'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, January 01, 2016
இஸ்லாத்தை தழுவினாரா வின்ஸ்டன் சர்ச்சில் - டெலிக்ராஃப்
(நடுவில் அமர்ந்திருப்பது சர் வின்ஸ்டன் சர்ச்சில், இடது பக்கம் அமர்ந்திருப்பவர் மகன் ரோன்டால்ஃப், வலது பக்கம் அமர்ந்துள்ளவர் சகொதரர் ஜான் சர்ச்சில், மேலே அமர்ந்திருப்பது மருமகன்)
பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.
ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார்.
சிறந்த பேச்சாளர், ராணுவ அதிகாரியாகவும் பணியாற்றியவர். தனது எழுத்து திறமைக்காக நோபல் பரிசையும் பெற்றவர். இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடைசி காலங்களில் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு வருகிறது. இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக படிக்க ஆரம்பிக்கிறார். ஷியா, சன்னி பிரிவுகள் எதனால் உண்டானது என்ற விபரங்களை பலரிடமும் ஆர்வமுடன் கேட்டறிந்து கொண்டார். சூடான் மற்றும் நமது இந்தியாவோடு நடைபெற்ற போர்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சில காலம் தங்க நேரிட்டது. அப்போது அந்த மக்களின் பழக்க வழக்கங்களை கண்டு கவரப்பட்டு இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார். தனது நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய தேடுதலை பகிர்ந்து கொள்கிறார்.
1940 ஆம் ஆண்டு அக்டோபரில் முஸ்லிம்களின் தொழுகைக்காக மிகப் பெரிய பள்ளி வாசலை லண்டனின் மத்திய பகுதியில் நிர்மாணிக்க அனுமதி அளித்தார். இதற்காக அரசு தரப்பிலிருந்து 100000 டாலர் நிதியையும் ஒதுக்கினார். இதற்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் பள்ளி வாசல் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்.
1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொது மேடையில் பேசும் போது 'பல நாடுகளில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் லண்டனில் கட்டப்பட்ட பள்ளி வாசலைக் குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்' என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.
இவரது இஸ்லாமிய மோகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்ட இவரது குடும்பத்தார் இவர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி விடுவாரோ என்று அச்சப்பட்டனர். இது சம்பந்தமாக அவருக்கு கடிதங்களும் எழுதியுள்ளனர். அந்த கடிதம் தற்போதுதான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் பார்க்கிறீர்கள்.
லண்டனின் டெலிகிராஃப் பத்திரிக்கை இந்த கடித்தத்தை சமீபத்தில் வெளியிட்டது. இது லண்டனில் மிகப் பிரபலமாக பேசப்படுகிறது.
வின்ஸ்டன் சர்சிலின் சகோதரரின் மனைவியான வென்டலின் பெர்டி ஒரு கடிதத்தை சர்சிலுக்கு 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் அவர் எழுதியதாவது ' "Please don’t become converted to Islam" 'தயவு செய்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி விடாதீர்கள். சில காலமாக உங்களின் நடவடிக்கைகளும் எண்ணங்களும் இஸ்லாத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். இதனால் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே மதம் மாறும் உங்கள் முயற்சியை கை விடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பல இடங்களிலும் இங்கிலாந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில் சர்சிலுக்கு எழுதிய இந்த கடிதம் பொது மக்கள் பார்வைக்கு வந்ததால் இங்கிலாந்து அரசானது தர்ம சங்கடத்தக்கு உள்ளாகியிருக்கிறது. வின்ஸ்டன் சர்சில் இஸ்லாத்தை ஏற்றாரா? அல்லது ஏற்காமலேயே இறந்தாரா என்பது இறைவனுக்கும் சர்ச்சிலுக்குமே தெரியும். வாழும் காலங்களில் ஒரு மிகப் பெரிய பள்ளி வாசலை திறந்து இஸ்லாத்தின் பால் பற்றும் கொண்டு வாழ்ந்த வின்ஸ்டன் சர்சிலை நாமும் வாழ்த்துவோம்.
http://www.telegraph.co.uk/news/religion/11314580/Sir-Winston-Churchill-s-family-feared-he-might-convert-to-Islam.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment