Followers

Monday, July 04, 2016

ஹரியானாவில் மாட்டு சாணத்தை தின்ன வைத்த கொடுமை!
மோடி ஆட்சியில் பார்ப்பனிய இந்துமதவெறி பாசிஸ்டுகளின் காட்டுமிராண்டித்தனம் தலைவிரித்தாடுகிறது.
.
RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !
.
தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது.
.
“வேகமாக வேகமாக” எனச் சுற்றியுள்ள கூட்டம் வெறிக்கூச்சலிடுகிறது. உயிருக்கு பயந்த நிலையில் யாரும் துணைக்கு வரமாட்டார்களா என்ற ஏங்கிய கண்களுடன் கையில் சாணியை எடுத்து வாயில் வைக்கிறார்கள் இருவரும்.
.
சுற்றியுள்ள கூட்டமோ “கோ மாதா கீ ஜெய்”, “ஜெய் ஸ்ரி ராம்” என கூச்சலிடுகிறது. வாயில் சாணியுடன் இருவரையும் தங்களுடன் ஜெய் சொல்ல வைக்கிறது அந்த வெறிக் கும்பல்.
.
மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக “குர்கான் கவ் ரக்ஷ தல்”(Gurgaon Gau Rakshak Dal – குர்கான் பசு பாதுகாப்பு இயக்கம்) என்ற இந்துவெறிக் கும்பல் ரிஸ்வான், முக்தியார் என்ற இரு இளைஞர்கள் வாயில் சாணி திணித்தது தான் மேற்கண்ட சம்பவம்.
.
செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக இந்துமதவெறியர்களால் தலித்கள் கொல்லப்பட்ட ஹரியானாவில் தான் இதுவும் நடந்துள்ளது. இளைஞர்கள் வாயில் சாணி தினித்ததோடு அதை வீடியோவும் எடுத்து பரப்பியிருக்கிறது அந்த வெறிபிடித்த கும்பல்.
.
இது குறித்து பேட்டியளித்துள்ள அக்கும்பலின் தலைவன் தர்மேந்திர யாதவ், “ மாட்டுக்கறி கடத்தப்படுவதாக எங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து இவ்வாகனத்தை 7 கி.மீ துரத்தி சென்று பிடித்தோம். காரில் 700 கிலோ மாட்டுக்கறி இருந்தது. இவர்களுக்கு பாடம் கற்பிக்கவும், தூய்மைபடுத்தவும் மாட்டுச்சாணியை தின்ன வைத்தோம்” என திமிராக கூறியுள்ளான்.
.
சாணி திணித்த இந்துவெறிக் கூட்டம் யாரும் கைது செய்யப்படாத நிலையில் பசு வதை தடைச் சட்டத்தின்படி சாணி திணிக்கப்பட்ட இளைஞர்களை கைது செய்துள்ளது ஹரியானா பா.ஜ.க அரசு.
.
தற்போது அடிமாடுகளை வெட்டிய ‘குற்ற’த்திற்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் இவ்விரு இளைஞர்கள். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கூட்டமோ இவ்வீடியோவை பரப்பி வெற்றி கொண்டாடுகிறார்கள்.
.
மத்தியில் மோடி ஆட்சியேற்ற பிறகு பார்ப்பனிய இந்துமதவெறி பாசிஸ்டுகளின் காட்டுமிராண்டித்தனம் தலைவிரித்தாடுகிறது.
.
மாட்டுக்கறி தொடர்பாக இவ்வாண்டில் இது போன்று 74 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன, மனித உரிமை அமைப்புகள். ஹிட்லரின் ஆட்சியை போன்று மக்கள் மீதான பாசிஸ்டுகளின் சட்ட மற்றும் சட்டத்திற்கு புறம்பான (extrajudicial) அமைப்புகளின் கண்.காணிப்புகள், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
.
புற்றீசல் போல பல்கி பெருகியிருக்கும் இந்துத்துவ பாசிச அமைப்புகள் ஒருங்கே போலீசாகவும் நீதிமன்றமாகவும் செயல்பட்டுவருகிறார்கள்.
.
சட்டத்தின் ஆட்சி என்பதை காலில் போட்டு அவர்களே மிதித்துவிட்டார்கள். இனியும் சட்டத்தையோ, நீதிமன்றங்களையோ நம்புவது பைத்தியக்காரதனமின்றி வேறேதுவாகவும் இருக்க முடியாது.
.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாவட்டம் திண்ணியத்தில் தலித் இளைஞர் வாயில் ஆதிக்க சாதியினர் மலம் திணித்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
.
அதே போன்று இங்கு முஸ்லீம் இளைஞர்கள் சாணி தினிக்கப்பட்டிருக்கிறார்கள்.
.
இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கிறார்களா இல்லைய என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அந்த ஐ.எஸ்-ஐவிட கொடூரமான இந்த மதவெறிக் கும்பல் கண்ணில் படவேபடாது.
.
என்ன இருந்தாலும் இது நாட்டை ஆட்சி செய்யும் தீவிரவாதமல்லவா!
.
எறும்புக்கும் மாவுகோலம் போட்டு பசியாற்றுவதாக பீற்றிக் கொள்ளும் பார்ப்பன இந்துமதம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நாயினும் கேவலமாக நடத்தியது.
.
இதுதான் பாரதீய பண்பாட்டின் வரலாறு.
.
இப்பண்பாட்டில் தலித்துகளை விட ஈயும் எறும்பும் மாடும் நாயும் தான் முக்கியமானவை.
.
அந்த பார்ப்பனியத்தின் தொடர்ச்சியாகத்தான் திண்ணியத்தையும், தற்போது ஹரியானாவையும் பார்க்க வேண்டும்.
.
மலம்/சாணி திணிப்பு என்பது பாரதீய பண்பாடாக நாடெங்கிலும் ஆதிக்க சாதிகளால் செயல்படுத்தப்பட்டு வருவது இதைத்தான் காட்டுகிறது.
.
மனித உணர்ச்சி, பண்பாடு , நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டிகளான இந்துத்துவ கூட்டத்திற்கு அவர்கள் மொழியில் அளிக்கப்படும் பதில் தான் புரியும் என்றால் அதை செய்வதை தவிர வேறு வழியேதுமில்லை.
.
– ரவி
.
Posted by வினவு

4 comments:

Dr.Anburaj said...


படிப்பதற்கே நா கூசுகின்றது. இப்பிரச்சனை இந்து மதம் சாா்ந்தது அல்ல.எப்படியோ மனித மனங்களில் பல வக்கிரங்கள் குடி கொண்டுள்ளது.எப்படி போக்குவது?

இந்துக்களுக்கு முறையான பண்பாட்டுப் பயிற்சி அளிக்க அரசு முன்வரவேண்டும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அன்பு உரையை படித்தால் எந்த இந்தியனும் இவ்வளவு மட்டமாக செயல்பட மாட்டான்.

Dr.Anburaj said...

எறும்புக்கும் மாவுகோலம் போட்டு பசியாற்றுவதாக பீற்றிக் கொள்ளும் பார்ப்பன இந்துமதம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நாயினும் கேவலமாக நடத்தியது. .........
இப்பண்பாட்டில் தலித்துகளை விட ஈயும் எறும்பும் மாடும் நாயும் தான் முக்கியமானவை. அந்த பார்ப்பனியத்தின் தொடர்ச்சியாகத்தான் திண்ணியத்தையும், தற்போது ஹரியானாவையும் பார்க்க வேண்டும்.

தவறு. மனித காடையா்கள் மிருகங்கள் செய்வதற்கும் இதற்கும் சமபந்தமில்லை. கடுமையான தண்டனை ஒரு தீா்வு. முறையான சமய கலாச்சார கல்வி நிரந்தர தீா்வு.

Dr.Anburaj said...

நடமாடும் கோவில் என்று மனிதனை சிறப்பித்து பாடுகின்றாா் திருமூலா். இந்த கருத்துக்களை படித்தவன் இப்படி நடப்பானா ? படிக்கவும் விடமாமடடேன் என்கின்றீா்கள்.மதச்சாா்பின்மைக்கு ஆபத்து என்று கூப்பாடு போடுகின்றாா்கள். மனிதனை பக்குவப்படுத்துவது எப்படி ?

Dr.Anburaj said...


அந்தணனாவதும் காட்டி வந்து ஆண்டாள் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
என்று திருவாசகத்தில் அந்தணனாக வாழ்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று மாணிக்கவாசகா் உரைக்கின்றாா். அந்தணனாக வாழ்வது எப்படி என்று காட்டினான் என்பது அதன் பொருள்.
இதை அனைத்து இந்துக்களும் உணரச் செந்து வாழ்வில் பின்பற்றச் செய்ய வேண்டும். மதசாா்பின்மை பேசி வீண்காலம் கழித்தால் இந்து சமூகம் அழிந்து போகும்.