Followers

Saturday, July 30, 2016

புனிதப்பசு எனும் கட்டுக்கதை - டி. என். ஜாபண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்

புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

பசுக் கொலை பற்றிய சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை செயல்படுத்துவதாக மத்திய பிரதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த சட்டம் கொடுமையானது என்று பல பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இந்திய பாரம்பரியத்தில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

கேள்வி :

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை உங்கள் புத்தகம் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது. இந்த முடிவுக்கு வருவதற்கு நீங்கள் பயன்படுத்திய முக்கிய ஆதாரங்கள் என்ன?

பதில்:

கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறேன்.

கேள்வி :

பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்களை கொடுக்க முடியுமா?

பதில்:

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

கேள்வி:

நீங்கள் இந்தக் கருத்தை விளக்குவதற்கு பழங்கால இந்திய ஆதாரங்கள் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், இடைக்கால அல்லது நவீன இந்தியாவில் பசுவை உணவுப்பொருளாக பயன்படுத்துவது குறித்த மற்ற “இந்து ஆதாரங்கள்” இருக்கின்றனவா?

பதில்:

வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேள்வி:

பசுவின் புனிதம் என்ற தொன்மம் இந்துக்களின் மனத்தில் எப்படி தோன்றியது? உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு எதிராக பசுவின் புனிதம் பற்றிய கருத்துக்கள் நிலவிய நிகழ்வுகளும் கால கட்டங்களும் இந்திய வரலாற்றில் இருக்கின்றனவா? பழங்கால இந்தியாவில் பசுவை மத ரீதியாகவும் இந்து மதத்தின் புனித சின்னமாகவும் பார்க்கும் பாரம்பரியங்கள் இருந்தனவா?

பதில்:வேத காலத்தில் பசு புனிதமானதாக இருந்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன. ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.

புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் இந்திய சமூகம் படிப்படியாக நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறும் போது சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரிய சமூக கலாச்சார மாற்றத்துக்கு வழி வகுத்தது. இதிகாசங்களிலும், புராணங்களிலும் கலியுகம் என்று விவரிக்கப்படும் மாற்றத்தின் இந்தக் கட்டம் சமூக மரபுகளிலும் பழக்கங்களிலும் பல மாற்றங்களையும் மாறுதல்களையும் கண்டது. முந்தைய பல பழக்கங்கள் கலியுகத்தில் தடை செய்யப்பட்டவையாக பார்ப்பன மத நூல்கள் பேச ஆரம்பித்தன. இந்த பழக்கங்கள் கலிவர்ஜ்யாக்கள் என்று அழைக்கப்பட்டன. இது தொடர்பான நூல்கள் கலியுகத்தில் பசுக்கொலை தடை செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றன.

பசு கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ‘தீண்டத்தகாத’ சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால், சில தர்மசாஸ்திர நூல்கள் இந்த செயல்களை மாறுபட்ட நடத்தைகள் என்ற அளவிலேயே பார்க்கின்றன என்பது கவனத்துக்குரியதாகும். தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது. 19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். இன்று கூட, கேரளாவில் 72 சமூகங்கள் செலவு அதிகமாகும் ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்லப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துத்துவா சக்திகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளும்படி அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்றன.

இவ்வளவு இருந்தும், உபனிஷத சிந்தனைகளில் வளர்ந்த அகிம்சை தத்துவம், புத்த ஜைன உலகப் பார்வைகளில் அதன் முனைப்பான தாக்கம், வைணவ மதத்தில் அதற்கு இருந்த மையப் பங்கு ஆகியவை கொல்லாமை பற்றிய கருத்துக்களை வளர்த்தன. விவசாய சமூகத்தில் அதற்கு இருந்த பொருளாதார மதிப்பின் காரணத்தால் பசு சிறப்பான முக்கியத்துவம் பெற்றது. பசுக்களை பார்ப்பனர்கள் தக்ஷிணையாக பெறுவதால் அவை கொல்லப்படுவதை விரும்பவில்லை.

கேள்வி:

பசுக்கொலை இந்தியாவில் எப்போதிருந்து அரசியல் பிரச்சனையாக மாறியது? இந்த விஷயம் தொடர்பாக ஏதாவது வரலாற்று இயக்கம் இருந்திருக்கிறதா? பசுவின் “உற்பத்தி செய்யப்பட்ட புனிதம்” அரசியல் ஆள் சேர்ப்புக்காக பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணங்களை நீங்கள் சொல்ல முடியுமா?

பதில்:

காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது. முகலாய பேரரசர்கள் (எடுத்துக்காட்டாக, பாபர், அக்பர், ஜஹாங்கிர் மற்றும் அவுரங்கசீப்) ஜைன அல்லது பார்ப்பனர்களின் பசுவின் மீதான மரியாதை, வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பசுக் கொலையின் மீது அளவான தடையை விதித்தனர். ‘பசுவையும் பார்ப்பனரையும் பாதுகாப்பதற்காக மண்ணில் அவதரித்த கடவுளாக’ கருதப்படும் ஷிவாஜி, “நாங்கள் இந்துக்கள், இந்த நாட்டின் முறையான உரிமையாளர்கள். பசுக் கொலையையும் பார்ப்பனர்கள் அடக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு ஏற்பில்லாத ஒன்று” என்று அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது. முறையான பசு பாதுகாப்பு இயக்கம், பஞ்சாபில் சுமார் 1870ல் சீக்கிய குக்கா (அல்லது நாம்தாரி) பிரிவினரால் தொடங்கப்பட்டு, 1882ல் தயானந்த சரஸ்வதி முதல் கோரக்ஷினி (பசு பாதுகாப்பு) சபையை ஆரம்பித்த போது வலுவாக்கப்பட்டது. பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களின் பசுக் கொலை பழக்கத்தை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.

இது 1880களிலும் 1890களிலும் பல மதக் கலவரங்களுக்கு வழி வகுத்தது. அதற்கு முன்பே பசுக் கொலை பற்றிய கருத்துக்கள் வலுவாகி வந்திருந்தாலும், 1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகு பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது. பசுக் கொலை பல இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக அசம்கர்க் மாவட்டத்தில் 1893ல் நடந்த கலவரங்கள். இந்த கலவரங்களில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், 1912-1913ல் அயோத்தியை வன்முறை உலுக்கியது. சில ஆண்டுகள் கழித்து 1917ல் ஷாஹாபாத் பேரழிவு ஏற்படுத்திய மத பெருந்தீயை எதிர் கொண்டது.

சுதந்திர இந்தியாவில் கூட பசுக் கொலை மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயமாக அரசியல் வானில் உருவெடுத்தது. 1966 இல், சுதந்திரம் அடைந்து சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய மதவாத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேசிய அளவில் பசுக் கொலையை தடை செய்யும் படி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அது இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு வன்முறையில் முடிந்தது, குறைந்தது எட்டு பேரின் இறப்புக்கும் இன்னும் பல பேர் காயமடையவும் வழி வகுத்தது. ஏப்ரல் 1979 இல், மகாத்மா காந்தியின் ஆன்மீக சீடர் என்று கருதப்படும் ஆச்சார்ய வினோபா பாவே பசுக் கொலையை தடை செய்ய மத்திய அரசை கோரி உண்ணா விரதம் இருந்தார்.

குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர். வேத காலத்திலும் சரி, அதைத் தொடர்ந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத மரபுகளின் அடிப்படையிலும் சரி “புனித” பசு எல்லா காலங்களிலும் புனிதமாக இருக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.

கேள்வி:

மாட்டிறைச்சி சாப்பிடுவது வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? அத்தகைய அங்கீகரிப்புகளும் எதிர்ப்புகளும் வரலாற்று ரீதியாகவே வளர்ந்திருக்க வேண்டும்.

பதில்:

தென் இந்தியாவில் சில பகுதிகளில் மாட்டிறைச்சி-உண்ணுவது வழக்கமாக இருக்கிறது, ஆனால் அதை பொதுமைப்படுத்த முடியாது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியினரும் தலித்துகளும் முஸ்லீம்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். வட கிழக்கு இந்தியாவின் மலை சமூகங்களும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். ஆனால் இதையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. முன்னாள் தெற்கு பீகாரின் பெரும்பான்மை பழங்குடியினர் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை.

கேள்வி:

நாம் பழங்குடி மக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்களை விட்டு விட்டால் கூட ஒரு கணக்கீட்டின் படி இந்துக்களில் 40 சதவீதம் பேர் இன்று மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இந்தியா முழுவதும் வசிக்கும் தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் செலவு குறைவாக கிடைக்கும் இறைச்சி. மத்திய பிரதேச அரசு சமீபத்தில் பசுக் கொலையை மட்டுமின்றி மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்துள்ளது. அந்த தடை கொடுமையானது என்று பலர் கருதுகிறார்கள் அந்த சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

எந்த புத்திசாலி இந்தியனும் தனது கால்நடையை கொல்ல மாட்டான் என்பதே எனது கருத்து. அப்படி அவன் கொன்றால் அந்த சட்டத்தின் கீழ் அவன் தண்டிக்கப்படலாம். விலங்கு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பசுவுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிலைமை? சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது? பெருநகரங்களில் பசுக்கள் பணக்காரர்களின் ஆடம்பர கார்களுக்கும் ஏழைகளின் தள்ளு வண்டிகளுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துகின்றன. தூக்கி எறியப்பட்ட சாப்பிட தகுதியற்ற உணவுப் பொருட்களையும், நாற்றமெடுக்கும் பிணங்களையும் கொண்ட குப்பை குவியல்களில் அவை மேய்கின்றன.

வயதான, பலவீனமான, பட்டினி கிடக்கும் பசுக்களை கொல்வதையும், ஏழைகளின் புரதமான அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதையும் தடை செய்வது இயற்கைக்கு எதிரானது. உணவு தேர்வுகளை நெறிப்படுத்தும் சட்டம் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானதும் கொடுமையானதும் ஆகும். ஜன சங்க (இப்போதைய பிஜேபி) தத்துவார்த்த தலைவர் கே ஆர் மல்கானி இயற்கையாக இறந்த மாட்டின் இறைச்சியை சாப்பிடுவதை எந்த தயக்கமும் இல்லாமல் ஆதரித்தார் என்பதை சங்க பரிவாரத்துக்கு நினைவு படுத்த வேண்டும்.

கேள்வி:

இந்தியாவில் பசுக் கொலை எதிர்ப்பு பற்றிய கருத்தாக்கத்தின் புத்துயிர்ப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பெரும்பாலான பிஜேபி ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்த பிரச்சனை அரசியல் அணி திரட்டலுக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்துக்கு வந்தவுடனேயே பசுக் கொலை தடைச் சட்டத்தை கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக அந்த அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன.

பதில்:

சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது. பசுக் கொலை எதிர்ப்பு இயக்கத்தின் புத்துயிர்ப்பு இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.

________________________________________________________

– நன்றி: – அஜய் ஆஷிர்வாத் மஹாபிரஷாஸ்தா (பிரண்ட்லைன்)

தமிழாக்கம்: அப்துல்

தகவல் எடுத்தது வினவு தளம்.


போபாலில் ஒரு காட்சி. குப்பை குவியல்களை கிளறி உணவைத் தேடும் இது போன்ற பசுக்களை பராமரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.-----------------------------------------------

அரியானாவில் மாட்டை உரித்த ‘குற்றத்துக்காக’ ஐந்து தலித்துகளை எரித்துக் கொன்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

34 comments:

Dr.Anburaj said...

பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்
May 10, 2010
- ஆர்.கோபால்

pork_steaksபன்றிக்கறியைச் சாப்பிடுபவர்களிடம் கேட்டால், பன்றிக்கறியின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும், ஆடு, மாடு கறிகளை விட கொழுப்பில் குறைவானதாக இருக்கும் பன்றிக்கறி சுவையில் மிகுந்திருப்பது உண்மை.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்துக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு பன்றிக்கறி. சுமார் 7000 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பன்றிகள் பன்றிக்கறிக்காக வளர்க்கப்பட்டுள்ளன என்பது அகழ்வாராய்ச்சிகளில் தெரியவருகிறது [1]. மனிதர்களால் முதன் முதலில் உணவுக்காக வளர்க்கப்பட்ட மிருகம் பன்றிகளே என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றின் ஆரம்பத்தில், பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி எடுக்க காடுகளில் மனிதர்களுக்கு உதவியிருக்கின்றன. அவை பூமியை கிழங்குக்காக நோண்டிப் போட்ட பின்னால், அந்த நிலங்களில் உழுவது எளிதாக ஆகிறது. தாவரங்களையும் சிறு விலங்குகளையும் பன்றிகள் தின்பதால், பன்றிகள் இருக்கும் பழங்குடி கிராமங்கள் சுத்தமானவையாக ஆகின்றன.

இன்றும் உலகத்தில் மிக அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஒன்று பன்றிக்கறியாகும். உலகத்திலேயே மிக அதிகமாக பன்றிக்கறி உண்ணும் நாடு சீனா. அங்கு 52.5 மெட்ரிக் டன் அளவு பன்றிக்கறி உண்ணப்படுகிறது. இது அங்கு ஒரு ஆளுக்கு 40 கிலோ அளவாகும். அதற்குப் பின்னரே ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வருகின்றன. பசிபிக் தீவு, தென் கிழக்காசியா (லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து பிலிப்பைன்ஸ்) ஆகிய நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுவது பன்றிக்கறிதான். பன்றிக்கறியே அந்த நாடுகளின் முக்கிய உணவு.

இந்திய அரசு பன்றிப் பண்ணைகளில் கவனம் செலுத்தி அவற்றில் குறைந்த செலவில் விவசாயிகள் மிகுந்த லாபம் ஈட்டலாம் என்பதனை அறிவுறுத்தி வருகிறது. [2]

பன்றிக்கறி மூலம் செய்யப்படும் ஏராளமான உணவு வகைகள் இந்தியாவில் புழங்குகின்றன. மேலை நாட்டு உணவில் மிக முக்கியமான ஓர் உணவு பன்றிக்கறி. இத்தாலிய ‘புரோசிட்டோ’ (Prosciutto)* எனப்படும் பன்றிக்கறி அனைவராலும் மிகுந்த சுவை மிகுந்ததாகப் பாராட்டப்படுகிறது.

மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. இதில் கோழிக்கறியை விட மையோக்லோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. மையோக்லோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்லோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்லோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குக் கெடுதி என உணரலாம்.

Dr.Anburaj said...

நூறு கிராம் பன்றிக்கறியில் உள்ள சத்துகள் (Nutritional Value per 100 g)

Energy 1,013 kJ (242 kcal)
Carbohydrates 0.00 g
Sugars 0.00 g
Dietary fiber 0.0 g
Fat 13.92 g
saturated 5.230 g
monounsaturated 6.190 g
polyunsaturated 1.200 g
Protein 27.32 g
Tryptophan 0.338 g
Threonine 1.234 g
Isoleucine 1.260 g
Leucine 2.177 g
Lysine 2.446 g
Methionine 0.712 g
Cystine 0.344 g
Phenylalanine 1.086 g
Tyrosine 0.936 g
Valine 1.473 g
Arginine 1.723 g
Histidine 1.067 g
Alanine 1.603 g
Aspartic acid 2.512 g
Glutamic acid 4.215 g
Glycine 1.409 g
Proline 1.158 g
Serine 1.128 g
Water 57.87 g
Vitamin A equiv. 2 μg (0%)
Vitamin B6 0.464 mg (36%)
Vitamin B12 0.70 μg (29%)
Vitamin C 0.6 mg (1%)
Vitamin K 0.0 μg (0%)
Calcium 19 mg (2%)
Iron 0.87 mg (7%)
Magnesium 28 mg (8%)
Phosphorus 246 mg (35%)
Potassium 423 mg (9%)
Sodium 62 mg (3%

Dr.Anburaj said...

தற்போது சுகாதார முறையில் பன்றி வளர்ப்பது தமிழ்நாட்டில் பரவி வருகிறது [3]. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ரங்கபிரபு பல ஏலக்காய்த் தோட்டங்களையும் தென்னந்தோப்புகளையும் பராமரித்து வந்தாலும் திடீரென்று அவரது தென்னை மரங்கள் பட்டுப்போக ஆரம்பித்தன. எவ்வளவுதான் விவசாய அறிவியலறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு வேதிப்பொருள்களைத் தெளித்தாலும், பட்டுப்போவது நிற்கவில்லை. அவர் 100 பன்றிகளை வளர்த்து வந்தார். அவரது பன்றிகளின் கழிவுகளை தோப்புகளுக்கு வெளியே கொட்டி வந்தார்கள். அதனை நிறுத்திவிட்டு, அந்த பன்றிக்கழிவையே தென்னைகளுக்குப் போட ஆரம்பித்தார். பட்டுப்போயிருந்த தென்னைகள் கூட துளிர்விட்டு செழுமையாக வளரத்துவங்கின. பொதுவாக 60 காய்களைத் தரும் தென்னைகளில் கூட பிறகு 100-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் காய்க்க ஆரம்பித்தன. ஏலக்காய் தோட்டங்களிலும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அங்கும் பசுமை தலைகாட்ட ஆரம்பித்தது. தோட்டங்கள், விவசாயப் பண்ணைகளின் ஓர் இன்றியமையாத அங்கமாக பசுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை வைப்பதும் அவற்றின் கழிவுகளை இயற்கை உரமாக செடிகொடி மரங்களுக்குப் போடுவதும் இன்றியமையாதது.

எல்லா மாமிசங்களைக் கையாள்வதும், சாப்பிடுவதையும் போலவே பன்றிக்கறியிலும் செய்யவேண்டும். நாம் கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவற்றை நன்றாக வேகவைத்து சமைத்து உண்பது போலவே பன்றிக்கறியையும் சமைத்து உண்ண வேண்டும். ஒரு சிலர் பன்றிக்கறியில் மட்டும் புழு இருக்கிறது; நாடாப்புழு இருக்கிறது என்று சொல்லி பன்றிக்கறியை சாப்பிடக்கூடாது என்பது போலச் செய்து வைத்துள்ளார்கள். அது உண்மையல்ல. எல்லாக் கறிகளும் சுகாதாரத்துடனேயே கையாளப்பட வேண்டும். எந்தக் கறியையும் சுகாதாரமின்றி கையாண்டாலோ முழுவதும் சமைக்காமல் இருந்தாலோ சுகாதாரக்கேடுதான். முன்பு மேலை நாடுகளில் பன்றி சுகாதாரமின்றி சமைக்கப்பட்டதால், Trichinosis என்ற வியாதி மிகவும் பரவலாக இருந்தது. நாடாப்புழு என்ற ஒட்டுண்ணி, சரியாக சமைக்கப்படாத பன்றிகறியிலிருந்து மனித குடலில் ஒட்டிக்கொள்வதால் வரும் வியாதியே Trichinosis என்ற இந்த வியாதி. இது தற்போது மேலை நாடுகளிலேயே மிகவும் அரிதாக ஆகிவிட்டது. மேலை நாடுகளில் முழுவதுமாக சமைக்காத பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் தற்போதும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முழுவதுமாக வேகவைத்து சமைக்கப்பட்ட உணவையே நாம் உண்பதால், இந்த பிரச்சினை இல்லை. ஆகவே இப்படி பயமுறுத்துபவர்களின் பொய்களுக்குப் பலியாகவேண்டாம்.

சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட பன்றிக்கறி சுவை மிக்கது.

முஸ்லீம்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.

Dr.Anburaj said...ஆன்மிக வாழ்க்கை சாதனை யோகம் என்று செல்லும் போது மாமிசத்தை ஒதுக்க வேண்டும். தனிவாழ்க்கையில் சொந்த மதிப்பீடுகள் அடிப்படையிலும் மாமிசத்தை ஒதுக்கலாம். ஆனால் சமுதாய பொதுவாழ்க்கையில் மாமிசம் உண்போர் வாழ்வது அவசியம். கௌசிகன் எனும் அந்தணனுக்கு தர்மத்தை உபதேசித்தவர் தர்மவ்யாதர் என்கிற கசாப்பு கடைகாரர்தாம்.

பன்றி கறி மீது ஒரு வெறுப்பை ஆபிரகாமிய மதம் ஒன்று பரப்பி வருகிறது. (ஒருவேளை பழைய பாகனீய சமுதாய விழாக்களில் பன்றி மாமிசம் முக்கியமான பங்கு வகித்ததால் இருக்கலாம். ஒவ்வொரு அஸ்ட்ரிக்ஸ் சாகஸமும் பொன்னிறத்தில் தகதகக்கும் பன்றி இறைச்சி விருந்துடன் தானே முடியும்?)

இதனால் பல கிராமங்களில் கூட பன்றி வளர்ப்பது கஷ்டமான விஷயமாக மாறி வருகிறது. அத்துடன் பன்றியை சுகாதாரமாக வளர்க்காத சூழலும் ஏற்பட்டு வருகிறது. பன்றி வேட்டை நம் வேடுவர் சமுதாயங்களில் முக்கியமானது. பரமசிவனே பன்றி வேட்டையாடியிருக்கிறார். எங்கள் மாவட்டத்தில் சிவபெருமான் பன்றி வேட்டை ஆடியதை நினைவுவணங்கும் விதமாக பன்றியடித்தான் விளை, பன்றிபாகம் என ஊர்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி இறைச்சியைதானே படைத்தார். எங்கள் ஊரில் கடுவாமூர்த்தி விடுவாதை சாமிக்கு கொடைவிழாவில் பன்றி இறைச்சி படைப்பார்கள். காட்டுப்பன்றி இன்றைக்கும் விவசாய மக்களுக்கு குறிப்பாக மரச்சீனி கிழங்கு விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனை. எனவே பன்றி வேட்டை முக்கியமான விசயமாகவும் சில சமுதாயங்களிடையே உள்ளது. இந்நிலையில் பன்றி இறைச்சியை எப்படி சமைக்கலாம் என்கிற குறிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே. தமிழ்ஹிந்து அதனை வெளியிட்டது ஒரு நல்ல விசயம்தான்.

Dr.Anburaj said...

உறுதியான உடலில்தான் தெளிவான மனம் இருக்கும் என்று நம் முன்னோர்களில் சிலர் கருதினார்கள் போலும். ஆனால், உடலும் மனமும் பலகீனமானாலும் முடிந்த அளவு பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும் சில முன்னோர்கள் கருதினார்கள்.

பன்றிக் கறியின் சுவையையும் அதனால் உடல் நலன் அதிகமாவதும் குறித்து திருமூலருடைய பாடல்களிலும், சங்கப் பாடல்களிலும் கவிதைகள் உள்ளன.

அதே போல இந்து மதப் பெரியோர்களின் படைப்புகளான திருக்குறளும், சைவ சித்தாந்த ஆகமங்களும் சைவ உணவின் பெருமையைப் பெரிதாகப் பேசுகின்றன, அசைவ உணவுப் பழக்கத்தை கண்டிக்கின்றன.

ஆனால், இந்த இரண்டுவகை பழக்கங்களும் இந்துத்துவ சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தனிப்பட்ட மனிதரின் விருப்பத்திற்கு வளையும் சமுதாயமாகவே இந்து மதம் இருக்கிறது.

வேத ரிஷிகள் அசைவம் உண்டவர்கள்தான். அகத்தியரும், காஸ்யபரும், விசுவாமித்திரரும், பரத்வாஜரும், மற்றுமுள்ள அனைத்துப் பெரியோர்களும் மாமிச உணவையே உண்டவர்கள்.

பௌத்த, ஜைன மதங்கள் பரவிய இடங்களில் மட்டுமே சைவ உணவுப் பழக்கம் உள்ளது. அவை பரவாத இடங்களில் மாமிச உணவு உண்ணும் பழக்கம் இன்றும் அதிகமாக உள்ளது.

உதாரணமாக, உபி, ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் பிராமணர்களும் மாமிச உணவு உண்பவர்களே. அவர்களது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மாமிசம் மிக முக்கியத் தேவை. பெங்காலிகள் மீன் உண்பவர்கள்.

இந்து மதம் என்பது பல்வேறு வழிமுறைகளுக்கும் ஆதரவு அளிப்பது. தன்னுடைய வழிமுறையே சிறந்தது என்று எண்ணி மற்றவரின்மேல் திணிக்காதது.

எனவே, இந்துக்களின் உடல்-மன நலன்களைக் கருத்தில் கொண்டு இதைப் போன்ற பல கட்டுரைகள் வருவது மிக அவசியம்.

தேசம் முழுவதும் வலம் வந்து அத்வைதத்தை நிறுவிய ஆதி சங்கரர்கூட அவர் சென்ற இடங்களின் உணவுப் பழக்கத்தின்படி மீனும், மாமிசமும் உண்டார் என்று செவிவழிக் கதைகள் உண்டு. ஷீரடி சாயி பாபாவும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

நமது நம்பிக்கைகள் மற்றும் புரிதல்களின்படி இந்தத் தளத்தில் வரும் கட்டுரைகள் பரிந்துரைக்கும் ஒரு உணவை ஏற்றுக்கொள்ளுவதோ, விலக்குவதோ நமது சுதந்திரம்.

ஆனால், சைவம் மட்டுமே சரி, அசைவம் சரியல்ல என்றோ அல்லது அசைவம் மட்டுமே சரி, சைவம் சரியல்ல என்றோ வரையறுப்பது இந்து மதத்தில் இல்லை.

ஒரு குறிப்பிட்ட வகை உணவின்மீது வெறுப்பைக் காண்பிப்பது சரியல்ல. அன்னம் பிரம்மா. அதை இகழ்வது தவறு.

உலக அளவில் அதிக அளவு சைவ உணவாளர்களைக் கொண்டுள்ள இந்தியாதான் நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்களை அதிகம் கொண்டுள்ளது.

WHO வெளியிட்ட ஆதாரபூர்வமான அறிக்கையின்படி, நீரிழிவு நோயால் துன்பப்படுபவர்கள் சதவீதம் கீழே:

இந்தியா: 31.7

இந்தோனேசியா: 8.4

Source: http://www.who.int/diabetes/facts/en/diabcare0504.pdf

பேசாமல் இந்தோனேசியர்களைப் போல அதிகம் பன்றிக் கறி சாப்பிட்டு நீரிழிவு நோயில் இருந்து விடுபட முயற்சிப்போம்.

எந்த உணவு நலன் தருகிறதோ, அது சைவமோ அசைவமோ, அதைப் பழகி வலிமை அடைவோம்.

எந்த உணவு பலன் தரவில்லையோ, அது சைவமோ அசைவமோ, அதை விலக்கி வலிமையைப் பாதுகாப்போம்.

Dr.Anburaj said...


இந்தோனேசியா முஸ்லிம் நாடு.இருப்பினும் அங்கே பன்றிகளை முஸ்லிம்கள் சாப்பிடுகின்றாா்கள்..அதனால் தான் அங்கே நிரழிவு நோய் குறைவாக இருக்கிறது!!!

சவுதி அரேபியாவில் பன்றிகளை நினைத்தாலே கொன்றுவிடுவார்கள்! ஆனால் அங்கே 28 சதவிகிதம் நிரழிவு நோய் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.

அங்கே ஒட்டகத்தையும் மாட்டையும் அதிகமாக உண்ணுவதால் முன்றில் ஒருவருக்கு சிறுநிரக கோளறு உள்ளதாகவும் கணக்கிடபட்டுள்ளது!!!

அதனால! அதிகமாக உடல் உழைப்பவர்கள்,எல்லாம் வகையான மாமிசத்தையும் சாப்பிடட்டும் ( பன்னியை ஏன் ஒதுக்குவனேன்?!) .உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை மட்டும் சாப்பிடுவதே நல்லது.ஆனால் மனிதர்களின் கர்ம வினை,கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் தேவை அற்றவர்களுக்கே கிடைகிறது! என்ன செய்ய!

காய் கறியை சாப்பிடுறதாலே நான் உயர்ந்தவன்னு சொல்லிட்டு யாரும் அலைய வேண்டிய அவசியமும் இல்லை!

நம்ம உலகத்துல கொஞ்ச பேர் பன்னி பீ சாப்பிடுது அதனால தான் அதை நாங்க சாப்பிடறது இல்லை என்று சொல்லுறாங்க! இவங்க மறந்து இருக்கிற விஷயம் என்ன என்றால், ஆடு,மாடு,கோழி,கூட போற வழியில அது கிடைச்சா நக்கிட்டும், கொத்திட்டும் போனதை நாம பார்க்குறோம்! அதுக்கு என்ன தெரியும் எழவு என்னான்னு!

சுகாதாரமாக வளர்க்கப்பட்ட எந்த மாமிசத்தையும் சாப்பிட நினைபவர்கள் சாப்பிடலாம்!

Dr.Anburaj said...


எனது கருத்தக்களை முழுவதுமாக பதிவு செய்து விட்டேன்.

Dr.Anburaj said...

பன்றிக்கறிக்கு எதிரான கருத்தும் உள்ளது


பன்றிகள் உடலளவில் வெப்பப் பிராணிகள் (sweating like a pig என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்). தங்கள் உடல் சூட்டை அவைகள் குறைத்து மெயிண்டெயின் செய்ய ஏராளமான தண்ணீர் தேவைப் படும் – ஒரு மனிதன் தன் எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தும்

தண்ணீர் போல 5-6 மடங்கு தண்ணீர். நல்ல தண்ணீர் கிடைக்காத போது அவை மலத்திலும் சேற்றிலும் புரள்கின்றன.

பாலைவனப் பகுதிகளில் பன்றி வளர்க்கும்போது தண்ணீர்த் தேவை அளவில் அது மனிதனுக்கே போட்டியாக மாறுகிறது.. அதனால் தான் மத்தியக் கிழக்கு பாலைவனத்தில் தோன்றிய செமிட்டிக் மதங்கள் (யூதம், பிறகு இஸ்லாம்..) பன்றி இறைச்சியைத் தடை செய்தன என்று மானுடவியலாளர் மர்வின் ஹாரிஸ் தனது நூலில் கூறுகிறார்

(தமிழில் “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்…. “ என்ற பெயரில் வந்துள்ளது). கிறிஸ்தவம் நீர்வளம் நிரம்பிய ஐரோப்பாவில் பரவிய போது பன்றி இறைச்சித் தடை தானாகவே மறைந்து விட்டது..

இந்தியாவில் நீர்வளம் அதிகமான பகுதிகளில் தான் சுவையான பன்றி இறைச்சி நிறைய உண்கிறார்கள் – கோவா, கர்நாடகத்தின் கூர்க் பகுதி, அஸ்ஸாம் போன்ற பிரதேசங்களில்… நீங்கள் கூர்க்கில் பயணம் செய்யும்போது கொழு கொழுவென்று வளர்ந்து, மாட்டின் உயரம் இருக்கும் வெண்பன்றிகளைப் பார்க்கலாம் – அவை பார்க்கவே கம்பீரமாக இருக்கும். அது மட்டுமல்ல, அங்கு திரியும் கோழிகள், ஆட்டுக்கிடா எல்லாமே மகா புஷ்டியாக இருக்கும்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் தண்ணீர்த் தட்டுப் பாடு நிலவுகிறது. எனவே, அங்கு சுகாதாரமான முறையில் பன்றி வளர்க்க முடியாது.. அப்படி வளர்க்க வேண்டுமானால், மனிதர்களுக்கான தண்ணீரை பன்றி வளர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.. ஒரு சிலரின் மாமிச உணவு ருசிக்காகத் தரப்படும் மிகப் பெரிய விலை அது..

Dr.Anburaj said...இதையும் கொஞ்சம் படியுங்கள்.
http://www.nytimes.com/2010/05/13/sports/13runner.html?ref=health&pagewanted=all
ஒரு நபருக்குப் பொருந்துவது எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் சொல்லவில்லை. இவர் ஒரு மாரதான் ஓட்டக்காரர். ஒரு நாளைக்கு 15 -25 மைலெல்லாம் ஓடுகிறார், பயிற்சிக்காக. இவர் உண்பது 5000-8000 கலோரிகள். நாமெல்லாம் 2500 கலோரி சாப்பிட்டாலே கொஞ்சம் திணறுவோம்.
முக்கியமான செய்தி இதில். இவர் முழுச் சாக பட்சிணி. அதாவது பால் இத்தியாதி மிருகங்களிலிருந்து கிட்டும் பண்டங்களைக் கூடச் சாப்பிடாத தாவர உணவுக்காரர்.

இந்த வரிகளையும் பாருங்கள்:
He said he spent a great deal of time shopping, preparing and cooking food — and chewing. He is among the slowest and most deliberate eaters I know, and there is something about his determination at the table that is reminiscent of his determination on the road: he just doesn’t stop.

He focuses on three main meals. Breakfast is key: it might be a 1,000-calorie smoothie, with oil, almonds, bananas, blueberries, salt, vanilla, dried coconut, a few dates and maybe brown rice protein powder. Unless he is doing a long run, which for him is seven hours, or about 50 miles, he eats after his first workout. Lunch and dinner are huge salads, whole grains, potatoes and sweet potatoes, and usually beans of some sort or a tempeh-tofu combination.

“None of this is weird,” he said. “If you go back 300 or 400 years, meat was reserved for special occasions, and those people were working hard. Remember, almost every long-distance runner turns into a vegan while they’re racing, anyway — you can’t digest fat or protein very well.”

உடனே நான் சைவ உணவை முன்மொழிகிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு வகை உணவும் இன்னொன்றை விட மேலானது என்று முடிவு கட்ட முடியாது. நிலம், வேலைகள், உடல் வாகு, குடும்பப் பாரம்பரியம் (நோய்கள், நோயெதிர்ப்புத் திறன் இத்தியாதி) எல்லாம் பொறுத்துதான் நாம் நல்ல முடிவெடுக்க முடியும். ஆர்க்டிக் வட்டத்தில் இருந்து கொண்டு பிஞ்சு வெண்டைக்காய் அதுவும் பச்சையாக, புதிதாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தால் உதவாது. அங்கு தாவரங்களே வருடத்தில் ஓரிரு மாதங்கள் கிட்டினால் அதிசயம். அவர்களும் ஒன்றும் தேக நலம் இன்றித் துன்பப்படுவதாகத் தெரியவில்லை. பசுமைக் காடான கேரளா, மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் முழுத் தாவர பட்சிணிகளான மக்களும் நோய்களால் துன்பப்படுவதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பலர் முழு தாவர உணவுக்காரர்கள், 90 வயதுக்கு அப்புறமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்- குறைந்தது மூன்று பாட்டிகள், பல தாத்தாக்கள் – தெரிந்த குடும்பங்களில் சமீப காலம் வரை இருந்தார்கள். ஒருவர் 85 வயது வரை பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டும், பஜனைகளில் பாடியும், தினம் ஒரு மணி நேரம் போல நடந்தும் இருந்தார். இவர்களெல்லாம் மிருக உணவு என்றால் பால், தயிர் போன்றனவற்றோடு நிறுத்திக் கொண்டார்கள்.

பன்றிக்கறி பற்றிய கட்டுரைக்கு இந்த விவாதம், சைவம் எதிர் அசைவம் என்பது அத்தனை உறவற்றது. இந்தியாவில் பல பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன, வளர்க்கப் பட முடியும். அவை பொருளாதார நிலையில் மிக வளமான நிலையில் இல்லாத மனிதர்களில் இருந்து அனைத்துத் தள மனிதருக்கும் கிட்டக் கூடிய ஒரு நல்ல புரத மூலம் என்று சுட்டவே இக்கட்டுரை என நினைக்கிறேன்.

இந்து மதம் எல்லா வகை உணவுக்காரர்களுக்கும் இடம் தரும் நல்லதொரு ஜனநாயக மதம், அதைத் தொடர்ந்து சகிப்பற்ற சிறையாக ஆக்குவது அதன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
மைத்ரேயன்

Ashak S said...

pork_steaksபன்றிக்கறியைச் சாப்பிடுபவர்களிடம் கேட்டால், பன்றிக்கறியின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும், ஆடு, மாடு கறிகளை விட கொழுப்பில் குறைவானதாக இருக்கும் பன்றிக்கறி சுவையில் மிகுந்திருப்பது உண்மை.

==============================
நீ உண்மையிலேயே டாக்டரான்னு தெரியல, முட்டாள்களின் தலைவனான உனக்கு எப்படி டாக்டர் பட்டம் கிடைத்தது என்பது சந்தேகமாக உள்ளது,

முதலில் நீ ஏன் பன்றியை பற்றி இங்கே பேசுறேன்னு தெரியல, ஒரு வேலை நீ தினமும் தின்பாய் என்று நினைக்கிறேன், அதுவும் சாக்கடையில் உழலும் பன்றியாக பார்த்து தின்பாய் என்று நினைக்கிறேன், முதலில் நீ சொன்னதே தவறு.
பன்றி - 42% கொழுப்பு
மாடு - 29%
ஆடு - 29%
ன்னு இருக்குது நீ என்னடான்னா பன்றில குறைவா இருக்குன்னு சொல்ற , நீயே தின்னு
http://www.freedieting.com/tools/calories_in_meat.htm

Ashak S said...

பன்றிக்கறி மூலம் செய்யப்படும் ஏராளமான உணவு வகைகள் இந்தியாவில் புழங்குகின்றன. மேலை நாட்டு உணவில் மிக முக்கியமான ஓர் உணவு பன்றிக்கறி. இத்தாலிய ‘புரோசிட்டோ’ (Prosciutto)* எனப்படும் பன்றிக்கறி அனைவராலும் மிகுந்த சுவை மிகுந்ததாகப் பாராட்டப்படுகிறது.

================

சுவை அதிகமாக இருப்பதால் நீயே சாப்பிடு

Ashak S said...

நூறு கிராம் பன்றிக்கறியில் உள்ள சத்துகள் (Nutritional Value per 100 g)

Energy 1,013 kJ (242 kcal)
Carbohydrates 0.00 g
Sugars 0.00 g
Dietary fiber 0.0 g
Fat 13.92 g
saturated 5.230 g
monounsaturated 6.190 g
polyunsaturated 1.200 g
Protein 27.32 g
Tryptophan 0.338 g
Threonine 1.234 g
Isoleucine 1.260 g
Leucine 2.177 g
Lysine 2.446 g
Methionine 0.712 g
Cystine 0.344 g
Phenylalanine 1.086 g
Tyrosine 0.936 g
Valine 1.473 g
Arginine 1.723 g
Histidine 1.067 g
Alanine 1.603 g
Aspartic acid 2.512 g
Glutamic acid 4.215 g
Glycine 1.409 g
Proline 1.158 g
Serine 1.128 g
Water 57.87 g
Vitamin A equiv. 2 μg (0%)
Vitamin B6 0.464 mg (36%)
Vitamin B12 0.70 μg (29%)
Vitamin C 0.6 mg (1%)
Vitamin K 0.0 μg (0%)
Calcium 19 mg (2%)
Iron 0.87 mg (7%)
Magnesium 28 mg (8%)
Phosphorus 246 mg (35%)
Potassium 423 mg (9%)
Sodium 62 mg (3%

===============
Vitamin B6 0.464 mg (36%)
Vitamin B12 0.70 μg (29%)
Vitamin C 0.6 mg (1%)
Vitamin K 0.0 μg (0%)
Calcium 19 mg (2%)
Iron 0.87 mg (7%)
Magnesium 28 mg (8%)
Phosphorus 246 mg (35%)
Potassium 423 mg (9%)
Sodium 62 mg (3%

if u add above all giving 130%, how possible, stupid doctor can explain?

you just copied wikipedia and vomit here, this is the qualificaton for doctor? may be ur no.1 stupid

Ashak S said...

சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட பன்றிக்கறி சுவை மிக்கது.

=========
ok start to eat if u need, why u want spread ur stupid idea here?

Ashak S said...

முஸ்லீம்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
=======
then close ur carbage mouth

Ashak S said...

ஆன்மிக வாழ்க்கை சாதனை யோகம் என்று செல்லும் போது மாமிசத்தை ஒதுக்க வேண்டும். தனிவாழ்க்கையில் சொந்த மதிப்பீடுகள் அடிப்படையிலும் மாமிசத்தை ஒதுக்கலாம்.
=======
do not show or spread ur stupidity, bring evidence from authentic source, ofcourse ur not authentic obviously ur are stupid

Ashak S said...

இதனால் பல கிராமங்களில் கூட பன்றி வளர்ப்பது கஷ்டமான விஷயமாக மாறி வருகிறது. அத்துடன் பன்றியை சுகாதாரமாக வளர்க்காத சூழலும் ஏற்பட்டு வருகிறது. பன்றி வேட்டை நம் வேடுவர் சமுதாயங்களில் முக்கியமானது
===========
u can start piggery farm, no one will stop u, whenever u need u can cut and eat

Ashak S said...

பரமசிவனே பன்றி வேட்டையாடியிருக்கிறார்
=======
r u pig? how possible god hunted pig? how god became man?

Ashak S said...

எங்கள் மாவட்டத்தில் சிவபெருமான் பன்றி வேட்டை ஆடியதை நினைவுவணங்கும் விதமாக பன்றியடித்தான் விளை, பன்றிபாகம் என ஊர்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி இறைச்சியைதானே படைத்தார். எங்கள் ஊரில் கடுவாமூர்த்தி விடுவாதை சாமிக்கு கொடைவிழாவில் பன்றி இறைச்சி படைப்பார்கள்.
--------
this is good evidence so u can start eat, if ur eating already start daily practice

Ashak S said...

இந்நிலையில் பன்றி இறைச்சியை எப்படி சமைக்கலாம் என்கிற குறிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே. தமிழ்ஹிந்து அதனை வெளியிட்டது ஒரு நல்ல விசயம்தான்.
=======
sure your most like food pig, congratulations

Ashak S said...

பன்றிக் கறியின் சுவையையும் அதனால் உடல் நலன் அதிகமாவதும் குறித்து திருமூலருடைய பாடல்களிலும், சங்கப் பாடல்களிலும் கவிதைகள் உள்ளன.

அதே போல இந்து மதப் பெரியோர்களின் படைப்புகளான திருக்குறளும், சைவ சித்தாந்த ஆகமங்களும் சைவ உணவின் பெருமையைப் பெரிதாகப் பேசுகின்றன, அசைவ உணவுப் பழக்கத்தை கண்டிக்கின்றன.
ஆனால், இந்த இரண்டுவகை பழக்கங்களும் இந்துத்துவ சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தனிப்பட்ட மனிதரின் விருப்பத்திற்கு வளையும் சமுதாயமாகவே இந்து மதம் இருக்கிறது.
=======
எப்படி வேணும் என்றாலும் வாழலாம் என்று சொல்ல ஒரு மதம் எதற்கு? உன் மதம் சுத்த முட்டாள்தனம் என்பது இதன் மூலம் நிரூபணம்

Ashak S said...

வேத ரிஷிகள் அசைவம் உண்டவர்கள்தான். அகத்தியரும், காஸ்யபரும், விசுவாமித்திரரும், பரத்வாஜரும், மற்றுமுள்ள அனைத்துப் பெரியோர்களும் மாமிச உணவையே உண்டவர்கள்.
========
அப்பறம் ஏண்டா மாட்டை வைத்து அரசியல் பண்ணுறீங்க

Ashak S said...

இந்து மதம் என்பது பல்வேறு வழிமுறைகளுக்கும் ஆதரவு அளிப்பது. தன்னுடைய வழிமுறையே சிறந்தது என்று எண்ணி மற்றவரின்மேல் திணிக்காதது.
========
எப்படி மக்களை மேல்ஜாதி கீழ் ஜாதி ன்னு பிரிக்கிறதா?
பெண்களை கோவிலுக்குள் விடாததா?

Ashak S said...

நமது நம்பிக்கைகள் மற்றும் புரிதல்களின்படி இந்தத் தளத்தில் வரும் கட்டுரைகள் பரிந்துரைக்கும் ஒரு உணவை ஏற்றுக்கொள்ளுவதோ, விலக்குவதோ நமது சுதந்திரம்.

===========

அப்பறம் ஏண்டா படுத்துறீங்க?

Ashak S said...

பேசாமல் இந்தோனேசியர்களைப் போல அதிகம் பன்றிக் கறி சாப்பிட்டு நீரிழிவு நோயில் இருந்து விடுபட முயற்சிப்போம்.

http://www.newsmax.com/Health/Health-Wire/foods-diabetes/2015/08/13/id/670054/

மேலே உள்ள லிங்க் ல போய் பாரு இதில, நீரழிவை குணப்படுத்தும் உணவில் பன்றிக்கறி இல்லை, நீயெல்லாம் என்ன டாகடர்?

Ashak S said...

WHO வெளியிட்ட ஆதாரபூர்வமான அறிக்கையின்படி, நீரிழிவு நோயால் துன்பப்படுபவர்கள் சதவீதம் கீழே:

இந்தியா: 31.7

இந்தோனேசியா: 8.4

Source: http://www.who.int/diabetes/facts/en/diabcare0504.pdf

பேசாமல் இந்தோனேசியர்களைப் போல அதிகம் பன்றிக் கறி சாப்பிட்டு நீரிழிவு நோயில் இருந்து விடுபட முயற்சிப்போம்
=================

நீ சொன்ன லிங்கை நானும் போயி பார்த்தேன், சரி இந்த ஆளு டாக்டராச்சே ன்னு கொஞ்ச நேரம் நம்பிட்டேன், அப்பறம் தான் தெரியுது நீ ஒரு டுபாக்கூருனு, 2000 ல் இந்தியாவில் 3% மக்களும், இந்தோனேசியாவில் 4% மக்களும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதுன்னு அந்த விவரம் தெரிவிக்காது
31.7 மில்லியன் இந்தியர்கள் -மொத்த மக்கள் தொகை 1040 மில்லியன்
8.4 மில்லியன் இந்தோநேசிக்கல் -மொத்த மக்கள் தொகை 206 மில்லியன்

Ashak S said...

இந்தோனேசியா முஸ்லிம் நாடு.இருப்பினும் அங்கே பன்றிகளை முஸ்லிம்கள் சாப்பிடுகின்றாா்கள்..அதனால் தான் அங்கே நிரழிவு நோய் குறைவாக இருக்கிறது!!!
========
நீ லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிறயான்னு தெரியில, இதெல்லாம் ஒரு புழப்பா? நீ உண்மையிலேயே ஆணாக இருந்தால் இனிமேல் தவறான தகவல் தராதே
http://www.indexmundi.com/facts/indicators/SH.STA.DIAB.ZS/rankings

மேலே உள்ள லிங்கின் படி 2015 வருடத்தின் படி 9.3% இந்தியர்கள் , 6.5% இந்தோனேசியர்கள், 9.8% சீனர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் நீ ஆரம்பத்தில் " உலகத்திலேயே மிக அதிகமாக பன்றிக்கறி உண்ணும் நாடு சீனா. அங்கு 52.5 மெட்ரிக் டன் அளவு பன்றிக்கறி உண்ணப்படுகிறது. இது அங்கு ஒரு ஆளுக்கு 40 கிலோ அளவாகும்" இப்படி சொல்லியிருக்கிறாய், அதிகமாக பன்றிக்கறி சாப்பிட்டால் நீரழிவு வராது அல்லது கட்டுப்படுத்தும் என்றால் ஏன் 9.8% சீனர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முட்டாளாகிய உன்னால் விளக்க முடியாது

Ashak S said...

சவுதி அரேபியாவில் பன்றிகளை நினைத்தாலே கொன்றுவிடுவார்கள்! ஆனால் அங்கே 28 சதவிகிதம் நிரழிவு நோய் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.
==========
http://www.indexmundi.com/facts/indicators/SH.STA.DIAB.ZS/ரேங்கிங்ஸ்
மறுபடியும் நீ பொய்யய்யோ அல்லது அவதூறையே இங்கே சொல்லியிருக்கிறாய், மேலே உள்ள லிங்கின் படி 20% சவூதியின் தான் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் உன் கணக்கோ 28%,

Ashak S said...

Nicaragua 52.92
New Guinea 47.59
Bolivia 38.08
El Salvador 35.46
Iraq 32.67
Saudi Arabia 32.09
http://www.worldlifeexpectancy.com/cause-of-death/kidney-disease/by-country/
மேலே உள்ள லிங்கின் படி சவுதி அராபியாவுக்கு 6 வைத்து இடம் இராக் தவிர்த்து 4 நாடுகளின் ஏன் சிறுநீரக நோய் அதிகமாக இருக்கிறது என்று விளக்கவும்,

உன் பின்னூட்டம் சொல்வது யாதெனில், நீ ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு அதற்க்கு தகுந்தாற்போல் உன் ஆதாரங்களை முட்டாள் தனமாக கொடுத்திருக்கிறாய், உனக்கு பின்னூட்டம் இடும் தகுதியே இல்லை, நாம் என்ன சொன்னாலும் கேட்பார்கள் என்று நினைக்காதே, இன்று பல உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது

Ashak S said...

நம்ம உலகத்துல கொஞ்ச பேர் பன்னி பீ சாப்பிடுது அதனால தான் அதை நாங்க சாப்பிடறது இல்லை என்று சொல்லுறாங்க! இவங்க மறந்து இருக்கிற விஷயம் என்ன என்றால், ஆடு,மாடு,கோழி,கூட போற வழியில அது கிடைச்சா நக்கிட்டும், கொத்திட்டும் போனதை நாம பார்க்குறோம்! அதுக்கு என்ன தெரியும் எழவு என்னான்னு!
==========
ஆடு மாடு எப்ப பீயை சாப்பிடுச்சு ?

Ashak S said...

பாலைவனப் பகுதிகளில் பன்றி வளர்க்கும்போது தண்ணீர்த் தேவை அளவில் அது மனிதனுக்கே போட்டியாக மாறுகிறது.. அதனால் தான் மத்தியக் கிழக்கு பாலைவனத்தில் தோன்றிய செமிட்டிக் மதங்கள் (யூதம், பிறகு இஸ்லாம்..) பன்றி இறைச்சியைத் தடை செய்தன என்று மானுடவியலாளர் மர்வின் ஹாரிஸ் தனது நூலில் கூறுகிறார்
=========
பன்றி மூலம் என்ன என்ன நோய்கள் வருகிறது என்று உனக்கு தெரியாது?

Ashak S said...

கிறிஸ்தவம் நீர்வளம் நிரம்பிய ஐரோப்பாவில் பரவிய போது பன்றி இறைச்சித் தடை தானாகவே மறைந்து விட்டது..
======
மூடனே அது மாறவில்லை, மாற்றி கொள்ளப்பட்டது, பைபிளில் பன்றி இறைச்சி சாப்பிட தடை என்று பன்றி ராஜுக்கு தெரியுமா?

Ashak S said...

இந்தியாவில் நீர்வளம் அதிகமான பகுதிகளில் தான் சுவையான பன்றி இறைச்சி நிறைய உண்கிறார்கள் – கோவா, கர்நாடகத்தின் கூர்க் பகுதி, அஸ்ஸாம் போன்ற பிரதேசங்களில்… நீங்கள் கூர்க்கில் பயணம் செய்யும்போது கொழு கொழுவென்று வளர்ந்து, மாட்டின் உயரம் இருக்கும் வெண்பன்றிகளைப் பார்க்கலாம் – அவை பார்க்கவே கம்பீரமாக இருக்கும். அது மட்டுமல்ல, அங்கு திரியும் கோழிகள், ஆட்டுக்கிடா எல்லாமே மகா புஷ்டியாக இருக்கும்.
=====
கோழிகள், ஆட்டுக்கிடா எல்லாமே மகா புஷ்டியாக இருக்கும் = ===
ஆக இது பன்றிக்கு மட்டுமல்ல என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாய்

Ashak S said...

http://articles.mercola.com/sites/articles/archive/2012/12/12/eating-pork.அப்ஸ்
நேரம் கிடைக்கும் போது மேலே உள்ள லிங்கை படித்து ஏன் பன்றி கறி சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கோ, அதையும் மீறி சாப்பிடும்ன்னு நினைச்சா சாப்பிடு, ஆனால் உன் முட்டாள் யோசனைகளை பின்னூட்டம் என்ற பெயரில் இடாதே

Dr.Anburaj said...


பரவாயில்லை.நான் தங்களை நிறைய சிந்திக்க வைத்திருக்கின்றேன்.நான் எந்த இறைச்சியும் சாப்பிடுவதில்லை. மீன் சாப்பிடுவதுண்டு. தாங்கள் அளித்த தகவல்கள் மற்றும் லிங்களில் உள்ள தகவல்களையும் படிக்கின்றேன். பன்றிக்கறி விவாதம் தேவையற்றது. இத்துடன் முடித்துக் கொள்ளலாம். விாிவான விவாதத்தில் பங்கேற்றதற்கு நன்றி.