Followers

Thursday, July 28, 2016

அரவிந்த் கெஜ்ரிவால் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் விடுக்கும் செய்தி!

அரவிந்த் கெஜ்ரிவால் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் விடுக்கும் செய்தி!

"பாரத தேசமெங்கும் நிலைமை எவ்வாறு செல்கிறது என்பதைப் பற்றி மோடிஜிக்கும் நாட்டு மக்களுக்கும் சில வார்த்தைகள் இந்த காணொளி மூலம் சொல்லக் கடமை பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து நிரூபணம் இல்லாமல் விடுவிக்கப்படுகிறார்கள். எங்கள் மேல் மோடி மிகவும் கோபத்தில் இருக்கிறார். டெல்லியில் நாங்கள் சிறந்த முறையில் ஆட்சி செய்கிறோம். மேலும் ஹரியானா, பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. இதை எல்லாம் பார்த்த மோடி அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதன் காரணமாகவே என்ன செய்வதென்றே தெரியாமல் தாறுமாறாக சட்டத்தை உபயோகப்படுத்துகிறார். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு செயல்படுவது அந்த நாட்டுக்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என்பதை ஏனோ மோடி உணரவில்லை.

நமது அண்டை நாடான நேபாள் முன்பு நமக்கு நண்பனாக இருந்தது. மோடியின் கைங்கரியத்தால் இன்று நமக்கு எதிராக திரும்பியுள்ளது.

பாகிஸ்தானோடு கூடி குலாவுகிறீர்கள்: சில நாள் கழித்து அங்கும் பிரச்னை ஏற்பட்டு முறுகல் நிலையை அடைகிறீர்கள். இந்த இரட்டை நிலை யாரை திருப்திபடுத்த?

இந்திய நாடு முழுவதும் மோடியின் கட்டுப் பாட்டில் வர வேண்டும் அல்லது பிஜேபியின் கைகளில் செல்ல வேண்டும் என்று மோடி நினைக்கிறார். இது எல்லோரும் நினைப்பதுதான். அவ்வாறு நாடு முழுக்க அவர் கையில் வர வேண்டுமானால் நாங்கள் டெல்லியில் செயல்படுவது போல் அது மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு முழு அதிகாரத்தையும் கொடுப்பார்கள். மோடி அவரது மந்திரிகள் அவரது கட்சியான பிஜேபி அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இன்று வரை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. எந்த துறையை எடுத்தாலும் முன்னேற்றம் என்பதே இல்லை. வியாபாரிகள், விவசாயிகள், தலித்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் மோடியின் ஆட்சியில் வெறுப்பில் உள்ளனர். இனி இவர்களால் என்ன முயன்றாலும் மக்களுக்கு நன்மை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே மற்றொரு வழியான எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியை அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மோடி முயற்சிக்கிறார். காங்கிரஸிலிருந்து அனைத்து கட்சிகளின் வாயையும் மோடி அடைத்து விட்டார். அனைத்தையும் ஒரு வழி பண்ணியாகி விட்டது. மீதி இருப்பது ஆம் ஆத்மி பார்ட்டி. எனவே எங்களையும் அவருக்கு பணிய வைக்க எதை எல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து பார்க்கிறார்.

எனவே ஆம் ஆத்மி பார்ட்டி எம்எல்ஏக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உஙவினர்களிடமும் சொல்லி விடுங்கள். வருங்காலம் மிகக் கொடூரமான நாட்களாக இருக்கும். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மோடியும் அமீத்ஷாவும் எந்த அளவும் கீழிறங்க தயங்க மாட்டார்கள். என்னையும் எனது கட்சிக் காரர்களையும் கொல்வதற்கும் தயங்க மாட்டார்கள். அந்த அளவு வெறி கொண்டு அலைகிறார்கள்.எனவே சிறைக்கு செல்வதோடு அல்லாமல் அங்கு உங்களுக்கு எதுவும் நடக்கலாம். உங்கள் உயிரும் பறிக்கப்படலாம். எனவே அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பவர்கள் என்னோடு இருங்கள். பயந்த சுபாவம் உடையவர்கள் தாராளமாக வெளியில் சென்று விடலாம். இதுதான் எனது கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது.

ஜெய் ஹிந்த்'

No comments: