Followers

Monday, July 04, 2016

யோக்கியர்கள் பாஜகவில் ஒருவருமே இல்லையா?





இது போன வருடத்திய மீள் பதிவு....

நீங்கள் பொம்பள பொறுக்கியாக இருக்கலாம் அல்லது கந்து வட்டி கும்பலாக கூட, ஏன் ஏழைகளின் நிலங்களை அபகரிப்பவராகக் கூட இருக்கலாம். உங்களது இந்த தேசியப் பணியில் உற்சாகத்துடன் ஈடுபட உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றால் பாஜகவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.லோ இணைந்து முசுலீம் தீவிரவாதி அரிவாளால் தாக்கியதாக பிளேடால் அறுத்து கொண்டு மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டால் போதும். இத்தகைய மோசமான டிரண்ட் இன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்து தேசியம், இந்துக்கள் ஒற்றுமை, இந்துக்கள் பாதுகாப்பு என பீற்றிக்கொள்ளும் இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்களின் வணிகம் என்னவென்றால் கந்து வட்டி, நில மோசடி, நிதி மோசடி, கட்டப் பஞ்சாயத்து. இந்த சமூக தீமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடும்போது பயந்து ஒழிந்துகொள்ள இவர்கள் எடுக்கும் ஆயுதம் முசுலீம் தீவிரவாதம்.


ஜனவரி 2ம் தேதி நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாஜக வர்த்தகப் பிரிவின் மாநில துணைத் தலைவர் வேல்சந்திரன் திசையன் விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து குத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில் இது வேல்சந்திரன் போலீஸ் பாதுகாப்புக்காக நடத்திய நாடகம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும் தேர்தலில் சீட் கிடைப்பதற்காகவும் கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மண்டலச் செயலாளர் ராமநாதன் என்பவர் கூலிப்படையினரை வைத்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அல் உம்மா அமைப்பினர் மீது பழியை போட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது நாடகம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 5, 2014 அன்று அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அனுமன் சேனா பிரமுகர் சக்தி வேல் என்பவரும் இதே போன்ற போலி நாடகத்தை அரங்கேற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்த சம்பவம் பெரும் வேடிக்கையானது. பாஜகவின் மூத்த பிரமுகரான எம்.ஆர்.காந்தி என்பவர் முசுலீம்கள் அதிகமாக வசிக்கும் இடலாக்குடி என்ற பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்று அவரது வாகனத்தில் லேசாக பட்டுவிட்டது. உடனே அவர் செய்த அலப்பறை மிகவும் கொடூரமானது. ஊடகங்களுக்கு தவறான தகவல்கள் பரப்பபட்டன. எம் ஆர் காந்தியின் வாகனத்தின் மீது கல் வீச்சு என்றும் ஆசிட் வீச்சு என்றும் செய்திகள் பரப்பப்பட்டு கலவர சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

மிகவும் முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் இவ்வளவு மோசமாக எம் ஆர் காந்தி நடந்து கொள்ள காரணம் என்ன? இதே பலூன் இந்து சிறுவர்கள் எறிந்திருந்தால் அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு டாட்டாகாட்டி சென்றிருப்பார். ஆனால் முசுலீம் சிறுவர்கள் என்பதால் ஒரு கேவலமான அரசியல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இதன் மூலம் இடலாக்குடி முசுலீம்கள் மீது ஒரு சந்தேகப்பார்வையை பாமர இந்துமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.

கடந்த 2ம் தேதி இதே நாகர்கோவில் இடலாக்குடியில் நடந்த சம்பவமும் மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது. அன்று காலை 8.30 மணிக்கு பாஜகவின் மாவட்ட வர்த்தகப் பிரிவுத் தலைவர் முத்துராமன் என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கியதாக தனியார் மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டார். இந்த சம்பவங்கள் நடந்த சில நிமிடங்களிலேயே வெள்ளாடிச்சி விளை என்ற பகுதியில் உள்ள முசுலீம் குடியிருப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஷேக் அலி என்ற அப்பாவி கூலித் தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த உடன் முத்துராமன் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதன் பின் விளைவு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று வன்முறையைத் தூண்டி விட்டுச் சென்றார்.

இது குறித்து விசாரணை நடத்திய கோட்டாறு போலீசாரிடம் முகமூடி அணிந்து வந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதாகத்தான் கூறினார். ஆனால் அவர்கள் தாடி வைத்திருந்ததை முத்துராமன் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் எப்படி கவனித்தார் என்று தெரியவில்லை. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவி முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசாரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். முசுலீம்களிடம் மிகவும் நட்புறவுடன் பழகி வந்த முத்துராமன் முசுலீம்கள் மீது அபாண்ட பழியை சுமத்தியது இந்துத்துவ அரசியலின் கொடூர சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே பல்வேறு நில மோசடி வழக்குகள், கொலை வழக்குகளில் தொடர்புடைய முத்துராமனுக்கு எதிரிகள் அதிகம். இதனால் ஏற்கனவே இவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார். பொறுக்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? என போலீசார் மறுத்து விட்டனர். இந்த நிலையில்தான் சிராய்ப்பு காயங்களுடன் மருத்துவமனையில் அரிவாளால் வெட்டியதாக சென்று அலப்பறையை உருவாக்கி உள்ளார்.

