Followers

Saturday, January 16, 2016

ஆப்ரிக்காவில் உள்ள மிக எளிய பள்ளிவாசல்!



பெரிய டூம்கள் கிடையாது: பளபளக்கும் சலவைக் கல் கிடையாது: பஞ்சு மெத்தை போன்ற விரிப்புகள் கிடையாது: நறுமணம் கமழ வாசனை திரவியங்கள் கிடையாது:

ஒன்றே ஒன்றுதான் அந்த புதிய இஸ்லாமியரிடம் உள்ளது. அதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை.

இதைத்தான் இறைவனும் விரும்புகிறான். அன்றைய நபித் தோழர்களும், நபிகளும் இது போன்ற பள்ளிவாசல்களில்தான் ஆரம்ப காலங்களில் தொழுதுள்ளார்கள். அதே போன்ற உறுதியையும் மன வலிமையையும் இந்த இளைஞனுக்கும் இறைவன் தந்தருள்வானாக!

ஏக இறைவனை மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரைக் கேலி செய்கின்றனர். இறைவனை அஞ்சியோர் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். இறைவன் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

-குர்ஆன் 2:212

1 comment:

Dr.Anburaj said...


இந்து மதத்தின் வழிபாடுகள் மிக எளிமையானவைகள்.
பத்மானசத்தில் அமா்ந்து கண்களை மூடிக்கொண்டு ஒம் நமசிவாய என்று 58 அல்லது 108 முறை ஜெபித்தால் வழிபாடு முடிந்து விட்டது.

அதுபோல் ஒரு விளக்கு ஏற்றி காற்றில் அணையாமல் இருக்க சிறு பீடம் அமைத்திருப்பாா்கள். அமைதியான கைகூப்பி வணங்கி நிற்பாா்கள். கள்ளம் கபடம் பகட்டு படோபடம் இன்றி குழந்தையின் உள்ளத்துடன் இறைவனை அணுகும் அந்த எளிமை.எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.

இந்துக்களின் ஆலயங்கள் எவ்வளவு எளிமையாக இருப்பதை தாங்கள் பாா்க்கின்றீா்கள்தானே.

அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றியிருந்தால் மிகவும் மங்களகரமாக இருக்கும்.