Followers

Saturday, January 09, 2016

அவுரங்கசீப் இந்த மண்ணோட மைந்தனா?



// அவுரங்கசீப் இந்த மண்ணோட மைந்தனா?..// - Rajendra Ramnivas

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். சரி தலைப்புக்கு வருவோம்.

அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

முகலாயர்களையும், கேரளக் கரையோரம் வந்த ஒரு சில அரபுகளையும் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் இந்துக்களே! இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப் பட்டும் தீண்டாமையிலிருந்து விடுபடவும் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட இந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இந்த முகலாயர்களில் கூட ஒரு சில அரசர்கள் இந்நாட்டு பெண்களை மணமுடித்து பாரத நாட்டு பிரஜைகளான வரலாறை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நான் படித்த அந்த ஒரு சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

**********************************

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

******************************************

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

********************************************

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.

----------------------------------

ஐம்பது வயதைத் தாண்டிய நிலையில்.....

ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.

ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.

இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339



அரசியல் வேறு மதம் வேறு!

ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.



எனது தேசத்து ஏழைகளுக்கு......

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'

டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

நம்நாட்டை எந்த அளவு நேசித்திருந்தால் இத்தகைய வார்த்தை ஒளரங்கஜேப்பின் வாயிலிருந்து வந்திருக்கும்? இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிக்கிறேன் இறைவன் நாட்டம் இருப்பின்.

********************************************

சுப்ரமணிய பாரதி!

'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'

6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.


என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

2 comments:

Dr.Anburaj said...

முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம்.




















முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். என்ற சுப்பிரமணிய பாரதி சொல்லி விட்டாரே.ஏன் இந்த அலட்டல்.

ஆனால் தாங்கள் பின்பற்றும் மதத்தின் செல்வாக்கு காரணமாக தாங்கள் அரேபியனை காப்பிஅடிப்பதுதான் வாழக்கை என்று வாழ்ந்து வருகின்றாா்கள். அரேபியனை போல் வாழ முயன்று வருகின்றீா்கள் அதுதான் இங்கே அனைவருக்கும் புாியவில்லை. ஒரு அரேபியன் இந்தியாவில் தற்காலிகமாக தங்கியிருந்தால் எப்படி அவனது மனஒட்டம் பழக்க வழக்கங்கள் இருக்குமோ அதுபோலவே முஸ்லீம்களும் இருக்கின்றாா்கள்.
இந்தியாவில் முஸ்லீம்கள் அந்நிய நாட்டவா் என்று யாரும் சொல்லி நான் கேட்கவில்லை.எழுதி படிக்கவில்லை. தாங்கள்தான் கற்பனையாக ஏதையாவது சொல்லிமுஸ்“லீம்களை உசுப்பி விட வேண்டும் என்று எழுதுகின்றிா்கள்.
அரேபியக்காரன் அனைவரும் மொத்தமாக யுதா்களை ஒழிக்க வேண்டும் என்கிறான்.தாங்களும் யுதா்களை ஒழிக்க வேண்டும் என்று பச்சையாக எழுதி வருகின்றீா்கள். இதென்ன நியாயம்.இஸ்ரவேலலின் ஆயுதங்கள் தனது ராணுவத்தின் கையில் அதிக எண்ணிக்கையில் இருக்கினறது என்ற கருத்தை நான் பலமுறை தஙகளுக்கு எழுதியும் உடைந்த ரிக்காடு போல்

யுதா்கள் பொல்லதவா்கள் என்று எழுதுவதை தாங்கள் விடவில்லை.இந்த விசயத்தில் தாங்கள் ஒஒரு இந்திய முஸ்லீம் என்ற நிலைக்கு பொருத்தமாக நடந்து கொள்ளவில்லை.

அதுதான் கேட்கின்றேன்.முஸ்லீம் ஆக வாழ்வதற்கும் ஒரு சவுதிகாரன் போல் வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்..இதுதான் கொஞச்ம் சங்கடமாக உள்ளது.








Dr.Anburaj said...



அதுதான் கேட்கின்றேன்.முஸ்லீம் ஆக வாழ்வதற்கும் ஒரு சவுதிகாரன் போல் வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்..இதுதான் கொஞச்ம் சங்கடமாக உள்ளது.