Followers

Wednesday, January 06, 2016

பதான்கோட் சண்டை: 'ராணுவம் அருகே இருக்க, என்எஸ்ஜி-யை வரவழைத்தது ஏன்?'பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை ஈடுபடுத்தியது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதான்கோட்டுக்கு அருகே ஆயிரக்கணக்கான ராணுவ வீர்ர்கள் கைவசம் இருக்கும் போது, முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக டெல்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை வரவழைக்கப்பட்டது பெரிய தவறு, மேலும், உடனடி நடவடிக்கைகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, சில என்.எஸ்.ஜி. படையினரை வரவழைத்ததால் கால தாமதம் ஏற்பட்டது என்று ராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டார நிபுணர்கள் சாடியுள்ளனர்.

இது குறித்து பதான்கோட்டுக்கு அருகே பிரிகேடியராக இருக்கும் வீரர் ஒருவர் கூறும்போது, “அவர்கள் செய்ததை எங்களில் பலரால் நம்பவே முடியவில்லை. அருகிலேயே இரண்டு இன்ஃபாண்ட்ரி பிரிவுகளும், இரண்டு ஆயுதப் படைப்பிரிவுகளும் உள்ளன. வடக்கு ராணுவ தலைமைச் செயலகமும் உள்ளது. இந்தப் படையினர் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் விமானப்படை தளத்துக்கு என்.எஸ்.ஜி. படையினர் சிலரை வரவழைத்தது காலதாமதத்துக்கே வழிவகை செய்தது” என்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கடோச், கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்க என்.எஸ்.ஜி. கமாண்டோ பயன்படும், ஒட்டுமொத்த பகுதியையும் அதனால் கையாள முடியாது. என்.எஸ்.ஜி.யை அனுப்பியதில் தீங்கொன்றும் இல்லை. ஆனால், திட்டவட்டமான கட்டளைகளும், கட்டுப்பாடும் இருப்பது அவசியம். எல்லையோர காவல் படை, என்.எஸ்.ஜி. ஆகியவற்றை மனம் போன போக்கில் அழைத்து விட முடியாது. இங்கு ஏதேனும் கட்டளைகளும், வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் இருந்ததா? இதற்கெல்லாம் ராணுவமே சிறந்தது” என்றார் அவர்.

முன்னாள் ராணுவ தளபதி வி.பி.மாலிக், 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “என்.எஸ்.ஜி. சரியான தேர்வா என்பது எனக்கு ஐயமாக உள்ளது. அவர்கள் டெல்லியிலிருந்து வந்தனர். மாறாக உள்ளூரை நன்கு அறிந்த படையினரிடமே பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றார்.

ராணுவ சேவையில் இருக்கும் ஒரு அதிகாரி கூறும்போது, “10 சிறப்புப் படைப் பிரிவுகள் கொண்ட ராணுவம், அல்லது குறைந்தது உதாம்பூரில் இருந்து ஒரேயொரு படை பதான்கோட்டுக்கு 2 மணி நேரங்களில் வந்திருக்க முடியும். நாங்கள் இத்தகைய திடீர் தாக்குதல்களை முறியடிக்கவே சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளோம்.

மாறாக நீங்கள் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களை அனுப்பினீர்கள். அவர்கள் வெறும் 160 கமாண்டோக்களுடன் 24 சதுர கிலோமீட்டர் பகுதியை அவர்களால் சிறப்பாக பாதுகாக்க முடியும் என்று யார் கூறினார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதாவது உள்ளூர் ராணுவப்படை இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள தயாராகப் பயிற்சியில் இருந்துள்ளது, ஆனால் சமயம் வரும்போது இவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாதது பெரும் தவறு என்று பலரும் கருதுகின்றனர்.

முன்னாள் ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநரான லெப்.ஜெனரல் விநோத் பாட்டியா 'தி இந்து' (ஆங்கிலம்) இதழில் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எப்படிக் கையாளப்பட வேண்டுமோ அப்படி கையாளப்படவில்லை. உண்மை என்னவெனில் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ராணுவம் அழைக்கப்பட்டிருந்தால் அதன் பலத்துக்கு இன்னும் விரைவில் முறியடிக்கப்பட்டிருக்கும்” என்றார்

"இந்திய ராணுவம் பல ஆண்டுகளாக பயங்கரவாத எதிர்ப்புச் சண்டைகளை திறம்பட கையாண்டு வருகிறது. ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் உயிரிழப்புகளும் கூட இருந்திருக்காது. காஷ்மீருக்கு எத்தனை முறை இத்தகைய பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்? அங்கு ராணுவம்தான் இதனை திறம்பட முறியடித்து வருகிறது” என்று பணியிலிருக்கும் மற்றொரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ஏகப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கையில் ஈடுபட்ட போது யார் இந்த அமைப்புகளுக்கு கட்டளைகளை வழங்கினர்? அதாவது யார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ
06-01-2016

நான் முன்பு எதை எல்லாம் சொன்னேனோ அது உண்மைதான் என்பதை இந்த கட்டுரை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இன்னும் உண்மைகள் தோண்ட தோண்ட வரும்.

3 comments:

சுவனப் பிரியன் said...


இதோ மற்றுமொரு ஆதாரம்....

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி. சல்விந்தர் சிங் அளித்த பேட்டியில், நான் நிரபராதி, என்னை சந்தேகப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பஞ்சாப் மாநிலம், குர்தாஸ் பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சல்விந்தர் சிங் பணியாற்றினார். அவருக்கும் கடத்தல்காரர்களுக் கும் நெருங்கிய தொடர்பு இருப்ப தாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அண்மையில் அவர் ஜலந்தரில் உள்ள 75-வது பட்டாலியனின் உதவி கமாண்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் குர்தாஸ்பூர் அருகேயுள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார். அவருடன் சமையல்காரர் மதன்கோபால், நண்பர் ராஜேஷ் வர்மா ஆகி யோரும் சென்றனர்.

