'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, January 20, 2016
எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!
எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!
கடந்த 4 ஆண்டுகளில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்!
டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!
தமிழ் இந்து நாளிதழ்
21-01-2016
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஜஹாதி காடையா்களால் கொல்லப்பட்ட உயிா்களின் எண்ண்க்கை மிக மிக மிக அதிகம்.
ஒவ்வொரு சமூதாயத்திற்கும் ஒரு வித நோய். சமூக பிரச்சனைகள் இல்லாத நாடுகள் இல்லை.மக்கள்தான் முன்னேற்றத்தின் விலை கொடுத்து முன்னேற வேண்டும். சதா பாா்ப்பனா்கள் ....... ஆாியா்கள் .... என்று எழுதி இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஏமாற்றும் கீழ்தரமான வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
நமது பண்பாட்டின் சிறப்புமற்றும் நமது முன்னோா்களின் சாதனை ( அரேபியா்கள் அலல)
ரிக் வேதத்தில் ஒளியின் வேகம்
POSTED BY தர்மபூபதி ஆறுமுகம்
பாரதம் உலகிற்கு எண்ணற்ற கொடைகளை அளித்துள்ளது. வானவியல், மருத்துவம், கணிதவியல், மற்றும் அறிவியலில் வியத்தகு சாதனைகளைப் படைத்திருக்கிறது. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது பாரதீயரே. ஒளியின் வேகத்தை 1865 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த கணித மேதையும் பௌதீக ஆராய்ச்சியாளருமான ஜேம்ஸ்கிளர்க்மேக்ஸ்வெல் என்பவர் கண்டுபிடித்தார். நவீன அறிவியலின் படி ஒளியின் வேகம் 186000 மைல்கள் / செகண்ட்ஸ் இது நவீன அறிவியலின் கண்டுபிடிப்பாகும்.
ஆனால் ஒளியின் வேகம் குறித்த முதல் மதிப்பீடு பழமை வாய்ந்த ஹிந்து வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளியின் வேகம் குறித்த விபரத்தை நாம் முதன் முதலாக வேத கால அறிஞரும் ஞானியுமாகிய சாயனாச்சார்யா அவர்கள் ரிக்வேதத்திற்கு எழுதிய வர்ணனை மூலமாக அறிகிறோம். 14ஆம்நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யத்தை அலங்கரித்த மன்னன் புக்காவின் அமைச்சரவையின் முக்கிய மந்திரி சாயனாச்சார்யா ஆவார்.
சூரிய ஒளியின் கடக்கும் வேகம் ஒரு நிமிஷர்தா நேர இடைவெளியில் 2202 யோஜனா தூரம் கடக்கும் என்று சாயனாச்சார்யா தனது வர்ணனையில் குறிப்பிடுகிறார்.அதாவது நிமிஷர்த என்பது நிமிஷ அர்தா என்ற வார்த்தையின் கூட்டுச் சொல் ஆகும். அர்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள். நிமிஷாவில் பாதி. (ஆங்கில நிமிடத்தையும் இதையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்) சமஸ்கிருதத்தில் நிமிர்ஷதா என்று குறிப்பிடுவது பார்ப்பதற்குள் நகர்ந்து செல்வது என்ற பொருள் படும்படியான கண் மூடித் திறப்பதற்குள் என்று பொருள் கொள்ளலாம். பண்டைய வேதங்களில் நிமிஷா என்பது கால அளவைக் குறிக்கவும் ( Unit of Time ), யோஜனா என்பது பயண தூரத்தை (Unit of Distance) குறிக்கும் அளவாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
ரிக் வேதத்தில் அமைந்துள்ள வர்ணனைகளை ஆராய்ந்து ஒளியின் வேகம் குறித்த ஆய்வினை நடத்திய எஸ் எஸ் தே மற்றும் வர்த்தக் ஆகியோர் அது குறித்த கணித முடிவுகளை கீழ்கண்டவாறு ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். ரிக்வேதம் பாடல் 1:50 நான்காவது வசனம்
तरणिर्विश्वदर्शतोजयोतिष्क्र्दसिसूर्य |
विश्वमाभासिरोचनम |
taraNir vishvadarshato jyotishkrdasi surya |
vishvamaa bhaasirochanam ||
ரிக் வேதத்தில் ஒளியின் வேகம்
POSTED BY தர்மபூபதி ஆறுமுகம்
பாரதம் உலகிற்கு எண்ணற்ற கொடைகளை அளித்துள்ளது. வானவியல், மருத்துவம், கணிதவியல், மற்றும் அறிவியலில் வியத்தகு சாதனைகளைப் படைத்திருக்கிறது. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது பாரதீயரே. ஒளியின் வேகத்தை 1865 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த கணித மேதையும் பௌதீக ஆராய்ச்சியாளருமான ஜேம்ஸ்கிளர்க்மேக்ஸ்வெல் என்பவர் கண்டுபிடித்தார். நவீன அறிவியலின் படி ஒளியின் வேகம் 186000 மைல்கள் / செகண்ட்ஸ் இது நவீன அறிவியலின் கண்டுபிடிப்பாகும்.
