Followers

Monday, January 18, 2016

தலித் மாணவர் தற்கொலை - பிஜேபி அமைச்சர் மீது வழக்குப் பதிவு







ஹைதரபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட ரோஹித் வெமுலாவின் உடல் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக எரியூட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அவசரமாக உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? இது தற்கொலையா? அல்லது கொலையா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

மாணவர்களின் புகார் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஜேபியின் மத்திய துணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ், மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாணவர்கள் சுஷீல் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித்தாக பிறந்து விட்டால் இந்த நாட்டில் அந்த உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஆள்வோரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2 comments:

Dr.Anburaj said...

தலித்தாக பிறந்து விட்டால் இந்த நாட்டில் அந்த உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஆள்வோரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சியை குட்ட ஒரு சந்தா்ப்பம் கிடைத்தால் விட மாட்டீரே
மாணவா் கல்வியில் ஆா்வம் இல்லாதவா். ஆய்வ பட்டம் பெற கல்வி உதவித்தொகை பெறும் ஒரு மாணவா் முழு நேரமும் புத்தகமும் கையுமாக தவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பாா்கள். ஆனால் இவரோ தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அந்த விபரங்களை -தாங்கள் மறைத்தது ஏன் ??
ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாத வகையில் இவர் ஈடுபட்ட விசயங்கள் என்ன ??
யாா் மீதம் வழக்கு பதியலாம். நாளை அவர்கள் குற்றமற்றவா் என குற்றப்பத்திாிகையில் நீக்கி விடவும் வாய்ப்பு உண்டு.

மாணவரகள் தங்கள் தகுதியை உயா்த்தும் பணிகளில் முழு கவனம் செலுத்தாதவரை நிகழ்வுகளுக்கு தற்கொலைக்கும் சம்பந்தப்பட்டவா்களே முழு பொறுப்பு. ஒரு ஆராய்ச்சி மாணவா்“ தற்கொலை செய்கிறாா் என்றால் அது அவனின்ன முடிவுதான்.யாரும் பழி அல்ல.

Dr.Anburaj said...

காடையன் யாகூப் என்பவனை தூக்கில் போட்ட விசயத்திற்கு எதிா்ப்பு நடவடிக்கையில்

ஈடுபட்டு பல்கலை வளாகத்தில் போராட்டம் நடத்தியிருக்கினறாா் ரோஹித். இவருக்கு-

மாணவர்களுக்கு இது தேவையா ?

இதன் காரணமாக அகில பாரதீய வித்யாா்திகள் என்ற தேச பக்த இயக்கத்தவா்களுக்கும்

இவர்களுக்கும் மோதல். பல்கலைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி கரையில. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஒதுவது ஒழியேல் என்ற இந்து பண்பாட்டை அனுஸ்டிக்காமல் மாணவா்கள் காலித்தனம் செய்து விட்டு .....

...................... என்னமோ நடக்ககுது.