அப்போது எஸ்.பி.யின் காரை தீவிரவாதிகள் வழிமறித்து ஏறி யுள்ளனர். சிறிது தொலைவு சென்ற பிறகு எஸ்.பி.யையும் அவரது சமையல்காரரையும் கீழே தள்ளி விட்டு, ராஜேஷ் வர்மாவை மட்டும் பிணைக் கைதியாக பிடித்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரையும் கீழே தள்ளிவிட்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

கால் டாக்ஸி டிரைவர் கொலை

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வுக்குள் ஊடுருவிய தீவிர வாதிகள் முதலில் ஒரு கால் டாக்ஸி யில் பயணம் செய்துள்ளனர். அவர் கள் சமூகவிரோதிகள் என்பதை கால் டாக்ஸி டிரைவர் கண்டுபிடித்து அவர்களோடு போராடியுள்ளார். இதில் சாலையில் இருந்து பள்ளத் தில் இறங்கிய கார் ஒரு மரத்தில் மோதி சேதமடைந்தது. அந்த கால் டாக்ஸி டிரைவரை தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்து விட்டனர்.

அதன்பிறகே போலீஸ் எஸ்.பி. காரை வழிமறித்து கடத்தியுள்ளனர். அதில் ‘சைரன்’ இருந்துள்ளது. இதனால் போலீஸ் சோதனை சாவடிகளில் தீவிரவாதிகள் எவ்வித சோதனையும் இன்றி எளிதாகக் கடந்து சென்றுள்ளனர்.

கடத்தல் குறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு எஸ்.பி. சல்விந்தர் சிங் சற்று தாமதமாகவே தகவல் தெரிவித்துள்ளார். மேலும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசியுள்ளார். இதனால் தீவிரவாதி களை பின்தொடர்வதில் கால தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது.

இதுதொடர்பாக எஸ்.பி. சல்விந்தர் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் செய்தி நிறு வனங்களுக்கு அளித்த விளக்கத் தில் கூறியிருப்பதாவது:

நான் உயிரோடு இருப்பதால் எல்லாரும் என் மீது சந்தேகப்படு கிறார்கள். நான் தவறு செய்திருந் தால் என்னை தூக்கில் போடுங்கள். கடத்தல்காரர்களோடு எனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது பொய் குற்றச்சாட்டு. என் மீதான புகார்களில் ஒன்றுகூட நிரூபிக்கப் படவில்லை.

என்னை கடத்திய போது, நான் போலீஸ் அதிகாரி என்பது தீவிரவாதிகளுக்கு தெரி யாது. அதனால் எனது கண்கள், கை, கால்களை கட்டி கீழே தள்ளி விட்டுவிட்டனர். என்னிடம் 3 செல் போன்கள் இருந்தன. அதில் 2 செல் போன்களை தீவிரவாதிகள் எடுத்துக் கொண்டனர்.

கீழே தள்ளியபிறகு தீவிரவாதி களிடம் இருந்து தப்பிக்க 2 கி.மீட்டர் தொலைவு ஓடினேன். அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றபிறகு என்னிடம் இருந்த 3-வது செல் போன் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தேன். இருட்டாக இருந்ததால் தீவிர வாதிகள் எத்தனை பேர் இருந்தனர் என்பதை என்னால் அடையாள காண முடியவில்லை. 4 அல்லது 5 பேர் இருந்திருக்கலாம்.

கோயிலுக்கு சென்றதால் என் னிடம் துப்பாக்கியும் இல்லை. அத னால் தீவிரவாதிகளை சுட முடிய வில்லை. என்னுடைய தகவலால் தான் பதான்கோட் விமான நிலையம் பேராபத்தில் இருந்து தப்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் எஸ்.பி.யின் கார் பதான் கோட் விமானப்படைத் தள சுற்றுச் சுவர் அருகே நிறுத்தப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

பதான்கோட் விமானப் படைத் தள தாக்குதல் சம்பவத்தில் பஞ்சாப் போலீஸார் மீது மத்திய பாதுகாப்புப் படையினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் இந்து நாளிதழ
06-01-2015

தீவிரவாதி களிடம் இருந்து தப்பிக்க 2 கி.மீட்டர் தொலைவு ஓடினேன். அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றபிறகு என்னிடம் இருந்த 3-வது செல் போன் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தேன். --------------கிழே விழுந்த உடனேயே போலிசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்திருக்கலாமே?2 கிலோ மீட்டர் ஓடிப்போய் அதன்பிறகு ஏன் போன் செய்தார் அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை காத்திருந்தாரா?

Dr.Anburaj said...


குளறுபடிகள் உள்ளன.என்பதை பாதுகாப்பு அமைச்சா் ஒப்புக் கொண்டுள்ளாா்.

சம்பளத்திற்கு மாரடிப்பவனுக்கும் மத வெறி பித்து பைத்தியம் பிடித்தவா்களுக்கும்-லட்சியவாதிகளுக்கும் - நிச்சயம் வேறுபாடு உள்ளது. இதுதான் காரணம்

Dr.Anburaj said...


சுவனப்பிாியன் தாங்கள் பாதுகாப்பு துறையில் நிபுணரா ? இந்த கேள்விக்கு விடைகாணக் கூடிய தகுதி தங்களுக்கு இல்லை.தகுதியின்றி கேள்விகளைச் சுமக்க வேண்டாம்.சம்பந்தப்பட்டவா்கள் பாா்த்துக் கொள்வாா்கள்.