ஆனால் ஒளியின் வேகம் குறித்த முதல் மதிப்பீடு பழமை வாய்ந்த ஹிந்து வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளியின் வேகம் குறித்த விபரத்தை நாம் முதன் முதலாக வேத கால அறிஞரும் ஞானியுமாகிய சாயனாச்சார்யா அவர்கள் ரிக்வேதத்திற்கு எழுதிய வர்ணனை மூலமாக அறிகிறோம். 14ஆம்நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யத்தை அலங்கரித்த மன்னன் புக்காவின் அமைச்சரவையின் முக்கிய மந்திரி சாயனாச்சார்யா ஆவார்.
சூரிய ஒளியின் கடக்கும் வேகம் ஒரு நிமிஷர்தா நேர இடைவெளியில் 2202 யோஜனா தூரம் கடக்கும் என்று சாயனாச்சார்யா தனது வர்ணனையில் குறிப்பிடுகிறார்.அதாவது நிமிஷர்த என்பது நிமிஷ அர்தா என்ற வார்த்தையின் கூட்டுச் சொல் ஆகும். அர்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள். நிமிஷாவில் பாதி. (ஆங்கில நிமிடத்தையும் இதையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்) சமஸ்கிருதத்தில் நிமிர்ஷதா என்று குறிப்பிடுவது பார்ப்பதற்குள் நகர்ந்து செல்வது என்ற பொருள் படும்படியான கண் மூடித் திறப்பதற்குள் என்று பொருள் கொள்ளலாம். பண்டைய வேதங்களில் நிமிஷா என்பது கால அளவைக் குறிக்கவும் ( Unit of Time ), யோஜனா என்பது பயண தூரத்தை (Unit of Distance) குறிக்கும் அளவாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
ரிக் வேதத்தில் அமைந்துள்ள வர்ணனைகளை ஆராய்ந்து ஒளியின் வேகம் குறித்த ஆய்வினை நடத்திய எஸ் எஸ் தே மற்றும் வர்த்தக் ஆகியோர் அது குறித்த கணித முடிவுகளை கீழ்கண்டவாறு ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். ரிக்வேதம் பாடல் 1:50 நான்காவது வசனம்
तरणिर्विश्वदर्शतोजयोतिष्क्र्दसिसूर्य |
विश्वमाभासिरोचनम |
taraNir vishvadarshato jyotishkrdasi surya |
vishvamaa bhaasirochanam ||
மந்திரி சாயனாச்சார்யா அவர்கள் மேற்கண்ட பாடலுக்கு தனது வர்ணனையை கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
tatha ca smaryate yojananam. sahasre dve dve sate dve ca yojane
ekena nimishardhena kramaman.
அதாவது “சூரிய ஒளியின் கடக்கும் வேகம் நிமிர்ஷதாவிற்கு 2202 யோஜனா ” என்பதை நினவிற் கொள்ள வேண்டும் என்று சாயனாச்சார்யா கூறுகிறார்.
மகாபாரதத்தில் சாந்தி பர்வம் மோக்ஷ தர்ம உப பர்வத்தில் நிமிஷா பற்றிய கால நேர அளவுபற்றிய குறிப்பு வருகிறது.
“யோஜநாநாம் ஸகஸ்ரேத்தி த்விசத த்வியோஜநம்” (சுலோகத்தின் பகுதி)
அதாவது 2202 யோஜணை அதாவது 189547 மைல்கள்.அடுத்த பகுதியில் அரை நிமிஷத்தில் இவ்வளவு தூரம் கடக்கும் அந்த ஒளிக்கு வணக்கம் என்று சொல்லப் படுகின்றது.
15 நிமிஷா = 1 காஷ்தா
30 காஷ்தா = 1 கால
30.3 கால = 1 முகூர்த்த
30 முகூர்த்தம் = 1 பகல் இரவு
ஒரு பகல் இரவு என்பது 24 மணி நேரம் ஆகும்.
ஆக 24மணி நேரம் = 30 x 30.3 x 30 x 15 நிமிஷா ஆகும்
நிமிஷாவில் குறிப்பிடப்படும் போது 409050 நிமிஷா ஆகும்
அதே போன்று 1 மணி நேரம் = 60 x 60 = 3600 செகண்ட்ஸ்
24 மணி நேரம் = 24 x 3600 செகண்ட்ஸ் = 409050 நிமிஷா
409050நிமிஷா= 86,400 செகண்ட்ஸ்
1 நிமிஷா = 0.2112 செகண்ட்ஸ் (கண் மூடி திறக்கும் நேரம்)
1/2 நிமிஷா(நிமிர்ஷதா ) = 0.1056 செகண்ட்ஸ்
யோஜனா தூரத்தைக் குறிக்கும் அளவு(unit of distance)
விஷ்ணு புராணத்தில் (தொகுதி 1 அத்தியாயம் 6) யோஜனா பற்றிய குறிப்பு வருகிறது.
10 பராமனுஷ் = 1 பராசூக்ஷ்ம
10 பராசூக்ஷ்ம = 1 தராஸ்ரேனு
10 தராஸ்ரேனு = 1 மஹிராஜஸ் (particle of dust)
10 மஹிராஜஸ் = 1 பலாக்ரா (hair’s point)
10 பலாக்ரா = 1 லிக்க்ஷா
10லிக்க்ஷா = 1 யுகா
1o யுகா = 1 யவோதரா (heart of barley)
10 யவோதரா = 1 யவா (barley grain of middle size)
10 யவா = 1 அங்குலா (1.89 cm or approx 3/4 inch)
6 விரல் = 1 பாத (the breadth of it)
2 பாத = 1 விடாஸ்டி (span)
2 விடாஸ்டி = 1 ஹஸ்தா (cubit)
4 ஹஸ்தா = தணு, தண்டா(அ) பௌருஷா (a man’s height), அ 2 நர்கஸ் = 6 அடி
2000 தணுஸ் = 1 கௌயுதி (distance to which a cow’s call or lowing can be heard) = 12000 அடி
4 கௌயுதி = 1 யோஜனா = 9.09 மைல்கள்
இந்த அளவைகளை வைத்து ஒளியின் வேகம் தற்போதைய நவீன அளவை (யூனிட்) கணக்கிடும் போது,
= 2202 x 9.09 மைல்கள் / 0.1056 செகண்ட்ஸ்
= 20016.18 மைல்கள் / 0.1056 செகண்ட்ஸ்
= 189547 மைல்கள்/ செகண்ட்ஸ்!!
நவீன அறிவியலின் படி ஒளியின் வேகம் 186000 மைல்கள் / செகண்ட்ஸ்
குறிப்பு: இந்த இரண்டு மதிப்பீடுகளுக்கும் சிறிய வித்தியாசம் இருப்பது எங்களின் கணக்கீட்டு முறையில் வேதங்களின் அளவீட்டை தற்போதைய அளவீட்டிற்கு துல்லியமாக மாற்றம் செய்வதில் உத்தேசமாக நாங்கள் கணக்கிட்டது தான் காரணமே தவிர பண்டைய கால கணக்கில் எந்த தவறும் இல்லை. உதாரணத்திற்கு ஒரு அங்குலம் என்பதை ¾ அங்குலம் என்று தோராயமாக குறிப்பிட்டுள்ளோம். உண்மையில் அங்குலம் என்பது துல்லியமாக முக்கால் அங்குலமல்ல என்று இதன் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கட்டுரைக்கு உதவியவை:
http://www.hitxp.com/articles/veda/light-speed-rigveda/
டாக்டர் வி.எஸ்.நரசிம்மன் எழுதிய பாரதீய விஞ்ஞான சாதனைகள்
Eternally Tallented India 108 FACTS
அம்மா என்றால்……
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.அம்மா என்றால்……
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
மகன் திகைத்து நின்றான்.
இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.
நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.
எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.
நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் என்றான் அறிஞர் அனோன்.
கும்பமேளாவில் தலித் சகோதரிகள்
”என் வாழ்நாளில் இப்படி ஒரு புனித அனுபவம் எனக்குக் கிடைக்கும் என்று கனவில் கூட எண்ணியதில்லை. இதை சாத்தியமாக்கிய பெரியோர்களுக்கு மிக மிக நன்றி” என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் 50-வயதான உஷா சமவுர். ”தலைமுறை தலைமுறைகளாக, எனது சமூகத்தில் முதன் முதலாக இந்தப் புனித நிகழ்வில் பங்கு கொள்பவள் நானாகத் தானிருக்கும். மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன்” என்று நெகிழ்கிறார் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் டாலி.
இந்த வருடத்திய கும்பமேளாவில், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமத்தில் இப்பெண்களைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட தலித் சகோதரிகள் புனித நீராடினர். சடங்குகளிலும் பூஜைகளிலும் பங்கு கொண்டனர். பின்னர், சுவாமி நரேந்திரகிரியின் தலைமையில் இயங்கும் புகழ்பெற்ற பாகபன்பாரி அகாரா என்ற பாரம்பரிய மடத்தில் அனைத்து பக்தர்களுடனும் அமர்ந்து விருந்து உண்டனர். மகாமண்டலேஸ்வர் பட்டம் பூண்ட மடாதிபதிகளும், நிரஞ்சனி அகாரா உள்ளிட்ட பிரபல மடங்களைச் சேர்ந்த துறவிகளும் இந்தப் பெண்மணிகளுக்கு ஆசி வழங்கினர்.
புனிதமான, இந்து சமுதாயம் என்றென்றைக்கும் பெருமைப் படக் கூடிய முன்னுதாரணமான இத்தகைய ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியவர் டாக்டர் பிந்தேஷ்வர் பாடக் என்ற சமூக சேவகர். ”கழிப்பறை மனிதர்” என்று உலகங்கும் பிரபலமாக அறியப் படும் டாக்டர் பாடக், சுலப் இண்டர்நேஷனல் (Sulabh International) என்ற சுகாதார சமூகசேவை அமைப்பை நிறுவியர். இந்தியாவின் பல பெருநகரங்களிலும், சிற்றூர்களிலும் கூட சுலப் அமைப்பினர் நடத்தும் கழிப்பறைகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
நவீன இந்தியாவில் காந்தியைத் தவிர்த்து கழிப்பறை என்ற அதி முக்கியமான சுகாதாரத் தேவை பற்றி அனேகமாக எந்தப் பெரிய தலைவரும் சிந்தனையாளரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. தொற்று நோய்களுக்கும், புண்பிடித்த உடல்களுக்கும், பல ஆரோக்கிய சீர்கேடுகளுக்கும் எல்லாம் அடிப்படைக் காரணம் கழிப்பறை சுகாதாரம் பற்றிய பிரக்ஞை கூட இந்தியர்களிடம் இல்லாதிருந்ததே என்பதை காந்தி அறிந்திருந்தார். அத்துடன், மனிதக் கழிவை அகற்றுதல் என்ற பணியில் அடிமைகளாகப் பிணைக்கப் பட்டிருந்த ஏராளமான தலித் சமுதாய மக்களின் சமூக விடுதலையும் இதில் அடங்கியுள்ளது என்பதையும் புரிந்து கொண்டிருந்தார். அதனால் தான் மீண்டும் மீண்டும், சில சமயங்களில் காங்கிரசின் தளுக்கான தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எரிச்சலூட்டும் வகையில், அது குறித்துப் பேசியும் எழுதியும் வந்தார். காங்கிரஸ் மாநாடுகளிலும் முகாம்களிலும் குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு தாமே கழிப்பறைகளைச் சுத்திகரிப்பவராக வலம் வரும் காந்தியின் சித்திரம் அந்தப் பேச்சுக்களை விடவும் அதிகமாக நம் நெஞ்சில் பதிந்து விட்ட ஒன்று. தமது சொற்களுக்கு செயல்வடிவம் அளிக்க ஒருபோதும் அவர் தவறியதில்லை என்பதை என்றென்றும் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் சித்திரம் அது.
அத்தகைய காந்திய சிந்தனைகளால் உந்தப் பட்ட மாபெரும் இலட்சியவாதி பிந்தேஷ்வர் பாடக். சுகாதாரம், ஒடுக்கப் பட்ட மக்களின் சமூக விடுதலை என்ற இரண்டு நோக்கங்களையும் இணைத்ததாகவே அவரது செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. அவரது அமைப்பு தொடர்ந்து மனிதக் கழிவை அகற்றும் பணியில் தலித் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இன்னும் ஈடுபடுத்தப் படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது. இது தொடர்பான கடுமையான சட்டங்களைப் பிறப்பிக்கவும், அவற்றை நடைமுறைப் படுத்தவும் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வருகிறது. 1970ம் ஆண்டு தொடங்கி, இந்தியா முழுவதும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள ’பக்கெட் டாய்லெட்’ எனப்படும் பழைய பாணி கழிப்பறைகளை நீரூற்றிக் கழுவும் ‘ஃப்ளஷ் டாய்லெட்’ வகைக் கழிவறைகளாக இந்த அமைப்பு மாற்றியிருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு சமூக அடிமைத் தளையிலிருந்து விடுதலை கிடைக்கச் செய்துள்ளது. அவர்கள் இந்த தேசத்தின் மற்ற குடிமக்களைப் போலவே சம உரிமைகளும், மதிப்பு மிக்க வாழ்வும் வாழ்வதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளது போல, பாதாள சாக்கடைகளை நவீன தொழில் நுட்பம் மூலம் முற்றிலும் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் திட்டங்களை அரசு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் இந்த அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
கும்பமேளாவில் புனித நீராடிய அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் சமூக மீட்சிக்கான முன்னுதாரணங்கள். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மற்றும் டோங்க் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ராஜஸ்தானின் உட்பகுதியில் சமீபத்திய காலம் வரை சாதிய ஒடுக்கு முறையும், கண்மூடித்தனமான கட்டுப் பாடுகளும் கோலோச்சி வந்த பிரதேசம் இது. பதினைந்தாண்டுகள் முன்பு வரை இப்பிரதேசத்தில் மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப் பட்டிருந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கான மதச் சடங்குகளை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை. சுலப் அமைப்பு அவர்கள் விடுதலைக்கு வழி செய்தது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது அவர்களது சமய உரிமைகளையும் பாராட்டத் தக்க வகையில் முன்னெடுத்திருக்கிறது.
