யாரும் இல்லாத பாலைவனத்தில் தனியாக ஒரு இளைஞன் நடந்து வருகிறார். ஏறிச் செல்ல வாகனம் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்...
Posted by Nazeer Ahamed on Sunday, January 17, 2016
யாரும் இல்லாத பாலைவனத்தில் தனியாக ஒரு இளைஞன் நடந்து வருகிறார். ஏறிச் செல்ல வாகனம் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தோடு நடந்து போகிறார். எதிர்பாராமல் எதிரே ஒரு மகிழூந்து வருகிறது. ஆசையோடு அதில் அமர லிஃப்ட் கேட்கிறார். வண்டியும் இவரை ஏற்றிக் கொள்ள அருகில் வந்து நிற்கிறது. அதே நேரம் அவரது செல் போனிலிருந்து தொழுகைக்கான நேரத்தை நினைவூட்டும் வண்ணமாக 'அல்லாஹூ அக்பர்' என்ற பாங்கொலி சப்தமும் கேட்கிறது. அது அஸர் என்ற மாலை நேரத் தொழுகை. நாம் தற்போது அந்த வண்டியில் ஏறுவதை விட தொழுகையை நேரத்தோடு முடிப்பதே சிறந்தது என்று அந்த இளைஞர் முடிவெடுக்கிறார். உதவ வந்த அந்த நண்பர்களிடம் 'நன்றி' என்று கூறி விட்டு தொழுவதற்கு ஆயத்தமாகிறார்.
தன்னை படைத்த இறைவனை அமைதியாக வணங்கி விட்டு தொழுகையை முடித்தால் என்ன ஆச்சரியம். இவர் தொழுவதைப் பார்த்து வழியில் சென்ற பலரும் வாகனத்தை ஓரமாக்கி விட்டு தொழுது கொண்டிருக்கிறார்கள். இவர் ஒரு நன்மையை செய்யப் போய் அதன் மூலம் பலர் நன்மையை அடைய உந்து சக்தியாக இருந்திருக்கிறார்.
விளம்பரப் படமாக இருந்தாலும் அதன் மூலம் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் இந்த விளம்பரதாரரை நாமும் பாராட்டுவோம்.
---------------------------------------------------
'இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் முஸ்லிமான அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116
---------------------------------------------------
'நமக்கும், இறை மறுப்பாளாருக்கும் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் இறை மறுப்பாளாராகி விட்டார்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859
#தொழுகை
1 comment:
இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் முஸ்லிமான அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116
இக்கருத்துக்கள் ஆபத்தானவை.வழிபாடு அரேபியாவில் ஒரு விதமாக வழங்கி வருகின்றது.பிற நாடுகளில் பல விதமாக வழங்கி வருகின்றது. எந்த நிலையிலும் மனம்
இறைவன்பால் ஒன்றி நிற்கின்றது. அதுதான் முக்கியம்.மனம் இறைவன்பால் லயிக்கவில்லை எனில் அது வழிபாடு அல்ல.
இந்துக்களின் வழிபாட்டின் தத்துவம் இதுதான்.
Post a Comment