Followers

Monday, January 11, 2016

நான் பார்த்த மிகப் பெரிய மையவாடி!ரியாத்தில் உள்ள நஸீம் மையவாடிக்கு உடல்கள் அடக்கம் செய்ய பல முறை சென்றுள்ளேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடக்கம் செய்யப்பட்ட இறந்த உடல்கள்தான். உள்ளே நடந்து செல்ல முடியாது. வாகனத்தில்தான் செல்ல முடியும். அந்த அளவு விரிந்து பரந்த இடம் அது. ஆயிரக்கணக்கான உடல்கள் அடக்கப்பட்டுள்ள அந்த இடத்துக்கு சென்றாலே நமக்கு ஒரு வித மரண பயம் தொற்றிக் கொள்ளும். இந்த நிலை நம் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள சில தர்ஹாக்களுக்கு சென்றால் வருமா என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனது நண்பன் வாகன விபத்தில் ரியாத்தில் இறந்த போது அல்ராஜி பள்ளியில் தொழுது விட்டு அடக்கம் செய்ய இந்த மையவாடிக்கு வந்தேன். எப்போதும் 15 அல்லது 20 குழிகள் வெட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கும். அன்றும் ஏழு அல்லது எட்டு உடல்கள் வந்தன. அவர்களின் சொந்தங்கள் தாங்கள் கொண்டு வந்த உடலை அடக்கி விட்டு எனது நண்பனின் உடலையும் தூக்கி குழியில் இறக்குவது பிறகு மண் தள்ளுவது போன்ற வேலைகளை தாங்களாகவே முன் வந்து செய்தனர். இறந்த அந்த உடலுக்காக பிரார்த்தனையும் செய்தனர். அனைவரும் செல்வ செழிப்பில் திளைக்கும் கோடீஸ்வர அரபுகள். நம் நாட்டில் இந்த வேலையை செய்பவர்களை 'வெட்டியான்' என்று சொல்லி அவனை தனி சாதியாக பாவிப்போம்.

அரபுகளில் எத்தனையோ கெட்டவர்கள் உள்ளனர். நான் மறுக்கவில்லை. அதே நேரம் அந்த அரபுகள் வழி வழியாக செய்து வரும் இஸ்லாம் போதித்த சில நல்ல பழக்கங்களை நாமும் கடை பிடிக்க பழகிக் கொள்வோம்.

-------------------------------

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5671, 6351

இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 2319

6 comments:

Dr.Anburaj said...


அரபுகளில் எத்தனையோ கெட்டவர்கள் உள்ளனர். நான் மறுக்கவில்லை. அதே நேரம் அந்த அரபுகள் வழி வழியாக செய்து வரும் இஸ்லாம் போதித்த சில நல்ல பழக்கங்களை நாமும் கடை பிடிக்க பழகிக் கொள்வோம்.

தங்களின் அரேபிய அடிமைப்புத்தி இப்படி எழுத வைக்கின்றது.

உலகத்தில் நல்லவா்களுக்கு பஞசம் இல்லை.அம்மணமாக அலையும் ஆதிவாசி மக்களில் கூட அடுத்தவன் பசி பொறுக்காத உத்தமா்கள் இருக்கின்றாா்கள்.
அரேபிய அரசாங்கங்களின் வருவாயை வைத்து பாா்க்கும் போது உலகின் அனைத்து துறை வளா்ச்சியில் அரேபியா்களின் பங்கு மிக அல்பம்.
இஸ்ரவேல் நாடடிற்கு சவுதி குவைத் போன்ற வருமானம் நிச்யம் இல்லை. ஆனால் அவர்களது வீரம்-அறிவு -பேராண்மை அப்பப்பா ?
01.சிாியாவின் விமானப்படையை 24 மணி நேரத்தில் அழித்தது
02.உகாண்டாவில் எண்டபி என்ற இடத்தில் கடத்தப்பட்ட இஸரவேல் பயணிகள் விமானத்தை ராணுவ நடவடிக்கை மூலம் மீட்டது
03.ஈராக்கின் அணு உலைகளை அழித்தது
05.ஈரானின் அணுசக்தி -குண்டு - திட்டங்களை முழுவதுமாக நகல் எடுத்து உலகிற்கு பகீரங்கப்படுத்தியது.
06.நூற்றுக்கு மேல் நோபல் பாிசுகளைப் பெற்றது
07.அரேபிய நாடுகளால் சுற்றி தாக்கப்பட்ட போதும் வீரத்துடன் போராடி இன்றும் இஸ்ரவேல் நாட்மை திறம்பட பாதுகாத்து நிா்வகிதது வருவது
அனைவரும் பின்பற்றத்தக்கது
-----------------------------------------------------------------------------
உமது தாய் நாட்டை இழிவு படுத்தாதேீா்கள்

