விமான பயணங்களில் விபத்தால் பல ஆயிரம் உயிர்கள் வருடா வருடம் இந்த உலகை விட்டு செல்வதை அறிவோம். இதனை தடுக்க இனி வருங்கால வி...
Posted by Nazeer Ahamed on Saturday, January 16, 2016
விமான பயணங்களில் விபத்தால் பல ஆயிரம் உயிர்கள் வருடா வருடம் இந்த உலகை விட்டு செல்வதை அறிவோம். இதனை தடுக்க இனி வருங்கால விமான தயாரிப்பு கம்பெனிகள் இந்த காணொளியில் உள்ளதைப் போன்ற விமானங்களையே தயாரிக்க முனைவர். பயணிகளும் இது போன்ற பாதுகாப்பு கட்டமைப்பு வசதியுடைய விமானங்களையே அதிகம் தேர்ந்தெடுப்பர். இனி வருங்காலத்தில் பழைய விமானங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு விற்கும் காலமும் வரும். சில செல்வந்தர்கள் கூட தங்களின் பயணத்திற்கு பழைய விமானங்களை வாங்கலாம். நான்கு சக்கர வாகனம் போல் வருங்காலத்தில் ஊருக்கு ஒரு விமானம் நிறுத்தப்படுவதை பார்க்கும் காலம் தூரமில்லை
---------------------------------------------
உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.''
குர்ஆன்(96:5)
''அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக. அவை பூத்துக் காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. விசுவாசம் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன''
குர்ஆன்(6:99)
''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
ஆதாரம்: அபு தாவுத், முஸ்லிம்
#அறிவியல் #விமானம் #TECHNOLOGY
1 comment:
சாியான மடையன் போல் எழுதுகின்றீா்கள். விமானத்திற்கும் தங்களின் குரானில் சொல்லப்பட்ட கருத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஏதோ விமானத்தை கண்டுபிடித்தது மகம்மது என்று சொல்ல வந்து விடடீர்கள் போல்என்று விரைவாகப் படித்தேன்.வழங்கில்போல் வெத்து வேட்டு.
.
01.நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர்.
மலக்குகள் என்பது பறவைகளா ? இறக்கைகளை ஒர் நாளையில் கோடிக்கணக்கான பறவைகள் கோடிக்கணக்கான முறை விாிக்கின்றன. இதற்கும் அறிவைத்தேடுகின்றவனுக்கும் என்ற உறவு. விளங்கவில்லை.
02.அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன.
பாவமன்னிப்பு கோரும் அறிவு அவைகளுக்கு உண்டா ? அறிஞனுக்கு நியாயத்தீா்ப்புநாள் உண்டா ? மீன்கள் பாவமன்னிப்பு கோாி மன்னிப்பு பெற்ற அறிஞா்கள் விபரம் தங்களிடம் உள்ளதா ?
03. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.
அறிஞனை விட ஆபித் தான்சிறந்தவன். ஆபித் கதிரவன்.அறிஞன் சந்திரன் போல்.
கவுண்டமணி செந்தில் காமொடி போல்சிாிப்பு கூட வரவில்லை.
Post a Comment