Followers

Tuesday, January 26, 2016

கோவை புரட்சியில் தூக்கிலிடப்பட்ட 38 முஸ்லிம்கள்!(படத்தில் உள்ளது இந்திய சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பாடுபட்ட இந்திய இஸ்லாமிய தலைவர்கள்)

1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் திண்டுக்கல் காட்டுப் பகுதியிலிருந்து 5 புரட்சிப் படைப்பிரிவினர் ஆங்கில ராணுவ மையங்களைத் தாக்கிட கோவைக்குச் சென்று அதற்காக ஆயத்தமானார்கள். திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின் துவக்கப்பட்ட புரட்சியின் ஆரம்பக் கட்டம் இதுவாகும். எல்லா புரட்சியாளர்களும் ஆயுதம் தாங்கியிருந்தனர் அவர்களது பயணம் ரகசியமாக இருந்தது. திப்பு சுல்தான் படையில் போர் வீரர்களாகவும் தளபதிகளாகவும் பணியாற்றியவர்களும் விவசாயிகளும் இந்தப் புரட்சிப் படையில் இருந்தனர்.

இந்தப் புரட்சிப் படைக்கு ஹசம், அப்பாச்சிக் கவுண்டர், சாமையா ஆகியோர் தலைமையேற்று கோயம்பத்தூரை நோக்கி வழி நடத்திச் சென்றனர். தீரன் சின்னமலை இந்த வீரர்களுக்கு உரிய ஆணையை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அரவாக்குறிச்சியைச் சேர்ந்த கௌரவக் கவுண்டரும், ஓசூரைச் சேர்ந்த புத்தே முஹம்மதுவும் தாராபுரத்தை நோக்கி புரட்சிப் படையை வழி நடத்திச் சென்றனர்.

இச்சப்பட்டியைச் சேர்ந்த ருனவ்னுல்லா கான் தலைமையில் புரட்சிப் படையின் இரண்டாவது அணி காங்கேயத்தை நோக்கிச் சென்றது.

1800, ஜூன் 3ஆம் நாள் கோவை நகரின் முக்கிய இடங்களிலெல்லாம் ஆங்கிலேய எதிரிகளை தாக்குவதற்கு புரட்சிப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.

நன்கு ஆலோசிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த கோயம்புத்தூரின் ராணுவ கோட்டையை முற்றுகையிடும் திட்டம் ஆங்கிலேயருக்கு இரகசிய ஒற்றர்கள் மூலமாக தெரிந்தது. ஒரு சில இடங்களில் புரட்சிப் படைகள் தாக்குதல் நடத்தின. மற்ற பகுதிகளில் புரட்சிப் படையினர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டனர்.

கோவைப் புரட்சித் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தேசியப் புரட்சிவாதிகளுக்கு உயர்ந்த அளவு தண்டனை வழங்குமாறும் பிடிபட்டவர்கள் அனைவரையும் இராணுவ முறைப்படி ஒரே விசாரணை நடத்தி அதில் எது அதிக அளவு தண்டனை என்று கலெக்டர் கருதுகிறாரோ அந்த தண்டனையையோ அல்லது மரண தண்டனையோ உடனடியாக வழங்கிடுமாறு கவர்னர் எட்வர்ட் கிளைவ் சேலம் கலெக்டருக்கு ஆணை பிறப்பித்தார். கவர்னரின் ஆணைக்கினங்க சேலம் மாவட்டக் கலெக்டர் வில்லியம் மாக்ஸிலியார்டு கோவைப் புரட்சியாளர்கள் 42 பேர்களை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த 42 பேரில் 38 பேர் முஸ்லிம் வீரர்கள். 4 பேர் இந்து வீரர்கள். அனைவருக்கும் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.

