good night & I asked him if he really liked his roti burnt. He wrapped me in his arms & said: "Your momma put in a long hard day at work today and she was really tired. And besides... A burnt roti never hurts anyone but HARSH WORDS DO!"

"You know beta - life is full of imperfect things... & imperfect people... I'M NOT THE BEST & AM HARDLY GOOD AT ANYTHING!
I forget birthdays & anniversaries just like everyone else. What I've learnt over the years is : To Accept Each Others Faults & Choose To Celebrate Relationships"

Life Is Too Short To Wake Up With Regrets!

Love the people who treat you right & have compassion for the ones who don't.

- A.P.J. Abdul kalam

----------------------------------

இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் தற்கொலை செய்து மரணிப்போர் அதிகமாக உள்ளனர். இது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.

தற்கொலை செய்தவர்களில் ஆண்களின் விழுக்காடு எவ்வளவு? பெண்களின் விழுக்காடு எவ்வளவு? திருமணமானவர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர். திருமணம் ஆகாதவர்களில் எத்தனை பேர் தற்கொலை தற்கொலை செய்துள்ளனர் என்று பலவிதமாகப் பிரித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.

அதில் மதரீதியாகவும் தகவல் திரட்டப்பட்டன. அதாவது தற்கொலை செய்தவர்களில் முஸ்லிம்கள் எத்தனை விழுக்காடு? இந்துக்கள் எத்தனை விழுக்காடு? கிறித்தவர்கள் எத்தனை விழுக்காடு? மத நம்பிக்கை இல்லாதவர்களில் எத்தனை விழுக்காடு என்று ஆய்வு செய்யப்பட்ட போது முஸ்லிம்கள் மட்டும் மிகக் குறைந்த அளவில் தற்கொலை செய்திருப்பதும் மற்றவர்கள் தமது சதவிகிதத்துக்கும் அதிகமாக தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்த போது முஸ்லிம்களின் மத நம்பிக்கை தான் அவர்களைத் தற்கொலை செய்யாமல் தடுக்கின்றது. எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எல்லாம் இறைவன் விட்ட விதி என்றும், அவனை நம்மால் எதிர்த்து நிற்க முடியாது என்றும், இறைவனின் தீர்ப்பில் குறைகாணக் கூடாது என்றும் கருதிக் கொள்கின்றனர். சிறு பிராயம் முதல் அவர்களுக்கு ஊட்டப்பட்ட இந்தப் போதனைதான் அவர்களை தற்கொலை செய்யாமல் தடுக்கின்றது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

1 comment:

Dr.Anburaj said...


Dr.A.P.J. அப்துல் கலாமைத்தான் தங்களுக்கு பிடிக்காதே ? பிறாமணா்கள் இந்துக்களோடு அதிக நெருக்கம். ஹஜ் போகாதவா் என்றெல்லாம் திட்டுவீா்களே?

இருப்பினும் சிறந்த வாழ்க்கை நெறியைக் காட்டும் சம்பவம்.தங்களால் மறைக்க இயலவில்லை. வாழ்க .சிறந்த தகவல் நன்றி.