முக்கிய பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளால் ஏராளமான எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பாஜகவின் தேசியச் செயலாளரும் ஏதோ அப்பழுக்கற்ற ஒழுக்கவாதி என்றும் ஊடகங்களில் தன்னை காட்டிக் கொள்ளும் மேனாமினுக்கி ஹெச்.ராஜா லோட்டஸ் பெனிபிட் பண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி பாஜகவினரிடமே மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் பழனியப்பன் இவர் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே அரை டவுசர்களை அணிந்து தேசியவாதி என காட்டிக்கொள்ளும் இந்துத்துவ தலைவர்களின் சொந்த வாழ்க்கை என்பது முடை நாற்றம் வீசும் பாதாள சாக்கடையை விட மோசமானது. இந்த பொறுக்கிகளைத்தான் முசுலீம்கள் தாக்க முயற்சிக்கிறார்களாம். இவர்களுக்குத்தான் போலீஸ் பாதுகாப்பாம்.

நன்றி
கீற்று இணைய தளம்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27721-2015-01-20-14-19-31

12 comments:

Dr.Anburaj said...


தவறு செய்தவன் திருந்தபாா்க்க வேண்டும்.தப்பு செய்தவன் வருந்தியாக வேண்டும். சட்டம் தவறினாலும் பாவவினை அவர்களைத் தொடரும்.

Dr.Anburaj said...


நீதி ஒழுக்கம் நற்பண்பு தியாக குணம் நிறைந்த ”நிறைகுடங்கள்” ஆயிரக்கணக்கில்

லட்சக்கணக்கில் உள்ளாா்கள்.குறைகளைப் பொிது படுத்த வேண்டும் என்பது தங்களின்

திட்டம்.தற்சமயம் இது போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.

தாங்கள் மேற்காட்டிய சமபவங்கள் நடந்து வெகுகாலம் கடந்து விட்டது..இன்னம் எத்தனை

நாட்களுக்கு அதே சம்பவங்கை வறுத்துக் கொண்டு இருக்கப் போகின்றீா்கள்.

Dr.Anburaj said...


நமது நாட்டின் ISRO ஒரே நேரத்தில் 20 செய்க்கை கோள்களை ஏவி அரும் சாதனை படைத்து வருகின்றது.
அமொிக்கா ஏவிய விண்கலம் 4 ஆண்டுகள் பயணம் செய்து வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.நினைத்துப் பாா்க்க மலைப்பாக இருக்கும் இந்த சாதனையின் பலன் இனிமேல் வியாழன் கிரகம் குறித்த உண்மையான தகவல்கள் கிடைக்கும். முஸ்லீம்களுக்கு இதுபோன்ற நல்ல தகவல்களை அளியுங்கள். சவுதிகாரம் குவைத்காரன் வைத்திருக்கும் பணம் எல்லாம் குண்டு வாங்கத்தான் பயன்படுகின்றது. கற்கால புத்தகமான குரானை எந்த முன்னேற்றமும் இல்லாமல் பின்பற்ற நினைக்கும் மடத்தனம் இருக்கும் வரை முஸ்லிம்கள் பிரச்சனைக்குாிய ஆட்களாகவே இருப்பாா்கள்

Dr.Anburaj said...


தாங்கள் புரண யோக்கியன் என்றால் பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களுக்கு செய்யப்படும் அநீதிகுறித்து பதிவுகள் செய்யலாமே ? என் அதை இருட்டடைப்பு செய்கின்றீா்கள்.

Dr.Anburaj said...

மிகவும் பழைய பதிவு. இந்துக்கள் குறித்து விஷத்தை பரம்பும் தங்களின் திட்டம் பலிக்காது.

Dr.Anburaj said...


இந்துத்துவ தலைவர்களின் சொந்த வாழ்க்கை என்பது முடை நாற்றம் வீசும் பாதாள சாக்கடையை விட மோசமானது. இந்த பொறுக்கிகளைத்தான் .....

அரேபிய அடிமையிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்துக்கள்தான் கிடைக்கும். இந்துத்துவம் இந்து கலாச்சாரம் இந்தியா என்றால் தங்களுக்கு எதுவும் பிடிப்பில்லை.அரேபிய பெயா் அரேபிய வரலாறு அரேபிய வழிபாட்டு மொழி என்று அனைத்திலும் அரேபியாவை பின்பற்றி வர்ழம் தங்களக்கு இந்துத்துவத்தில் நல்லதை பாா்க்கும் பக்குவம் இருக்காது என்பது அனைவருக்கும் தொியும்

Dr.Anburaj said...

புரந்தரதாசர் தெளிவான எளிமையான கன்னட மொழியின் சொற்றொடர்களையும், உவமைகளையும் பயன்படுத்தினார். கனகதாசர் வலிமையான உறுதியான நடையில் நேரடியாக வெளிப்படுத்தினார். அவர்களின் பாடல்கள் எளிமையாக இருந்தபோதும் ஆழமான உள்ளடக்கத்தோடும், உத்வேகத்தைத் தூண்டுவதாகவும், வசியப்படுத்துவதாகவும், நீதிபோதனையைச் சொல்வதாகவுமிருந்தன. பல தத்துவக் கொள்கைகளும்கூட எல்லோருக்கும் புரியும்படி எளிதில் சொல்லப்பட்டுள்ளன.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரஹரி தீர்த்தன், தாச இலக்கியத்தின் முதல்வன் என்று சொல்லப்பட்டாலும் தாசகூடம் என்ற அமைப்பு ஸ்ரீபாதராயனால் உருவாக்கப்பட்டது. அவனைத் தொடர்ந்து வியாசராயன், புரந்தரதாசன், கனகதாசன் ஆகியோர் முக்கியமானவர்களாகின்றனர். சிவசாரணர்களின் வசன இலக்கியம்போல விஷ்ணுபக்தர்களின் இலக்கியமான இது மனிதநோக்கு, சமூக விமரிசனம், மானிட இயல்பின் முழுமை ஆகியவற்றை விளக்குகிறது.

துவைத தத்துவத்தை அடிப்படையாக்க் கொண்டமைந்த பாடல்களுக்கு கீர்த்தனை, சுலாடி, விருத்தநாமம், தாண்டகம் என வகைகள்தந்து அறிமுகப்படுத்திய பெருமை ஸ்ரீபாதராயனைச் சேரும். மத்துவாச்சார்யரின் தத்துவத்தைக் கன்னடமொழியில் பரப்பவேண்டிய ஒரு சூழல் வந்தபோது சிறிதும் தயக்கமின்றி கடவுள் வழிபாட்டின்போது கோயில்களில் கன்னடப் பாடல்களைப் பாடச்செய்யும் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் ஸ்ரீபாதராயனுக்குண்டு.

இவர் அறிவுக்கும், சாதுர்யமான பதிலுக்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. பாதராயன் தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்வர்ணவர்னா தீர்த்தா என்ற பெயருடைய குரு ஒருவர் வருகிறார். சிறுவர்களிடம் ’அப்பூரூ’ எங்கேயிருக்கிறதென்று கேட்கிறார். அப்போது பாதராயன் “சூரியன் அஸ்தமனமாகப் போகிறான். நாங்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அப்பூரூ எவ்வளவு தூரமென்று யூகியுங்கள்“ என்று பதில் தருகிறான். அந்த பதில் குருவை அசரவைக்கிறது.

சூரியன் அஸ்தமனமாகப் போகும் நேரத்திலும் விளையாடிக் கொண்டிருக்கிறோம், இருட்டு வருவதற்கு முன்னாலே வீடு போய்விடுவோம். ஆகையால், அருகாமையில்தான் ஊர் என்ற உட்பொருளை அந்தப் பதில் தருகிறது. சிறுவனை ஸ்வர்ணதீர்த்தா தன் சீடனாக்கிக் கொள்கிறார்.

ஸ்ரீபாதராயர்

ஸ்ரீமத் பாகவத்தை முதன்மையாகக் கொண்டமைந்த பாதராயனுடைய பாடல்கள் ’ரங்க விட்டல’ என்ற முத்திரையைக் கொண்டவை. வேணுகீதம், கோபிகீதம், பிரம்மகீதம் ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க பாடல் வகைகளாகும். வேணுகீதம், கோபிகீதம் ஆகியவை புல்லாங்குழலூதும் இறைவனின் பெருமைகளையும், பிரம்மகீதம் பாகவதபுராணக் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.

”நீ இப்படி இருப்பதன் காரணமென்ன ஹரியே? [நீ ஈத்தங்க இருப்பதேனோ ஹரியே], ’கண்களிருப்பது காவேரிரங்கனைப் பார்க்கத்தான்’ [கண்களிருவது காவேரிரங்கன நோடத] ஆகிய இவருடைய பாடல்கள் எல்லோரும் அறிந்தவையாகும்.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில்தான் அன்னமாச்சார்யரின் தெலுங்கு கீர்த்தனைகள் அறிமுகமாயின என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்ரீபாதராயனைத் தொடர்ந்து அவர் சீடரான வியாசராயன் தாசஇலக்கியத்தை வளர்த்தார். கன்னடமொழியில் கீர்த்தனைகளை இயற்றி, அவற்றைக் கடவுளின் சந்நிதானத்தில் பாடும் வழக்கம் இந்தக் காலகட்டத்தில்தான் உருவானது. ஹரியின் பக்தர்கள் கூடுமிடம் ’தாசகூடம்’ ஆனது.

Dr.Anburaj said...

அன்றைய சூழ்நிலையில் அந்தணர் சமூகத்தில் இது புரட்சியான செயலாகக் கருதப்பட்டது. ’ஸ்ரீ கிருஷ்ண’ என்ற முத்திரையோடு அமைந்த இவரது கீர்த்தனைகள் மனிதநேயத்தை முதன்மைப்படுத்தின. ’கிருஷ்ணா நீ வேகமாக வரவேண்டும்’ [கிருஷ்ணா நீ பேகனே பாரோ”], தாசரென்றால் அது புரந்தரதாசர்தான் [’தாசரந்தரே புரந்தரதாசரய்யா] ஆகிய சில பிரபல பாடல்கள் இவருடையவையாகும்.

தாசர்களின் தலைவனாகப் போற்றப்படும் புரந்தரதாசன் செல்வப் பரம்பரையில் வந்தவர். ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி விஷ்ணுபக்தனானார்.

உலகவாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பல்வேறு சூழ்நிலைகளில் பழகியதால் அவர் கீர்த்தனைகளின் அணுகுமுறை நகைச்சுவை, கண்டனம், சமூகவிமர்சனம், அறிவுரை என எல்லாவற்றின் கலவையாகவும் அமைந்தன. நாமமகிமை, துதி, நிவேதனம், கிருஷ்ணலீலை, சமூக விமர்சனம், அறிவுரை என்ற பிரிவுகளில் அவர் கீர்த்தனைகள் அடங்குகின்றன. ’வயிற்று வைராக்கியம்’ ”என்ற கீர்த்தனை சமூக வாழ்க்கையின் குறைபாடுகளை பிரதிபலிக்கும் கீர்த்தனையாகும்.

”வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம், மாச்சர்யம், கோபம் ஆகியவைகளோடு வாழ்தல், நாவில் மந்திரம் சொல்லிக்கொண்டு மனதை அலையவிட்டு வெளியில் பரமநல்லவனாகக் காட்டிக்கொள்ளுதல் என்பது மேடை வேடம்போட்டு வாழும் சோற்றுஞானம் என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார்.

மடிமடி என்று [மடிமடியென்து] என்ற பாடலில் ஈரஆடைகளை அணிந்து உலகத்தவருக்குத் தன்னைக் காட்டிக்கொள்வது மடியாகாது — மனதிலிருக்கும் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவைகளை ஒழிப்பதுதான் உண்மையான மடி என்கிறார்.

அநீதியையும், ஆடம்பரத்தையும் பழிப்பதான பார்வையிலும் சில கீர்த்தனைகள் உண்டு. ”சிரிப்புத்தான் வருகிறது [நகுவே பர்த்திதே நநகே], உடல் தண்ணீருக்குள் இருந்து பயன் என்ன, வேம்பினை வெல்லத்தில் இணைப்பதால் என்ன பயன், புலையன் நம்மிடையிலன்றி வெளியிலா இருக்கிறான், உடல் அழுக்கைக் கழுவமுடியும்போது மனஅழுக்கைக் கழுவமுடியாதா என்னும் கருத்துகள் குறிப்பிடத்தக்கவை.

சமூகபோதனைக்குச் சான்றாக “தருமமே ஜயம்”[தர்மவே ஜயா] என்ற கீர்த்தனை அமைகிறது. ”நஞ்சு கொடுத்தவனுக்கு நல்ல உணவு தரவேண்டும், பழித்தவனைப் பாராட்டவேண்டும்” என்ற கருத்து இன்னா செய்தவனுக்கும் நன்னயம் செய்யத்தூண்டும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகிறது.

இது பாக்கியம்[இது பாக்யா] என்ற கீர்த்தனையில் கல்லாயிருக்க வேண்டும் கடின சம்சாரத்தில், வில்லாக வளைய வேண்டும் பெரியோரிடம்” என்ற வரி, இன்றும் எல்லோராலும் பழமொழியாகப் பயன்படுத்தப்படும் எளிய தொடராகிறது.

எதையும் எதிர்த்துநிற்கும் ஆன்மபலம் மனிதனுக்கு வேண்டும் என்ற வற்புறுத்தல் அவர் பாடல்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது.

பக்தி என்பது பல கோயில்களுக்குச் செல்வதல்ல, சரியான வாழ்க்கைமுறைதான் என்கிறார். மண், பொன், பெண் இவற்றின்மீது இருக்கும் ஆசை நீக்கப்படவேண்டும் என்ற செய்தி சொல்லப்படும்விதம் புதுமையானதாக உள்ளது. ”

ஆசைகளை நீக்கும்படி நேரில் உபதேசம் செய்வது இயல்பு. ஆனால் திருமால் தன் கையால் கடிதமெழுதி இவைகளை நீக்கும்படி வேண்டுகிறான்” என்ற தொனியிலான கீர்த்தனை புதுமையாக மட்டுமின்றி வியப்பையும், கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

மனிதனின் உயர்வு, அவனுடைய குணம், செயல்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர சாதியால் தீர்மானிக்கப் படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைப் பல பாடல்கள் காட்டுகின்றன.

Dr.Anburaj said...

ராகி தந்தீரோ பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரோ அன்னதான மாடுவராகி அன்னசத்ராவணிதவாராகி

குருகள் சேவைய மாடுவராகி புரந்தரவிட்டலன சேவிப்பவராகி

போக்யராகி யோக்யராகி பாக்யவந்தராகி ராகி தந்தீரா பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரா””

ஏழைகளின் உணவான ராகியைப் பாடலாக்கி ராகி என்ற சொல் பல்வேறு பாவனைகளில் வெளிப்படுத்தியிருக்கும் தன்மை அற்புதமானது.

ஒரு வயதான மூதாட்டியிடம் தனக்கு உணவு தரும்படி விட்டல வேண்டுகிறான். தன்னிடம் ஒரு ராகிரொட்டி மட்டுமே இருப்பதாக அவள் சொல்கிறாள். அது தனது தேவைக்கு மேலானது என்கிறான்.

அதுமுதல் தினமும் பிச்சைக்கு வந்து ராகியையே வேண்டுகிறான். இந்தப் பாடலின் மிகச் சிறந்த அம்சம் ’ராகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்தான். ”யோக்யராகி”, ”போக்யராகி”, ”பாக்யவந்தராகி” என்று எல்லாம் இரட்டைப் பொருளில் அமைகிறது. சான்றாக “யோக்ய + ராகி = சாப்பிடுவதற்கு ஏற்ற ராகி, ”யோகயர்+ஆகி = கொடை கொடுப்பதற்கு தகுதியானவர், போக்யர் + ஆகி கொடுப்பதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். இது அவருடைய மிகச் சிறந்த பாடலெனவும் கூறப்ப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நல்லநாளே. திதி, வாரம், நட்சத்திரம், யோகம் ஆகியவை பற்றியெல்லாம் மனிதர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கடவுளை வழிபட்டால் எல்லா நாளும் நல்லநாளாகும் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையானமுறையில் இந்த தினம் சுபதினம்[ஈ தின சுபதின] இந்த நட்சத்திரம் சுபநட்சத்திரம் என்ற பாடல் காட்டுகிறது.

மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வானவில்லைப்போல பல்நிறம் கொண்டதாக, கவர்ச்சியானதாகத் தெரிகிறது. ஆனால் அவையெல்லாம் மாயையே என்பதை அவர்களுக்கு நினைவு படுத்தும் வகையில், ”யாருக்குக் கவலை” என்ற பாடலில் [’யாரிகே யாரெந்து’] — எந்த நேரமும் உடையும் நீர்க்குமிழியைப்போல உள்ள வாழ்க்கையில் யாரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்? யானைகள், குதிரைகள், கஜானா, நாடு, கௌரவம், புனிதமான உறவுகள், நட்பு எல்லாம் மாயையும், குறைவான ஆயுளும் உடையவை. நிரந்தமற்ற தன்மையை உணரவைப்பது அவர் கருத்தாகிறது. .

என்ன சாதியாக, கௌரவமாக இருந்தாலும் [”யாவகுலவந்தரேனு] மனிதநேயத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன பயன் — ஒருவனுடைய பிறப்பு மட்டும் அவன் உயர்வுக்கோ, தாழ்வுக்கோ காரணமாக முடியாது. வெவ்வேறு நிறமுடைய பசுக்கள் தரும் பாலும் வெவ்வேறு வடிவம்கொண்ட கரும்புகள் தரும் சுவையும் வித்தியாசப்படமுடியுமா? தோற்றத்தில் இருக்கும் வேறுபாடு யாருடைய இயல்புத் தன்மையையும், பக்குவத்தையும் மாற்ற முடியாது என்பது அவர் கொள்கை

தீண்டாமை அவரால் பொறுக்க முடியாததாகிறது. பிறந்த சாதியை வைத்து மனிதன் தீண்டத்தகாதவன் என்று முத்திரைகுத்துவது சரியல்ல — அவன் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்கவேண்டும். தீண்டாமை என்பது தொடுவுணர்ச்சியை முன்வைத்து அமையும் பொருளல்ல என்றொரு பாடல் சொல்கிறது. [ஹொலையா ஹொரகிதனே} சுயஒழுக்கமில்லாதிருப்பது, செல்வனாக இருந்துகொண்டு பொருள்தர மறுப்பது, மென்மையான பேச்சை பயன்படுத்தத் தெரியாமலிருப்பது இறுதியில் புரந்தரவிட்டலனை வணங்காமலிருப்பது ஆகியவைகள்தான் அவர் பார்வையில் தீண்டாமையாகும்.

Dr.Anburaj said...

புரந்தரதாசனின் கருத்து நம் சமூகத்தின் தீண்டாமைக்குத் தரும் அடியாகும்.

புரந்தர விட்டல என்று அவர் குறிப்பது எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தப்படும் பெயராகும் என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர். பல கடவுளரின் பெயர்களை அவர் பயன்படுத்தியிருப்பது இதற்குச் சான்றாகும்.

புரந்தரதாசர் சிறந்த கணக்குப்பிள்ளையும்கூட. நல்ல செயல்களைச் செய்யும்போதும், கெட்ட செயல்களைச் செய்யும்போதும் ஒருவன் தன் மனதையே தணிக்கை செய்துகொள்ளவேண்டும்; மனம்தான் தணிக்கைக்கருவி என்கிறார். ”மனதைச் சோதித்துக்கொள்” [”மனவ சோதிசபேக்கு”]என்ற பாடல் இதைக் காட்டுகிறது.

பாடல் இப்படித் தொடங்குகிறது:

”எல்லா ஹரிதாசர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை அழைப்பு. நேரம் குறைந்துவிட்டது. நூறுஆண்டுகள் ஆயுளாக இருந்தால் ஐம்பதாண்டுகள் தூக்கத்தில் போய்விடுகிறது. மீதமுள்ள ஐம்பதாண்டுகளில் முதல் பதினைந்து ஆண்டுகள் அறிவுக் குறைவான இளமையிலும், கடைசி இருபத்தைந்தாண்டுகள் முதுமையிலும் கழிகின்றன. இடையிலுள்ள இளமையான நிலையிலுள்ள இருபதாண்டுகள் இளரத்தம் என்பதால் மனம் அரேபியக் குதிரைபோல உலகத்து ஆசைகளைநோக்கி ஓடுகிறது. இப்படி இருந்தால் எந்த நேரத்தில் கடவுளை நினைத்து வாழமுடியும்?

சில கருத்துக்கள் பழமொழிபோல சமுதாயநலம் சார்ந்து அமைகின்றன. ”வயது முதிர்ந்தவனோடு திருமண உறவுக்கு எதிர்ப்பு, இரு மனைவியர் வாழ்க்கைக்கு எதிர்ப்பு, கீழ்ச்சாதி வந்தான் என்ற பேச்சுக்கு எதிர்ப்பு ” எனச் சமூக அவலங்களை அகற்ற முயல்கிறார்.

’லம்போதர லகுமிரா’, ’கஜவதனா பேடுவே’, ’பாக்யதலட்சுமி பாரம்மா ”, என்று எல்லோரும் அறிந்த சில பாடல்கள் அவருடைய எளிமை நடைக்கும், எவரும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் சான்றுகளாகும்.

புரந்தரதாசருக்குப்பின் வந்தவர் அவர் மரபையே பின்பற்றினர். இன்றும் அது தொடரப்படுகிறது. தியாகராஜரும் ராகம், பாவம், தாளம். என்று புரந்தரதாசர் வழியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’தாசர் என்றால் புரந்தரதாசர்தான்!’ ”என்ற அடைமொழியோடு கன்னடமண்ணில் இன்றும் போற்றப்படுபவராக உள்ள அவரையும், கனகதாசரையும் இணைத்து ’கனக புரந்தரா’ என்ற செய்திப்படம் ஒன்று கிரீஷ் கர்னாடால் இயக்கப்பட்டுள்ளது

கனகதாசர்கனகதாசரின் இயற்பெயர் திம்மப்பா. தந்தையைப்போல அவரும் படைத்தளபதி. ஒருசமயம் போரில் படுகாயமடைந்து மயங்கிக் கிடந்தார். அந்நேரத்தில் கிடைத்த வெங்கடேசப்பெருமானின் அருளால் போர்வாழ்க்கையை ஒதுக்கி, பக்திமார்க்கத்தை தனக்குரிய பாதையாக்கிக் கொண்டார். திம்மப்பா கனகப்பாவாக மாறியது அந்தச் சூழலில்தான் தாசகூடத்தில் வியாசராயனின் சீடனாக கனகப்பா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

Dr.Anburaj said...

தாசகூடஅமைப்பு அவரைக் கனகதாசராக்கியது. தனது மாணவர்களில் மிகச்சிறந்தவர் கனகதாசரே என வியாசராயனே குறிப்பிட்டு உள்ளார். ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும் அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது கனகதாசரின் கொள்கையாகும். இதை அடிப்படையாக்க் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன. மோகனதரங்கிணி, நளசரித்ரே, ராமதான்ய சரித்ரே ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

மோகனதரங்கினி பாணாசுரனின் மகள் உஷா, பிரத்யும்னாவின் மகன் இருவருக்கும் இடையேயுள்ள காதலை வெளிப்படுத்தும் நூலாகும். கேசவனின் பக்தனான பாணாசுரனிடம் சிவபக்தனான பிரத்யுமனா இளம்காதலர்களை ஒன்று சேர்த்துவைக்க உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதாக ஒரு காட்சி இடம்பெறுகிறது. இங்கு சைவத்தை வைணவத்துடன் இணைக்கவிரும்பும் கனகதாசரின் பரந்த பார்வையைக் காணமுடிகிறது. மோகனதரங்கிணி பலராலும் போற்றப்படுவதற்கு இது ஒரு காரணமாகும்.

ராமதான்ய சரித்ரே நாட்டுப்புறக்கதை அமைப்பாலானது. ஏறத்தாழ ஐம்பத்தெட்டு பாடல்களைக் கொண்டது.

ராமன் நீதிபதியாக அரசவையில் இருக்கும்போது அரிசிக்கும், கேழ்வரகுக்கும் இடையே யார் உயர்வானவர்கள் என்பது குறித்துச் சண்டை ஏற்படுகிறது. வழக்கை நடத்தும் ராமன் இரு தானியங்களையும் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவரை அடைத்து வைக்கச் சொல்கிறான். கெடு முடிந்ததும் அவை எடுத்துவரப்படுகின்றன. பல நாட்களுக்குப் பிறகும் ராகி தன் சக்தியை இழக்காமலிருக்க அரிசி தன்சக்தி முழுவதையும் இழந்திருந்தது. ராமன் கேழ்வரகின் அருமையை உலகிற்குப் புரியவைத்ததாக ஒரு நிகழ்வு அமைகிறது.

கேழ்வரகை ஏழைகளின் வடிவாகவும், அரிசியைப் பணக்காரர்களின் வடிவாகவும் உள்ளுறையாகப் பாடல் வெளிப்படுத்துகிறது. மனிதனின் உயர்வு, அவனுடைய குணம், செயல்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, சாதியால் தீர்மானிக்கப்படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகிறது.

நளசரித்ர ”நளனின் வரலாற்றை விரிவாகக் கூறுவதாகும்.

கனகதாசரின் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பலவாக உள்ளன. நமக்குள்ளே இருக்கிற செருக்கு, பொறாமை, கோபம் ஆகியவற்றை அடக்கத் தெரியாவிட்டால் புண்ணிய ஸ்தலங்களில் நீராடுவது பலன் தராது. அறியாமை நிறைந்தவனோடு சண்டை போடுவதைவிட புத்திசாலியோடு போராடுவது உயர்வானது.

அவர் பார்வையில் தீண்டாமை என்பது, நல்லொழுக்கத்தை போதித்துவிட்டுத் தான் கடைப்பிடிக்காமல் இருப்பது; அரசனுக்குப் பணிவிடை செய்துகொண்டே அவனைப் பழிப்பது; பரத்தையின்மீது காமம் கொள்வது; நோயாளிக்கு விஷத்தை மருந்தோடு தருவது.

எது உண்மையாக விலக்கப்பட வேண்டியதோ அதுதான் தீண்டாமையாகிறது

அநியாயம், தீயநடத்தை, வெறுப்பு, பொறாமை, ஆகியவை நிறைந்த சமூகத்தைக் கடிகிறார். மனிதனாகப் பிறந்துவிட்டு அவனுக்குரிய பண்புகளைத் தொலைப்பது விவேகமாகாது என்கிறார். தன் பேச்சு போதிப்பதோடு நின்றுவிடக்கூடாது என்ற நிலையில் தோற்றம் தொடங்கி வாழ்க்கைமுறைவரை எல்லாவற்றிலும் எளிமையை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையை இறைவனின மீதான முழுநம்பிக்கையோடு வாழச்சொல்கிறார்.

“வருவதெல்லாம் வரட்டும் கோவிந்தன் தயை இருக்கட்டும்” [பந்ததெல்லா பரலி] என்பது பாடல். மாயையான மகிழ்ச்சியைப் பின்தொடர்வது கூடாதென்கிறார்.

Dr.Anburaj said...

பெண்ணைப் பற்றிய உயர்வான சிந்தனையும் அவர் பாடலில் வெளிப்படுகிறது. ”பெற்ற தாயைக் காட்டிலும் உயர்வானவருண்டோ” [ஹெத்த தாயிந்தா..] சடங்குகள், குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்க்கிறார்.

”குலம் குலம் குலமென்று அலைவதில் பயனில்லை. எது நன்மை தருமோ, எது மனிதகுலத்துக்கு உயர்வோ அதைச் செய்வதுதான் உயர்வென்கிறார்[குல குலவெந்து].

கிருஷ்ணன் மீது கனகதாசர் கொண்ட பக்தியைக் காட்டும்வகையில் ஒரு சுவையான கதையும் சொல்லப்படுகிறது.

ஒருநாள் கனகதாசரின் குரு தன் மாணவர்களை அழைத்து அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வாழைப்பழம் தருகிறார். யாரும் பார்க்காதபடி பழத்தைச் சாப்பிடச் சொல்கிறார். சில மாணவர்கள் மரத்தின் பின்னால் நின்றுகொண்டும், சிலர் கட்டிலினடியில் மறைந்து உட்கார்ந்தும், கதவுகளை மூடிவைத்தும் பழத்தைத் தின்றுவிடுகின்றனர். குரு கேட்கும்போது அனைவரும் தாம் புத்திசாலித்தமாகச் செய்ததை மகிழ்ச்சியோடு சொல்கின்றனர். குரு கனகனிடம் கேட்கிறார். கனகன் வாழைப்பழத்தை வருத்தமாகத் திருப்பித் தருகிறார். யாரும் பார்க்கமுடியாத இடத்தைத் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார். எல்லோரும் சிரிக்கின்றனர். குரு மேலும் விவரம் கேட்கும்போது கிருஷ்ணன் இல்லாத இடமேயில்லை என்றும் அதனால் தன்னால் பழத்தைத் தின்னமுடியவில்லை என்றும் விவரிக்கிறார்

கனகதாசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு அவருடைய வேதாந்தப் பண்பிற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது. யாருக்கு ’மோட்சம்’ கிடைக்கும் என்பது பற்றி அறிஞர்கள் கூடியிருக்கும் இடத்தில் விவாதம்நடக்கிறது. அங்கிருக்கும் கனகதாசர் தனக்குத்தான் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார். நான் போனால், போவேன் [நானு ஹோதரே ஹோதேனு] என்று அவருடைய விளக்கம் அமைகிறது. கூடியிருந்த பண்டிதர்கள் அதிர்ந்து போகின்றனர்.

அதற்கான விளக்கம் கேட்டபோது, யார் ’நான்’ என்பதை விட்டொழிக்கிறார்களோ அவர்கள்தான் மோட்சம் பெறமுடியும் என்று வேதாந்த பாணியில் பதிலளிக்கிறார்.

நீ மாயைக்குள்ளா என்ற கனகதாசரின் கீழ்வரும் பாடல் எல்லாவுணர்வுகளும் கொண்டதாக உள்ளது

நீ மாயையின் படைப்பா, அல்லது மாயை உன் படைப்பா?

நீ உடலின் ஓர் அங்கமா, அல்லது உடல் உனது அங்கமா?

இடமென்பது வீட்டிற்குள்ளா, வீட்டுக்குள் இடமா, அல்லது வீடு இடத்திற்குள்ளா?

அல்லது இடமும் வீடும் பார்ப்பவரின் கண்களுக்குள்ளா?

கண் மனதுக்குள்ளானதா, அல்லது மனம் கண்ணிற்குள் அடக்கமா?

அல்லது கண்ணும் மனமும் உனக்குள்ளானதா?

இனிப்பு சர்க்கரைக்குள் இருக்கிறதா, அல்லது சர்க்கரை இனிப்பிற்குள்ளா?

அல்லது இனிப்பும் சர்க்கரையும் நாவில்லுள்ளதா?

நாவு மனதிற்குள்ளா, மனது நாவிற்குள்ளா?

மணம் பூவிலா, அல்லது பூவில் மணமா?

அல்லது பூவும் மணமும் மூக்கிலா?

என்னால் சொல்லமுடியாது காகினலே ஆதிகேசவா!

ஓ. . . ஒப்பற்ற எல்லாம் உனக்குள் மட்டுமா?”

என்ற பாடல் இன்றும் அவர் கவித்துவத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது.

’யாக்கே தயே மாடல்லா’,” ’பாரோ கிருஷ்ணையா,’ ’தாசனாக பேக்கோ’, ’சதாசிவனாக பேக்கோ,’ ’நம்மம்மா சாரதே உமா மகேஸ்வரி”’, ’தாசர தாசர மனேய’, ”ஆகியவை பலரும் அறிந்த பாடல்களில் சிலவாகும். கனகதாசரை ’விஷ்வபந்த’” என்று கன்னட உலகம் போற்றுவதும் குறிப்பிடத்தக்கது.