பல பகுதி மக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக தாராபுரத்தில் 8 பேரையும் சத்திய மங்கலத்தில் 7 பேரையும் கோயம்புத்தூரில் 6 பேரையும் மற்றவர்களைப் பல்வேறு புரட்சி மையங்களிலும் பொது இடங்களிலும் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தூக்கிலிட்டுக் கொன்றனர் ஆங்கிலேயர்கள்.

கோவைப் புரட்சியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்கள்:

1.ஷம்னஸ்கான்

2.மொஹைதீன் கான்

3.தாராபுரம் சையது இமாம்

4.மான் கான்

5.பீர் சாஹிப்

6.ஷேக் மியான்

7.கோவை கலீஃபா அமீர்தான்

8.ருனா முஸ்டாஹ் கான்

9.குலாம் பாய் ஹைதர் கான்

10.ஜமாஷ் கான் அலி சாஹிப்

11.கொடிக்கால் ஷேக் அலி

12.செவான் கான்

13.அலி சாஹிப்

14.முடா சாஹிப்

15.முஹம்மது சாஹிப்

16.மிர் கமருத்தீன் கான்

17.ஷேக் மொஹைதீன்

18.கமருத்தீன்

19.சோலை மலை ஜமீன்தார்

20.ஃபதே முஹம்மது

21.ஷேக் மதார்

22.ஷேக் புத்தீன்

23.குலாம் உசேன் ஷேக் அலி

24.பீர் முஹம்மது

25.குலாம் அலி

26.சோட்டா அப்துல் காதர்

27.முஹம்மது ஷெரீஃப்

28.ஷேக் மீரா

29.ஷேக் முஹம்மது திவாஹர்

30.பீர் முங்கப்பா அலி

31.சையது மொஹர்தீன்

32.ஹைதர்கான்

33.மொஹிர்தீன் கான்

34.ஷேக் முஹம்மது

35.தீதார் ஷேக் இமாம்

36.பீனா ஷேக் மியான்

37.ஓசூர் புத்தே முஹம்மது

38.ருவைனுல்லா கான்

தகவல் உதவி
விடியல் வெள்ளி
ஆகஸ்ட்-செப்டம்பர்-2008

இத்தனை பேர் விடுதலைப் போரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். நமது வரலாற்று பாடநூல்களில் இந்த செய்தியை நாம் என்றாவது பார்த்திருக்கிறோமா?

'நாங்கள் இனி வெள்ளையருக்கு எதிராக போராட மாட்டோம்' என்று மன்னிப்பு கடிதம்எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் 'விடுதலை போராட்ட வீரர்கள்' என்று நாட்டில் வலம் வருகின்றனர். உண்மையிலேயே இந்த நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை இழந்த சமுதாயம் துரோகி பட்டம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளது.

நமது நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினத்தில் தூக்கிலிடப்பட்ட அந்த வீர புருஷர்களை நினைவு கூர்வோம்.2 comments:

Dr.Anburaj said...சுதந்தரப் போராட்ட வீரா்களின் மதத்தை முன்னிலை படுத்துவது அவா்களது மகத்தான

தியாகத்தை அவமதிக்கும் பண்பாடற்றச் செயலாகும்.

ஆனால் தாங்களின் கருத்து கவனத்திற்குாியது.சுதந்தரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி சாா்பானவா்களின் தொண்டுகளை முன்னிலைப்படுத்திவிட்டு பிற

மக்களின் மகாத்தான தியாகங்களை ஓரங் கட்டிவிட்டது. பிற்காலங்களில் காந்திஜியின்

போதனைகளுகம் மறக்கப்பட்டது. இத் தவறு திருத்தப்பட வேண்டும்.

தாங்களால் படடியலிடப்பட்டவா்களின் வாழ்ககை வரலாற்றுச் சம்பவங்கள் இருப்பின்

அதையும் எழுதலாம். தங்களின் முயற்றி பாராட்டுக்குாியது. நன்றி.
ziaudeen said...

FREEDOM SPELLING IS WRONG IN THA PHOTO