இந்தியாவின் ஜனத் தாகை 112 கோடி.ரியாத்தின் ஜனத்தொகை 1 கோடியைத் தாண்டாது. இவ்வளவு குறைந்த ஜனத்தொகையும் பெரும் வருமானமும் கொண்ட நாட்டில் வெட்டியான் வேலைக்கு ஆள் கிடைக்காது.அதைவிட சிறந்த வருமானம் உள்ள தொழில் அவர்களுக்கு கிடைத்த விடும். இந்தியா போன்ற நாட்டில் வெட்டியான் வேலை பாா்த்தாவது ஊதியம் பெற வேண்டும் என்ற நிலையில் மக்கள் இருக்கின்றாா்கள். இங்கே ஜனத்தொகை மிக அதிகம். எனவே மக்களுக்கு பலவகையான தொழல் தேவைப்படுகின்றது. இன்று இந்தியாவிலும் வெட்டியான் வேலைக்கு ஆடகள் கிடைப்பது அாிதாகி வருகின்றது. பள்ளி வாசல் இமாம் மோதியாா்களின் நிலை அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே.அதுபோல்தான்.Dr.Anburaj said...

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என்ன மடத்தனமான கருத்து.அப்படியானால் ஒருவன் நல்லவனாக இருப்தும் கெட்டவனாக இருப்பதும் அல்லாவின் நாட்டம்தான் காரணம் என்றாகிறதே.

ஊழவினை -நீ செய்த புண்ணியம் உன்னை விடாது எனபது இந்தியாவின் கருத்து

நியாயத்தீா்ப்பு நாள் என்பது கட்டுக் கதை. சாத்தியம் இல்லை.

Dr.Anburaj said...

முஸ்லீம்களுக்கு இவ்வளவு பொிய மையவாடி கூட போதாது.சாகரா பாலைவனத்தை கபரஸ்தான் ஆகக்க வேண்டிய காலம் விரைவில் வரும்.நிலைமை திருந்தாவிட்டால்
இஸ்லாமில் மிகப்பெரிய பிரிவுகள் ஷியா- சுன்னி என்பதாகும்.
சுன்னிக்குள்ளாகவே ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன.
இந்தியாவில் சுன்னி பிரிவினர் அதிகம். அந்த சுன்னி பிரிவுக்குள் இரண்டு பெரிய பிரிவுகள் பெரெல்வி , தேவ்பந்தி என்பதாகும்.
இந்த இரண்டும் வெட்டுக்குத்துக்கு அஞ்சாதவை.
மதமாற்றம் செய்யும்போது இஸ்லாம் என்பது ஒன்றுதான். அதற்குள் பிரிவே கிடையாது என்று சேர்ப்பார்கள். சேர்ந்ததும்தான் உள்ளே இருக்கும் ஏராளமான பிரச்னைகள் தெரியும். இந்துவாக இருந்தாலோ கிரிஸ்துவனாக இருந்தாலோ கூட பெண் கொடுத்துவிடுவார்கள். ஆனால், வேறொரு பிரிவைச் சார்ந்தவனாக இருந்தால், கட்டாயம் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். சம்பந்தம் கொடுப்பது இருக்கட்டும். தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்.
இந்த பெரெல்வி - தேவ்பந்த் பிரிவு சுன்னி பிரிவுக்குள்ளே இருக்கும் பிரிவுக்கான காரணங்கள் மிக மிக அற்பமானவை. ஆனால், இவர் அவரை காபிர் என்பார். அவர் இவரை காபிர் என்பார். (ரெண்டு பேரும் சேர்ந்து நம்மை காபிர் என்பார்கள்). நாகூர் ரூமியை பெரெல்வி பிரிவு என்று சொல்லலாம். தர்காக்கள், சூஃபி, ஆகியவற்றை இவர்கள் மதிப்பார்கள். இவற்றை மதிக்காமல் இவற்றை இடித்துத்தள்ளவேண்டும் என்று சொல்லும் சுவனப்பிரியன் போன்றவர்களை தேவ்பந்த் பிரிவு என்று சொல்லலாம். ஆனால் இரண்டுமே வன்முறை கூட்டம்தான். உதாரணமாக பெரெல்வி சுன்னி பிரிவின் வன்முறை கும்பலின் பெயர் சுன்னி தெஹ்ரீக். இவர்கள் தேவ்பந்த் சுன்னி பிரிவின் மசூதிகளில் குண்டு வைப்பார்கள். தேவ்பந்த் சுன்னி பிரிவின் பாகிஸ்தானிய வன்முறை கும்பலின் பெயர் சிபாஹ் ஈ சஹாபா பாகிஸ்தான் (எஸ்.எஸ்.பி). இந்த அமைப்பு சுன்னி தெஹ்ரீக் அமைப்பை விட படு தீவிரமான வன்முறை கொண்டது. இவர்கள் பெரெல்வி பிரிவைச் சார்ந்த டாக்டர்கள், என்ஜினியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக்கூட விட்டு வைக்க மாட்டார்கள். அதனால் இது பாகிஸ்தானிலேயே தடை செய்யப்பட்டது. இவர்கள் லஷ்கர் -ஈ-ஜாங்வி என்று பெயர் மாற்றிக்கொண்டுவிட்டு தொடர்ந்து அதே வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
வன்முறையிலேயே வளர்ந்த இந்த கூட்டங்களுக்கு, கொல்வதற்கு காபிர் இந்துக்கள் கிடைக்கவில்லை என்றால், அடுத்த பிரிவினரை காபிர் என்று பெயர் சூட்டி கொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
(அமைதி மதம் என்று இங்கு பிரச்சாரம் செய்பவர்களுக்கும், அந்த பிரச்சாரத்தில் மூளையை கழட்டி வைத்து விட்டு விரல் சப்பிக்கொண்டே கேட்பவர்களுக்கும் இது எச்சரிக்கை)
கராச்சியில் சுன்னி தெஹ்ரீக் (பெரெல்வி சுன்னி பிரிவு) கூட்டத்தில் தேவ்பந்த் பிரிவினர் செய்த தற்கொலைப்படை தாக்குதலில் 57 பேர்கள் உயிரிழந்தார்கள்.
http://dawn.com/2006/04/13/top1.htm
இந்திய பத்திரிக்கை என்றால் நம்பவே மாட்டேன்; அது பிரசுரிக்கும் நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்று சாதிக்கும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கிறது. அதற்காகத்தான் பாகிஸ்தான் பத்திரிக்கை செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.
இது பாகிஸ்தானில் அதிகம் விற்பனையாகும் ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி.

