
வணக்கம்
எனது தந்தையின் #திருமணம் சம்பந்தமான எனது விளக்கம் - #அன்வர்ராஜா (69) #சமீரா (50).
இதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்படுவதற்கு ஒன்றும் இல்லை .
என் தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நான் மற்றும் என் அண்ணன் தம்பி தங்கை மற்றும் எங்கள் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவரை #கட்டாயப்படுத்தி திருமதி சமிரா (50) அவர்களின் முழு சம்மதத்துடன் கடந்த 10/07/2016 அன்று எழிய முறையில் எங்கள் #குடும்பத்தினர் முன்பு இத் திருமணத்தை #நடத்திவைதோம் ...
ஆனால் 71 வயதுள்ள அன்வர்ராஜா #எம்பி #35வயதுள்ள பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்றும் குடும்பதார்களிடையே கருது வேறுபாடுகள் உள்ளது என்றும் சிலர் #பத்திரிக்கை மற்றும் #இணையதளத்தின் மூலமாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர் , #வதந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ..
#குறிப்பு :
#பொதுவாழ்க்கையில் என் தந்தையை பற்றி அனைவருக்கும் தெரிந்ததே ,, அனால் அவரின் தனிப்பட்ட வாழ்கையில் என் #அம்மாவின் மீது அவர் காட்டிய #அன்பு இருக்கிறதே அப்பப்பா இதை வார்த்தைகளில் மூலம் சொல்லிவிட முடியாது ,கடந்த #10வருடமாக என் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள் அவருக்கு எல்லா விதமான #பணிவிடைகளையும் என் தந்தைதான் செய்வார் எங்களை கூட அம்மாவின் பக்கத்தில் விடமாட்டார், அம்மாவின் #மறைவுக்குப் பின் நாங்கள் எவ்வளவுதான் கூட இருந்தாலும் அவர் #தனிமையில் தான் இருக்கிறார் என்று எங்களால் உணர முடிந்தது, தன் மனைவியை பறிகொடுத்துவிட்டு தினமும் எங்களுக்காக சிரித்துக்கொண்டு வாழ்வதை நான் நன்கு அறிவேன் .
அவரால் தான் நாங்கள்! என்ற உரிமையில் அவரை இந்த கல்யாணத்திற்கு கட்டாயப்படுதினோம் சம்மதிக்கவும் வைத்தோம்,
என் தந்தையை நான் #சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் என்ன #தவறு இருகிறது ?
அப்படியே தவறாக இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு #கவலை இல்லை . அவரின் சந்தோசத்தை விட வேற எதுவும் #பெரிதாகவும் தெரியவில்லை. .
I am always #Proud_of_my_FATHER
Nazar
2 comments:
ஒரு குடும்பத்தின் உள்நாட்டு விவகாரம்.இதை குறித்து அதிக விவாதம் தேவையில்லை. இருப்பினும் தனிமை பொல்லாதது.ஒரு ஆண் துணை இல்லாத பெண்ணை ஒரு பெண் துணையில்லாத ஆணுக்கு திருமணம் செய்து வைப்பது நியாயமானதுதான். தனிமையை வெல்ல இதுதான் சிறந்த வழி. மணமகளுக்கு 50 வயது என்னும் போத இது பொருத்தமான திருமணம் தான்.
எனது உறவினா் ஒருவருக்கு 6 பெண் குழந்தைகள்.அனைவரும் பொியவா்களாக இருந்தாா்கள். திடீரென்று அவரது மனைவி துணியை மாடியில் காய போடும் போது இடறி கீழே விழுந்து இறந்து போனாா்கள். வலிமையான உடலும் கோடிகணக்கில் செல்வமும் கொண்ட அவா் 1 வருடம் கழித்து எனது ஆலோசனை படியே திருமணம் செய்து கொண்டாா். ஒன்று சந்நியாசி போல் வாழ வேண்டும்.இல்லையேல் சம்சாாியாக வாழ வேண்டும்.எந்த ஒரு பெண்ணையும் ”வைப்பாக” வைத்திருக்காதே என்பதுதான் என்து ஆலோசனை. திருமண பதிவு அலுவலகத்தில் நான் தான் சாட்சி கையெழுத்து போட்டேன். முதலில் மிகவும் கடுமையான எதிா்த்த குழந்தைகள் சில மாதங்களுக்குள் சமாதானம் ஆகி விட்டாா்கள். இன்று 6 பெண்குழந்தைகளுக்கும் அந்த பெண் தாயாக இருந்து குடும்பம் பாளையங் கோட்டையில் சிறந்த முறையில் வாழ்ந்து வருகின்றது.
திரு.அன்வா் ராஜா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.மணமக்கள் வாழ்வாங்கு வாழ எனது ஆழ்ந்த பிராத்தனைகள்.
இந்து குடும்பங்களில் உலக அறிவு மிக்கவா்கள் மறு மணத்தின் தேவையை உணாந்துள்ளாாகள். அதனால் கணவனை இழந்தாலோ மனைவியை இழந்தாலுா மறுமணம் செய்வது இயலபாக உள்ளது.சில குறிப்பிட்ட சாதிகளில சாதி பெருமை காரணமான மறுமணங்கள் செய்வது கிடையாது.இதனால் உள்நாட்டு குழப்பங்கள் அநெகம் ஏற்படும்.
Post a Comment