'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, January 13, 2016
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தானா?
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தானா? இதர எத்தனையோ வீர விளையாட்டுகள் வழக்கொழிந்தது பற்றி யாரும் ஏன் வாய் திறப்பதில்லை? ‘இடைக்காலத் தடை’ என்ற தீர்ப்பு கேட்டு எத்தனை வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு உறங்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாமலா இருக்கும்? படித்துப் பட்டம் பெற்று, நல்ல வேலையில் உள்ள, நடுத்தரவர்க்க, பணக்காரர்கள், தொழிலதிபர்கள், உயர் சாதியினர் ஏன் மாடு பிடித்தலில் ஈடுபடுவதில்லை? ஜல்லிக்கட்டில் ஈடுபடும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள்தான் வீரம் செறிந்த தமிழர்களா? மனிதன் விலங்குகளோடு சண்டையிடுவது எத்தகைய அறிவுடைமை? சமதிறன் உள்ள இருவர் மத்தியில் நடைபெறுவதுதானே வீர விளையாட்டு? ஜல்லிக்கட்டை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்து ரசிக்கும் மக்களுக்கு, மாடு பிடிக்கும் வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் மன அவஸ்தை தெரியுமா? ஜல்லிக்கட்டு காலம் கடந்து வாழ்வதற்கு தமிழர்களின் வீரம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றோடு முடிச்சுப் போட வேண்டியதில்லை.
சமூக பொருளாதாரக் காரணிகளே ஜல்லிக்கட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காரணி. இதனை ஆய்வு செய்ய வேண்டும். இதற்குக் கலாச்சார முலாம் பூசிக் கொம்பு சீவி விடுகிறோம். காங்கேயம் காளைகளை வெறும் ஜல்லிக்கட்டை வைத்து மட்டுமே காப்பாற்ற முடியாது.
பால் மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்காக எருமைகள் வளர்க்கப்படுவதால் 1997-ம் ஆண்டுமுதல் மட்டும் இதன் எண்ணிக்கை 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதே 1997 முதல் கால்நடைகளை உழவு உள்ளிட்ட பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது 28 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. கலாச்சாரம் என்பது தனித்து இயங்குவது அல்ல. வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது.
- என்.மணி, ஈரோடு.
***
‘அது இருக்கட்டும், முதல்ல கக்கூஸ் கட்டுங்க’ கட்டுரை இன்றைய ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம். கோடிகளைக் கொட்டி கோயில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் கட்டுவதை விடுத்து, ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்தினால், இந்தியா வல்லரசாவதை நாம் காணலாம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அந்தக் கடவுள் மக்களின் மனங்களில்தான் வாழப் பிரியப்படுகிறார், அவர்கள் கட்டுகின்ற கட்டிடங்களில் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
- டென்னி அருள் தாமஸ், மானாமதுரை.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-01-2016
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தானா? இதர எத்தனையோ வீர விளையாட்டுகள் வழக்கொழிந்தது பற்றி யாரும் ஏன் வாய் திறப்பதில்லை? ‘இடைக்காலத் தடை’ என்ற தீர்ப்பு கேட்டு எத்தனை வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு உறங்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாமலா இருக்கும்? படித்துப் பட்டம் பெற்று, நல்ல வேலையில் உள்ள, நடுத்தரவர்க்க, பணக்காரர்கள், தொழிலதிபர்கள், உயர் சாதியினர் ஏன் மாடு பிடித்தலில் ஈடுபடுவதில்லை? ஜல்லிக்கட்டில் ஈடுபடும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள்தான் வீரம் செறிந்த தமிழர்களா? மனிதன் விலங்குகளோடு சண்டையிடுவது எத்தகைய அறிவுடைமை? சமதிறன் உள்ள இருவர் மத்தியில் நடைபெறுவதுதானே வீர விளையாட்டு? ஜல்லிக்கட்டை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்து ரசிக்கும் மக்களுக்கு, மாடு பிடிக்கும் வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் மன அவஸ்தை தெரியுமா? ஜல்லிக்கட்டு காலம் கடந்து வாழ்வதற்கு தமிழர்களின் வீரம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றோடு முடிச்சுப் போட வேண்டியதில்லை.
சபாஷ்சபாஷ் சாியான கருத்து.
ஜல்லிக்கட்டு ஆடும் பிறாமணா்களைக் கட்டதுண்டா ?
மக்கள் பினதங்கிய நிலையில் இருத்தி வைக்க உருவாக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் இவை. மனித வளத்தை பாழாக்கும் இத்தகைய விளையாட்டுக்கள்இ தேவையில்லை.
//சபாஷ்சபாஷ் சாியான கருத்து.
ஜல்லிக்கட்டு ஆடும் பிறாமணா்களைக் கட்டதுண்டா ?
மக்கள் பினதங்கிய நிலையில் இருத்தி வைக்க உருவாக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் இவை. மனித வளத்தை பாழாக்கும் இத்தகைய விளையாட்டுக்கள்இ தேவையில்லை.//
அப்பஹ்! இப்பதாம்பா டாக்டருக்குக் கொஞ்சம் கொம்சம் கண் திறக்க ஆரம்பித்துள்ளது...!
இப்பதாம்பா டாக்டருக்குக் கொஞ்சம் கொஞ்சம் கண் திறக்க ஆரம்பித்துள்ளது...!
பாராட்டி பதிவு அளித்தமைக்கு நன்றி.
நான் எப்பொழுதும் கண்களையும் காதுகளையும் மனதையும் திறந்து வைத்துள்ளேன்.
தங்கள் கண்கள் காதுகள் மனம் ஆகியவற்றிற்கு அரேபிய திரை உள்ளது.
அதை நீக்கி விட்டு உலகைக் காணுங்கள்.அரேபிய கலாச்சாரம்தான் ஆண்டவனின் ஒரே வழி என்பது மகா முட்டாள்தனமானது.மூடநம்பிக்கையாகும்.அதை தொலையுங்கள்.
Post a Comment