http://www.jang.com.pk/important_events/karachi_blast_11apr06/english%2019%20april.htm

habeeb Mohamed izzadheen said...

Ingae ulla kabur edhuvum tharai matamaha illayae

Dr.Anburaj said...

என்ன
ஹபீப் மகம்மது இசாதீன் வாருங்கள் வணக்கம் -சலாம் சலாம் -

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துக்களுக்கு முழு வடிவில் பதில் அளிக்கலாமே!

நீதிமான்களின் குரலை கா்த்தா் (-அல்லா -ஈஸ்வரன் ) கேட்கின்றாா் என்று கிறிஸ்தவா்களின் வேதம் கூறுகின்றது.

மகான் களின் கல்லறையைத்தானே கபுா் என்று தாங்கள் குறிப்பிடுகின்றீா்கள். ஜனநாயகம் என்ற உணா்வு இருந்தால் எந்த தாவாவிற்கும் அடிதடி தீா்வு அல்ல. இந்துக்ளாகிய நாங்கள் அனைவரும் மகான்களின் கல்லறையின் மேல் பல கோவில்களைக் கட்டி வணங்கி வருகின்றோம். இதனால் யாருக்கும் எந்த பாவமும் வராது என்பத இந்துக்ள் கருத்து. மகான்கள் சுட்சும உடல்தாங்கி அருள் செய்து வருகின்றாா்கள் என்ற நம்பிக்கை மக்கள் மனதில ஆழமாக உள்ளது.அது அனுபவபாடம். ஏட்டுக் கதை அல்ல. விரும்பினால் செய்யட்டும்.விரும்பமில்லாதவா்கள் விட்டு விடலாம்.

வலைதளத்தில் NHM என்ற மென்பொருள் உள்ளது.இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.goole முகப்பு பகுதியில் என்று டைப் செய்து உள்ளே நுழையுங்கள். தனாகவே தங்களை வழி நடத்தும்.சாியான தரவிரக்கம் செய்து விட்.டீர்கள் என்றால் கணினியின் இடது புறத்தில மணி விடிவில் ஒரு சுட்டி தோன்றும். அதை திறந்து பாா்த்தால் alt4 அடித்தால் வலைதளத்தில் தமிழில் எழுதலாம். முயன்று பாருங்கள்.

Dr.Anburaj said...

என்ன
ஹபீப் மகம்மது இசாதீன் மென்பொருளை தரவிறக்கம் செய்தீா்களா ? தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாமே ? சுவனப்பிாியன் எனது கருத்துக்களை அடிக்கடி வெளியிடமாட்டாா்.தங்களின்க ருத்தை நிச்சயம் வெளியிட்டு விடுவாா்.தமிழல் தங்களின் கருத்துக்ளை எழுதுங்கள்.

( இந்திய )முஸ்லீம்கள் அரேபிய அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். மக்கள் தொகையில் அதி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள் இந்துக்ளை குறித்து சாியான நட்பான கருத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம்.அரேபியா்கள் இந்துக்களை காபீா்கள் என்று கேவலமாக இழிவாக நினைக்கின்றாா்கள்.அரேபிய சமய புத்தகங்கள் அப்படித்தான் போதிக்கின்றன. அரேபியாவில் இல்லாதது உலகெங்கும் இருந்தால் அது ஷிா்க். அரேபியாவில் உள்ளது பிற இடங்களில் இல்லையெனில் ஷிா்க் என்பது கடைந்தெடுத்த முட்டாளதனம்.அரேபிய அடிமைத்தனம்.

வாருங்கள் நமது விவாதத்தை தொடரலாம். பொங்கல் நல் வாழ்த்துக்கள். தை பிறந்து விட்டது. எண்ணங்களில் உள்ள இருள் தொலைந்து ஒளி பிறக்கட்டும்.அரேபிய அடிமைத்தனம் அழிந்து ஒளி பிறக்கட்டும். வாழ்க வளமுடன்.