Followers

Wednesday, January 06, 2016

முன்னுக்குப் பின் முரணான தகவலால் சந்தேகம் வலுக்கிறது



பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மாநில எஸ்பி சல்விந்தர் சிங், அவரது சமையல்காரர் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட மூவரிடமும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எத்தனை தீவிரவாதிகள் கடத்தி னார்கள் என்பது உட்பட இவர்கள் மூவரும் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்ப தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் என்ஐஏ மூத்த அதிகாரி சரத் குமார் கூறும்போது, “விசா ரணை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஊடகங்களில் வந்துள்ள தகவலின் அடிப்படையில் எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப் படும்” என்றார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் டில் உள்ள விமானப்படை தளத் துக்குள் 2-ம் தேதி அதிகாலையில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுப்பட்ட 7 பாதுகாப்புப்படை வீரர் கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர். 6 தீவிரவாதி களும் கொல்லப்பட்டனர். 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த சண்டை செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சல்விந்தர் சிங், அவரது சமையல் காரர் மதன் கோபால், நகை தொழிலாளி ராஜேஷ் வர்மா ஆகிய 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்துள்ள கருத்து கள் முரண்பட்டதாக இருப்பதால் அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோயிலுக்கு வந்ததில்லை

தான் வழக்கமாக செல்லும் பஞ்ச் பிர் தர்கா கோயிலுக்குச் சென்று திரும்பும்போது தீவிரவாதிகள் தன்னை கடத்தியதாக சல்விந்தர் சிங் கூறியிருந்த நிலையில், அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று கோயிலின் பாதுகாவலர் சோம் கூறியுள்ளார்.

சோம் மேலும் கூறும்போது, “டிசம்பர் 31-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சல்விந்தர் சிங் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசி னார். தான் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பதால் வரும் வரை கோயிலை திறந்து வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். கோயிலை மூடும் நேரம் வந்துவிட்டதாக நான் கூறியபோது, திறந்து வைத்திருக்கு மாறு கட்டளையிட்டார். ஆனால் இதற்கு முன்பு அவர் கோயிலுக்கு வந்ததில்லை. மேலும் அவரது நண்பர் ராஜேஷ் வர்மா அன்றைய தினம் 2 முறை கோயிலுக்கு வந்தார்” என்றார்.

இதனிடையே, இந்தக் கோயி லுக்கு அருகே உள்ள பாமியல் பகுதியில் பாகிஸ்தானின் எப்காட் பிராண்ட் காலணியின் பதிவுகள் இருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில்தான் இந்த கோயில் அமைந்துள்ளது.

ஏற்கெனவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச் சரிக்கை விடுத்திருந்த நிலையில், சல்விந்தர் சிங் நள்ளிரவில் ஆயுதம் இல்லாமல் கோயிலுக்கு சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் பதான்கோட் தாக்குதலில் சல்விந்தர் சிங் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்றும் தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்து வருகிறது.

இவ்வாறு முன்னுக்குப்பின் முரணான தகவல் வெளியாகி வருவதால் சல்விந்தர் சிங்கை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

தீவிரவாத தாக்குதலுக்குள்ளான பதான்கோட் விமானப்படை தளம் 4 நாட்களுக்குப் பிறகு ஊடகங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்த இடங்களை செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.

ஏகே-47 ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், கத்திகள், கமாண்டோ கத்திகள், 40 முதல் 50 கிலோ புல்லட்கள் மற்றும் 3 முதல் 4 டஜன் மார்டர்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தகவல் உதவி
தமிழ இந்து நாளிதழ
07-01-2016

No comments: