

அன்வர் ராஜா மூன்றாம் திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இந்து மக்கள் கட்சியினர்.
ஆனால் இவர்கள் வழிபடும் தெய்வங்களுக்கு எத்தனை மனைவிகள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ராமனின் தந்தை தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. வட நாடுகளில் நாய்களுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காகவெல்லாம் பொங்காத இந்து மக்கள் கட்சி அன்வர் ராஜாவுக்கு பொங்குவதேன்? ஏனெனில் அவர் ஒரு முஸ்லிம்.
3 comments:
இன்று மரம் நடுதல், நீர்நிலைகளை உருவாக்கல் (ஏரி தூறு எடுத்தல், கிணறு வெட்டுதல்) முதலியவற்றைப் பெரும் விளம்பரத்தோடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த புறச் சூழல் விழிப்புணர்வும் இயற்கைப் பாதுகாப்பும் நம் நாட்டில் இருந்தது. குறிப்பாகத் தமிழர்கள் இது பற்றிப் பாடி வைத்துள்ளனர். அதற்கு முன்னர் உலக மஹா கவிஞன் காளிதாசனும் இதைப் பாடிவைத்துள்ளான்.
காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம்; கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்;
உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்
என்று காடு வளர்ப்பு பற்றி பாரதி பாடும் முன்னரே, வேறு பல கவிஞர்களும் பாடிவைத்தனர்.
குளம்தொட்டுக் கோடுபதித்து வழிசீது
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி -- வளம்தொட்டுப்
பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.--சிறுபஞ்சமூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்
1)நீர்நிலைகலை உருவாக்கி,
2)அவைகளைச் சுற்றி மரக்கிளைகளை நட்டு,
3)மக்கள நடக்கும் வழியை உண்டாக்கி,
4)தரிசான நிலத்தில் உள்ள இடத்தைச் செம்மைப் படுத்தி வயலாக ஆக்கி வளப்படுத்தி,
5)சுற்றுப்சுறுபுறத்தில் சுவர்களுடன் கிணற்றைத் தோண்டி உதவுபவன் -- இந்த ஐந்தையும் செய்பவன் -- சுவர்க்க லோகம் புகுவான்.
இன்னும் ஒரு பாடல்
நீரறம் நன்று நிழல் நன்று தன்னில்லுள்
பாரறம் நன்றுபார்த்து உண்பானேல் -- பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சாலவுடன்.
கோயிலுடன், மரங்கள் அர்டர்ந்த சாலையை அழியாதபடி நிலைபெறச் செய்வது மிக நல்ல தர்மம்;
இந்த ஐந்தையும் செய்தால் பேரின்பம் ஏற்படும் (பேரின்பம் = பிரம்மானந்தம்).
காளிதாசன் சொன்னது:--
திலீபன் என்னும் மன்னன் கிராமப்புறம் வழியாகப் பயணம் செய்தான்; அரசன் வருவதை அறிந்த வயதான இடைக்குலப் பெரியோர்கள், அரசனை வெறும் கையோடு பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்லுவதால், புத்துருக்கு நெய்யோடு (புதிதாகக் காய்ச்சி உருக்கப்பட்ட நெய்) அவனைச் சந்தித்தார்கள். அரசனோ மஹா அறிவாளி. இடைச் சேரிக்கிழவர்களுடன் என்ன பேசுவது? அவர்களோடு பேசுவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டுமல்லவா? ஆகையால் மரங்களின் பெயர்களை எல்லாம் விசாரித்தானாம். ---காளிதாசனின் ரகுவம்சம் 1-45
(என்னைவிட உங்களுக்கு இதில் அறிவு அதிகம் என்று மன்னனே ஒத்துக்கொண்டதால் இடையர்கள் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பர். மன்னனுக்கு மரங்கள் பற்றிக்கூட அறிந்துகொள்ளும் வழக்கம் அக்கலத்தில் இருந்தது).
இன்னும் ஒரு பாடல்
மரத்தை மகன் போல வளர்த்த குறிப்பு மேகதூதத்தில் வருகிறது. மரத்தை சகோதரி போல நினைப்பது தமிழில் நற்றிணையில் வருகிறது.
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாமல் சகுந்தலை சாப்பிட மாட்டாள் என்று சாகுந்தலம் ெப்பும்.
முல்லைக் கொடியில் எவனாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற உவமையை காளிதாசன் சாகுந்தலத்தில்கு பயன்படுத்துவான்.
விஷமரத்தையும் கூட வெட்டக்கூடாது என்று குமார சம்பவத்தில் பாடுகிறான்.
மரங்களை வெட்டாதே என்று காரிக்கண்ணனார் பாடுகிறார் (புறநானூறு 57)
ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்
விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:
--மனு ஸ்மிருதி 2-240
எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-
பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)
தூய்மை (விதிகள், உணவு), நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)
மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்
நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:--
வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)
மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-
விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;
குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;
எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;
அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்
மனு 2- 239
இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.
ms garland making
மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.
2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது. க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)
வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.
ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.
--Subham--
Tamil and Vedas | July 5, 2016 at 8:24 am | Tags: எங்கிருந்தாலும், பெண்கள், பொன்மொழிகள், ரத்தினங்கள், Women | Categories: தமிழ் பண்பாடு, பெண்கள், பொன்மொழிகள், Tamil | URL: http://wp.me/p1BQAR-5tA
Post a Comment