Followers

Friday, January 29, 2016

இரண்டு மனைவி கட்டவில்லை என்றால் சிறைவாசம் - எரித்ரியா



இவ்வளவு சந்தோஷமாக எங்கு ஓடுகிறார்கள்? இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கா? :-)

அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அடிமைப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும்.

(திருக்குர்ஆன்: 4:3)


அன்று இறங்கிய இந்த குர்ஆன் வசனம் இன்று எரித்ரியாவுக்கு பொருந்திப் பொவதை பாருங்கள். குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இனி பதிவை படிக்க ஆரம்பியுங்கள். :-)

எரித்ரியா (28 ஜன. 2016): "ஆண்கள் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்"​ என எரித்ரியா அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்கா கண்டத்தில் சூடானுக்கு அருகிலுள்ள நாடு எரித்ரியா. சுமார் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் காணப்படுகிறது. இதனால் அங்குத் திருமணம் புரியாமல் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குடும்ப வாழ்வு கிடைக்காமல் தகாத உறவுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தவும் பெண்கள் அனைவரும் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழவும் தம் நாட்டில் வாழும் ஆண்கள் அனைவரும் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு திருமணம் புரியும் ஆண்களுக்கு வீடு மற்றும் செலவினங்களுக்கான உதவியையும் அரசே செய்யும் எனவும் அறிவித்துள்ளது.

இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்குக் கடுமையான வேலையுடன் ஆயுள் தண்டனை சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வருமெனவும் தம் கணவரை மற்றொரு திருமணம் புரிய அனுமதிக்காத பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் அச்சட்டம் கூறுகிறது.

1998-2000 ஆண்டுகளில் பக்கத்து நாடான எதியோப்பியாவுடன் நடந்தப் போரில் எரித்ரியா இராணுவ வீரர்கள் சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததைத் தொடர்ந்து பெண்களுக்குத் திருமணம் புரிய ஆண்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

எரித்ரிய அரசின் இப்புதிய சட்டம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crazy Monday, which is published by the Standard newspaper, is well known for its focus on scandalous stories and gossip as part of an attempt to attract a younger readership, says Mathias Muindi from the BBC's media monitoring service.

But this has not stopped it being reported in many countries from Nigeria to South Africa, with some suggesting that it was true.
The story said that to make up for the shortage of men in the country, following the civil war with Ethiopia from 1998-2000, every man must marry at least two women or face imprisonment.

It has been trending on Twitter in Nigeria, and other countries, for several days with people sharing links to the Eritrea's visa application documents.

தகவல் உதவி
இந்நேரம் காம்
BBC
28-01-2016
http://www.bbc.com/news/world-africa-35427654

2 comments:

Dr.Anburaj said...


998-2000 ஆண்டுகளில் பக்கத்து நாடான எதியோப்பியாவுடன் நடந்தப் போரில் எரித்ரியா இராணுவ வீரர்கள் சுமார்

1,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

எனது கருத்து
அரேபிய மதம் உலக ஜனத்தொகையை குறைப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றது.
தினசாி பத்திாிகைகளில் வெளிவரும் படுகொலை குண்டு வீச்சு தற்கொலை தாககுதல் போன்ற வற்றை எழுதலாம். இசுலாம் என்றால் சமாதானம் என்ற பொருள் விளங்கும்.

Dr.Anburaj said...



சுவனப்பிாியன் என்ற வலைதளம் ஒரு நாதியற்ற வலைதளமா ? ஆதிரை முகம்மது அவர்களே சௌக்கியமா ?காபுா் வாசம் பண்ண அல்லா தங்களை அனுப்பவில்லை என்று நினைக்கின்றேன்.