
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட இளைஞருக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட் டுள்ளது.
‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களுக்கும் டத்தோ விருதை வழங்குகின்றனர். 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மலேசியர்கள் மட்டுமே பெறக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர். இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான டத்தோ விருதுகள் 12 பேருக்கு மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப்(35) என்பவரும் விருது பெற்றுள்ளார். இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016
No comments:
Post a Comment