Followers

Tuesday, January 05, 2016

நிரஞ்சனின் தந்தை தனது மகனைப் பற்றி உருக்கம்!



பஞ்சாபில் இறந்த நிரஞ்சனின் தந்தை சிவராஜனின் உருக்கமான பேட்டி.....

"பள்ளியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற நிரஞ்சன் எம்.வி. இன்ஸ்ட்டியூட்டில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தான். அங்கும் சிறப்பாக படித்து முடித்ததால், கேம்பஸ் இண்டர்வியூ-வில் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டு, மலையேற்ற பயிற்சிக்கு போனான்.

நிரஞ்சன் 2003-ல் தன் விருப்பப்படியே புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றான். தேசியப் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு நிபுணராக சேர்ந்தான். 2012-ல் நிரஞ்சனுக்கும், பாலக்காட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராதிகாவும் திருமணம் நடந்தது. இப்போது ஒன்றரை வயதில் விஸ்வமாயா என்கிற பெண் குழந்தை இருக்கிறாள். கடந்த சனிக்கிழமை காலை போனில் பேசும்போது கூட, ''அப்பா, பதான்கோட் விமானப்படை தளத்துக்கு போகிறேன். நீங்கள் நேரத்துக்கு சாப்பிட்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்''என சொன் னான். நிரஞ்சனின் மரணத்தை தாங்க முடியவில்லை. இருப்பினும் நாட்டுக் காக, அவனது விருப்பப்படியே ராணுவ உடையிலே உயிர்த் துறந் திருக்கிறான். கடைசியாக செப்டம்பர் மாதம் ஓண‌ம் பண்டிகையின் போது வீட்டுக்கு வந்தான். மீண்டும் ஜனவரி 26-ம் தேதி நீண்ட விடுமுறையில் வந்து, பெங்களூருவில் தங்குவதாக சொல்லிவிட்டு போனான். இப்போது பிணமாக வந்திருக்கிறான்."

--------------------------------

இந்தியாவும் பாகிஸ்தானும் உயர் மட்ட அளவில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கவலையற்று இருக்கிறார்கள். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் இந்தியாவிலும் இருந்து கொண்டு பொது மக்களை கொன்று குவிக்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தங்கள் இடத்தில் பிர்சனை விஸ்வரூபம் எடுத்தால் உடன் எல்லையில் பத்ட்டத்தை உண்டு பண்ணி மக்களை திசை திருப்புகிறார்கள். பதான் கோட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்த்தப்பட்டுள்ளது. எல்லையில் ராணுவம் என்ன செய்கிறது. இத்தனை கிலோ மீட்டர் இத்தனை ஆயுதங்களோடு உள்ளே எப்படி வந்தார்கள். முன்பு கார்கில் யுத்தம் நடந்த போதும் பல கிலோ மீட்டர் உள்ளே வந்து கூடாரம் அடித்து தங்கியுள்ளார்கள். பாராளுமன்ற தாக்குதலும் நடந்து பல ஜவான்கள் உயிரிழந்தது ஞாபகம் இருக்கலாம். பிஜேபி ஆட்சியில் மட்டும் ஏன் தொடர்ந்து இவ்வாறெல்லாம் நடக்கிறது. உங்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள எதிரி நாட்டோடும் கூடிக் குலாவுவீர்களா? சொந்த மக்களையே பலிகடா ஆக்குவீர்களா?

இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக்கி விடுங்கள். அல்லது இந்தியாவையும் பாகிஸ்தானையும் நிரந்தரமாக பிரித்து விடுங்கள். இனிமேலும் நீங்கள் கோடிகளில் புரள்வதற்காக அப்பாவி ராணுவ வீரர்களின் உயிரை காவு கொடுக்காதீர்கள்.

No comments: