'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, January 02, 2016
ஆவூரில் இறந்த உடலை தூக்கிச் சென்ற பெண்கள்!
தஞ்சை மாவட்டம் ஆவூரில் சென்ற வியாழன் இரவு ஏகத்துவ வாதியின் தந்தை சுகவீனமாக இருந்து இறந்து விட்டார். அவரது மகன் துபாயில் பணியில் உள்ளார். ஏகத்துவ சிந்தனையில் இருந்த அந்த சகோதரர் தனது தந்தைக்கு தானே தொழ வைத்து பிரார்த்தனை செய்ய ஆசைப்பட்டார். நபிகள் நாயகம் இவ்வாறு உறவினர்கள் விருப்பப்பட்டால் அந்த ரத்த பந்தங்களே தொழ வைக்க அனுமதி வழங்கியுள்ளார்கள். புரோகிதத்தை ஒழிக்க இதுவும் ஒரு வழி என்பதால் ஏகத்துவ வாதிகளில் சிலர் தங்கள் உறவினர்களுக்கு தாங்களே தொழ வைப்போம் என்று கூறி வருகின்றனர்.
இதனடிப்படையில் மகன் துபாயிலிருந்து ஆவூருக்கு வந்து விட்டார். ஆனால் மார்க்கம் விளங்காத ஊர் மக்களில் சிலரும் ஒரு சில புரோகிதர்களும் இதற்கு அனுமதி தர மறுக்கின்றனர். இரண்டு பக்கமும் தங்கள் தரப்பை விட்டுக் கொடுக்காமல் நின்றனர். ஊர் முழுக்க பெரும் அளவிலான காவலர்களும் இறக்கப்பட்டனர். 'எந்த நிலையிலும் புரோகிதர்களை அனுமதிக்க மாட்டேன்' என்று மகன் பிடிவாதம் பிடிக்க நிலைமை மோசமானது. இறந்த உடலை தூக்க சுன்னத் ஜமாத்தினருக்கு பயம். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இறந்தவரின் சொந்தக்கார பெண்களை இறந்த உடலை தூக்கவைத்து பள்ளி வாசலுக்கு கொண்டு வந்து விட்டனர். பெண்களாக இருப்பதால் ஏகத்துவ வாதிகளும் வேறு வழியின்றி உடல் செல்ல அனுமதித்தனர். வழக்கம் போல் புரோகிதர் தொழ வைக்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகன் முடிந்த வரை தடுத்துப் பார்த்தார். முடியாத பட்சத்துக்கு இறைவன் எதையும் நிர்பந்திப்பதில்லை.
இந்துத்வாவாதிகளால் நாளுக்கு நாள் பிரச்னை உண்டாகும் போது நமக்குள் பிரிவினை தேவையா? என்று சிலர் கேட்கக் கூடும். இதனை காரணம் காட்டி நம்மிடம் உள்ள அனாச்சாரங்களை மூடி வைக்க வேண்டும் என்று சொல்வது சரியான வாதமாகாது. அன்று மக்காவில் சிலை வணங்கிகளால் உயிருக்கு ஆபத்து இருந்த நிலையிலும் நபிகள் நாயகம் ஏகத்துவ பிரசாரத்தை முடக்கி விடவில்லை. நபிகள் நாயகம், அபூபக்கர், உமர், என்று அனைவரின் குடும்பத்திலும் பிரச்னை. ஆனால் முடிவு சிறந்ததாக இருந்தது. அத்தகைய நிலை இறைவன் நாடினால் தமிழகத்திலும் ஏற்படும். அதுவரை பொறுப்போம்.
'நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7288
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment