Followers

Tuesday, January 19, 2016

இறைவனிடம் பரிந்துரைக்க யாரையும் அணுகலாமா?





1985 தஞ்சாவூரில் வலிமார்கள் மாநாட்டில் பேசிய ஒரு அறிவுஜீவி, அல்லாஹ் நெருப்பு போன்றவன், நம் பிரார்த்தனைகள் மாவு போன்றது, அவ்லியாக்கள் சட்டி போன்றவர்கள்.,எனவே பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க முடியுமா? மாவை நேரடியாக அடுப்பில் ஊற்றினால் நெருப்பு அணைந்து விடாதா என்று கேட்க, அன்றைக்குத்தான் அந்த இடத்திலிருந்து ஏகத்துவ சிந்தனையின் ஊற்றுக் கண் துவக்கி வைக்கப்பட்டது.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' என்று கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)


நபிகள் நாயகம் காலத்தில் அன்றைய அரபுகள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

3 comments:

Dr.Anburaj said...

முஸ“லீம்கள் கா்நாடக சங்கீதம் மற்றும் பரத நாட்டியம் கற்க வேண்டும்.அதன் படி மிகத்தரமான இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.மனித மனம் பாழாகாமல் காக்க முடியும்.
இசை தாகத்தை முறைப்படுத்தாமல் விட்டதன் விளைவு முஸ்லீம்இளைஞா்கள் கரகாட்ட நிகழ்ச்சி ?ஏற்பாடு செய்துள்ளாா்கள்.

இதுவும் இந்துக்களை கூட்டமாக கவா்வதற்கு ஒரு தந்திரமாக கூட இருக்கலாம்.
அரேபிய சுதும்வாதும் யாா் அறிவாா்கள் ????

Dr.Anburaj said...



தேவ தூதா் உத்தரவின்போில் முஹம்மது மையவாடிக்கு போய் தொழுகை நடத்தினாா்.அதை


ஆயிசா இரகசியமாக கண்காணித்தாா் ... என்று வரலாற்றில் வருகின்றதே.மையவாடிகயில் என்ன வேலை முகம்மதுவிற்கு. ஃ?????????

Dr.Anburaj said...


எனது கடிதத்தை ஏன் வெளியிட வில்லை.

உண்மையை மறைப்பது அழகல்ல.

One who refuses to submit his opinion
to the taste of free discussion is
more in love with his opinion
than with truth.

சுவனப்பிாியன் தாங்கள் எப்படிப் பட்டவா் ? அப்படிப்பட்டவா் !