
மதம் மாற்றிய குற்றத்திற்காக இரு இளைஞர்கள் சிறையிலடைப்பு!
மும்பை கல்யாண் பகுதியில் ரிஸ்வான் கான், அர்ஷித் குரைஷி என்ற இரு இளைஞர்களை காவல் துறை கைது செய்துள்ளது. இவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர்கள் இருவரும் 800 இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றியது என்பதுதான். இந்த இருவரும் ஜாகிர் நாயக்கின் ஐஆர்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் மதம் மாற்றியது உண்மையா பொய்யா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒருவன் மதத்தை மாற்றிக் கொள்வதென்பது இந்திய அரசியல் சட்டம் அனுமதித்த ஒன்று. மேலும் குர்ஆனை ஆராய்ந்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தை ஏற்க முன் வந்தால் அவனை இரு கரம் நீட்டி வரவேற்பதுதான் சரியான வழியாகும்.
இன்று குஜராத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 4 தலித்களை இந்துத்வ வெறியர்கள் அடித்த காணொளியை நாமெல்லாம் பாரத்தோம். ஒரு தலித் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். அதனை புகாராக கொடுத்து கற்பழித்த மேல் சாதியினர் சிறைக்கு செல்கின்றனர். அவர்களின் தண்டனை காலம் முடிந்து ஊருக்கு திரும்பி அதே சிறுமியை கல்லூரியில் வைத்து கற்பழித்துள்ளனர் அதே நாய்கள். புகார் சொன்னதற்காக கொபப்பட்டு அந்த தலித் சிறுமியை கற்பழித்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் உலகில் வேறெங்காவது நடந்திருக்குமா?
மோடி பிரதமராக பதவியேற்றதற்கு பின்தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அரசு இந்த கொடுமைகளை தட்டிக் கேட்பதுமில்லை. பிறகு அந்த தலித் என்னதான் செய்வான்? எங்கு சமத்துவம் கிடைக்கிறதோ அதை நோக்கித்தானே ஓடுவான்?
எங்கு பிரச்னையோ அதனை இதுவரை களையாமல் இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை கைது பண்ணுவதால் மத மாற்றத்தை தடுத்து விட முடியுமா? சிறைக்கு சென்ற அந்த இளைஞர்கள் சிறையிலும் தங்கள் அழைப்புப் பணியை தொடர்ந்தால் அங்குள்ள சிறைக் கைதிகளும் இஸ்லாத்தை ஏற்பார்களே? இதற்கு மோடியும் அமீத்ஷாவும் என்ன செய்யப் போகிறார்கள்.
மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னால் தான் மத மாற்றங்கள் அதிகம் நடக்கின்றன. காரணம் இந்துத்வாக்களின் எழுச்சி.
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கும் மோடியையும் அமீத்ஷாவையும் பார்த்தால் எனக்கு ஜோக்கர்களாக தெரிகிறது. :-) உங்களுக்கு எப்படி தெரிகிறது?
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். தன்னை மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
அல்குர்ஆன் : 9:32.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
26-07-2016
1 comment:
சவுதி அரேபியா மற்றும் பல அரேபிய மத நாடுகளில் மதம்மாறுவது பெரும்குற்றம்.அதுபோல் இந்துக்களும் மதம் மாறுவதை முறறிலும் தடை செய்ய வேண்டும்.
பாக்கிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கத்தின் தீவிரமான ஆதரவாளம் பா்ஹானியை காஷ்மீாில் சுட்டுக் கொன்றதற்கு
காஷ்மீாில் வாழும் முஸ்லீம்கள் செய்து வரும் அடாவடித்தனங்களைப் பாருங்கள்.
மதம்மாறுவது எவ்வளவு கொடுரமானது என்பது தொியவரும்.நமது பிரதமா் உடனடியாக தேவையான சட்டம் இயற்ற வேண்டும்.
காஷ்மீா் முஸ்லீம்களை எந்த முஸ்லீம் இயக்கமும் கண்டிக்கவில்லை. எதிாத்து ஆா்ப்பாட்டம் நடத்தவில்லை.சுவ னப்பிாியன் செய்யவில்லை. இதுதான் இவர்களின் யோககியதை.
Post a Comment