முன்னாள் துப்புரவுப் பணியாளர்களும் நமது சமூகத்தின் பிரிக்க முடியாத உறுப்பினர்களே. அவர்கள் எந்த வகையிலும் தீண்டத் தகாதவர்கள் அல்ல என்பதை உரத்துப் பறைசாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த வருடக் கும்ப மேளாவில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம்” என்கிறார் பாடக். இந்த நற்பணி இத்துடன் நின்று விடக் கூடாது. கும்பமேளா போன்ற மாபெரும் புனித நிகழ்வுகளில் ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் அதிகமான தலித் மக்களை பங்கேற்கச் செய்வதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இது இருக்கட்டும். பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தினால் சிறைப்படுத்தப் பட்டு, இருளில் அமிழ்த்தப் பட்டு, நசுக்கப் பட்டுக் கிடந்து மீண்டவர்கள் அந்த சகோதரிகள். இந்தியத் திரு நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் வந்து குவிந்துள்ள அனைத்து சமூக மக்களுடனும் கலந்து நின்று, நீர்த் திவலைகளை அள்ளி வீசிப் புனித நீராடிய தருணத்தில், அவர்கள் கட்டாயம் ஒரு மாபெரும் விடுதலையுணர்வையும், நம்பிக்கையையும் அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம். பாரபட்சமற்ற தாய்மையின், மானுட கருணையின் மகத்தான சாட்சியமாக காலங்காலமாக ஓடிக் கொண்டிருக்கும் அன்னை கங்கையும் தன் அலைக்கைகளால் ஆர்ப்பரித்து அவர்களை வாழ்த்தியிருப்பாள்.
Shawshank Redemption என்ற மகத்தான திரைப்படத்தில் வாழ்வில் இனி மீளவே வழியில்லை என்று தோன்றும் இருட்சிறையிலிருந்து தனது விடாமுயற்சியாலும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையிலும் தப்பி விடுவான் கதாநாயகன் Andy. சிறைக் காவலர்களின் கடும் கண்காணிப்புகளையும் மீறி, சிறுகச் சிறுக சிறையின் உட்புறமாக சுரங்கம் அமைத்து அங்கிருந்து சாக்கடைக்குள் குதித்து நீந்தி வெளிவருவான். அப்போது பின்னணியில் ஒலிக்கும் வசனம் இங்கு நினைவுக்கு வருகிறது –
…Andy crawled to freedom through five hundred yards of shit smelling foulness I can’t even imagine, or maybe I just don’t want to. Five hundred yards.. that’s the length of five football fields, just shy of half a mile. Andy Dufresne – who crawled through a river of shit and came out clean on the other side.
உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள் ஆகிய அழுக்குகளே அந்தப் புனித நீராடலில் துடைக்கப் பட்டன. சாதிய வண்டலையும், களங்கங்களையும் தூறெடுத்து மனித நேயமெனும் பந்தத்தால் இணைந்திட, அந்த மாதரசிகள் குளித்தெழுந்த மாசற்ற புனித கங்கைப் பிரவாகம் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.
செய்தி, படங்கள் – http://www.sulabhinternational.org/
கோயில்களின் நகரம் கும்பகோணம்.. பெரிய கடைத்தெருவில் கர்ணகொல்லை அக்ரஹாரத்தில் உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. இங்கு 23 தலித் மாணவர்கள் உள்ளிட்ட 195 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம்போல அதையும் ஒரு மொழியாக அம்மாணவர்கள் கற்கிறார்கள்.. இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள்.ஆசிரியர்களின் ஊதியத்தை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. மற்றச் செலவுகளை காஞ்சிமடம் பராமரிக்கிறது.
“எங்கள் பள்ளி ரொம்பவும் நொடிந்துபோய் இருந்த நேரத்தில்தான் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் வந்தார்.. உங்களுக்கு என்ன தேவை என பள்ளிச் செயலரிடம் கேட்டுள்ளார். அதன்பயனாகவே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் எழுந்துள்ளன. நாங்கள் அதிக பணம் வசூலிக்கக்கூடாது என்று பெரியவர் கட்டளையிட்டுள்ளார்.. ஏழை எளிய மாணவர்கள்தான் ஆர்வத்துடன் அதிகம் படிக்கின்றனர். எந்தப் பள்ளியிலும் இடம்கிடைக்காமல் யார் இங்கு வந்தாலும் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம்” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜெ.பாஸ்கரன்.
kumbakonam-dalit-sanskrit-student.. ஏழாம் வகுப்பில் சமஸ்கிருத ஆசிரியர் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மாணவி வைஷ்ணவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி ரகுவம்சத்திலிருந்து ஒரு சில வரிகளை எடுத்துக்காட்டி, ரகுவம்சத்து மன்னர்கள் கொடுப்பதற்காகவே சம்பாதித்தார்கள் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள். இச்சிறுமியின் அப்பா பழக்கடை வைத்திருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியை எஸ். பத்மாவதி சொல்லித்தந்த பாடங்களை பயிற்சி செய்ய மாணவர்களுக்கு எழுதிக் காட்டுகிறாள். சமச்சீர் கல்விக்காக சமஸ்கிருத பாடத்தைத் தயார் செய்யும் பணிக்காக சென்னை சென்றுள்ளார் ஆசிரியை.
ஆறாம் வகுப்புப் படிக்கும் பிரவின்குமாரின் அப்பா தச்சுவேலை செய்கிறார். சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் 72 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பிரவீன். தலித் மாணவியான வளர்மதியின் தந்தை மூட்டைதூக்குகிறார். பத்தாம் வகுப்புப் படிக்கும் சந்தியா, கட்டட வேலை செய்பவரின் மகள். kumbakonam-sanskrit-schoolஇம்மாணவி கடந்த தேர்வில் சமஸ்கிருதத்தில் பெற்ற மதிப்பெண் 82. இப்பள்ளியின் செயலர் ஆடிட்டர் என். ராமகிருஷ்ணன் தசஇயிடம், “பொதுவாக சொல்லப் போனால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சமஸ் கிருதம் படிக்க முன்வருவதில்லை. வேலை கிடைக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ஏழை, எளிய மற்றும் தலித் மாணவர்கள் தான் ஆர்வத்துடன் வருகிறார்கள். இங்கு சாதி, மத வித்தியாசம் கிடையாது.
சென்ற ஆண்டு
ஒரு முஸ்லிம் மாணவன் சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றான்.
கடந்த மூன்றாண்டுகளாக எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவருகிறார்கள்” என்கிறார் பள்ளிச் செயலா்
சாதீய வெறி என்னும் கொடு விஷத்தை உண்டு செரித்து சமத்துவமெனும் அருளமுதைப் பொழியும் திருநீலகண்டம் இந்துத்துவம்.
சாதீயக் காளியனின் தலைகளை மிதித்து நசுக்கி சமுதாயப் பொய்கையின் நஞ்சறுத்து நன்னீராக்கும் கிருஷ்ணபாதம் இந்துத்துவம்.
சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கும் எருமைத் தலையர்க்கு பாடம் புகட்டி நல்வழிப் படுத்தும் தேவியின் திரிசூலம் இந்துத்துவம்.
ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்.
சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை தமிழகத்தில் தலித் உரிமைகளுக்கான இந்துத்துவ வெளி உள்ளது.
கும்பகோணத்தின் பள்ளியில் அந்தப் பிஞ்சுகள் கற்றுத் தரும் பாடங்களின் ஓசைகள் காலமாற்றத்தின் சாட்சிகள் மட்டுமல்ல, இந்த வெளியில் சிதறும் அதிர்வலைகள்.
அந்த அதிர்வலைகளை மேன்மேலும் பரப்பிட வேண்டும்.
அதுவே தமிழக இந்து இயக்கங்களின், அமைப்புகளின் தலையாய கடமை.
அந்த கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன இந்து இயக்கங்கள்.
Post a Comment