'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 03, 2016
நடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!
நடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!
இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகர் விக்னேஷ் என்கின்ற அபூபக்கர் சித்தீக்!
"ரங்கூன்", "போடா ஆண்டவனே", "நம்ம பக்கம்" போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்னேஷ் எனும் இளம் நடிகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இளம் நடிகர் விக்னேஷ் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் வழங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
வாங்கிச் சென்ற குர்ஆனை கதவைத் தாழிட்டு படித்து வந்து இருக்கிறார். ஒருநாள் கதவை மறந்து தாழிடாமல் படித்த போது அவருடைய தாய் வந்து பார்த்து கத்திக் கதறி வீட்டில் பிரச்சனையாகி விட்டது.
ஒரு கட்டத்தில் ஆம் நான் முஸ்லிமாகி விட்டேன். அதன் படித்தான் வாழப் போகிறேன் எனக் கூற தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறு எனச்சொல்ல, என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் போன் செய்தார்.
"நான் தவறான வழியில் செல்லவில்லை என முடிந்தவரை பெற்றோரை சமாதானம் செய்து பாருங்கள். முடியாத பட்சத்தில் வந்து விடுங்கள், இறைவன் இருக்கிறான் இலட்சக்கணக்கான என்னைப்போன்ற உங்கள் உடன் பிறவாத சகோதரர்கள் இருக்கிறோம்" எனக் கூறியதும் "இல்லை அங்கு இருக்க முடியாது நான் வந்து விடுகிறேன்" என இன்று காலை வந்து விட்டார்.
ஏற்கனவே குடும்பத்தை விட்டு வந்து இங்கு தங்கி உள்ள இரு திண்ணைத் தோழர்கள் நம்மோடு உள்ளார்கள் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என பள்ளியில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தோம்.
பொறியியல் படித்துள்ள தனக்கு தன்மானத்துடன் வாழ எனக்கு ஒரு உடனடி வேலை தேவை என்றார். இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளோம்...
கொண்ட கொள்கைகைக்காக குடும்பத்தைத் துறக்கும் முஹாஜிரீன்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்! அல்ஹம்துலில்லாஹ்...
(குறிப்பு : முன்பாகவே அவர் நமது மதரஸாவில் கலிமா சொல்லி விட்டார், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை வெளியிடாமல் குர்ஆன் வழங்கியதாக மட்டும் செய்தி வெளியிட்டு இருந்தோம், ஆனால் இறைவனின் நாட்டம் நாம் வழங்கிய குர்ஆன் அதை வெளிப்படுத்தி விட்டது)
தகவல் -செங்கிஸ் கான்
(இது போன வருடத்திய மீள் பதிவு)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எதற்காக மீண்டும் இப்பதிவை போட்டுள்ளீா்கள். காரணம் இல்லை. இந்துக்கள் குறித்து வெறுப்புணா்வை முஸலீம்கள் மனதில் விதைக்க தங்களுக்கு ஆசை.
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஜெட்டா, மதினா, குவாத்திப் ஆகிய 3 நகரங்களில் தற்கொலைப்படைகள் நடத்திய 3 குண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சவூதியின் ஜெட்டா நகரில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, குவாத்திப் நகரின் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மெக்காவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் இரண்டாவது புனித தலமான மதினா மசூதி அருகில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. 3 குண்டு வெடிப்புகளிலும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் படுகாயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி தினத்தன்று, முஸ்லிம்கள் புனித தலமான கொண்டாடும் மதீனாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அங்கு பலத்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் சவூதி அரேபியா முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இராக் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 213-ஆக உயர்வு
By பாக்தாத்
First Published : 05 July 2016 12:26 AM IST
இராக் தலைநகர் பாக்தாதில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது.
பாக்தாதில் பிரபல வணிக மையங்கள் அமைந்துள்ள கராடா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த தற்கொலைக் கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி மக்கள் நெரிசல் அதிகமாக இருந்த பகுதியில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 15 சிறுவர்கள், 10 பெண்கள், 6 காவலர்கள் உள்பட 119 உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது என பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அவர்கள் கூறினர்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் அல்-அபாதி உறுதியளித்தார்.
இதுபோன்ற தாக்குதல்கள் இனியும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் அவர் உத்தரவிட்டார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இசுலாம் என்றால் சமாதானம் என்று அா்த்தமாம் . எப்படி சமாதானம்என்று அா்த்தமாம் . சிாிப்போம் வாருங்கள்
இராக் குண்டு வெடிப்புகளில் 119 பேர் பலி
First Published : 04 July 2016 04:48 AM IST
புகைப்படங்கள்
இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் சேதமடைந்த கராடா வணிகப் பகுதி.
இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் சேதமடைந்த கராடா வணிகப் பகுதி.
இராக் தலைநகர் பாக்தாதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 119 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாதில் பிரபல வணிக மையங்கள் அமைந்துள்ள கராடா பகுதியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 114 பேர் பலியாகினர்.
அந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. 160 பேர் காயமடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
உயிரிழந்தவர்களில் 15 சிறுவர்கள், 10 பெண்கள், 6 காவலர்கள் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, செல்லிடப்பேசிகள் மற்றும் துணிகள் விற்பனை செய்யும் கடைகளில் தீப்பிடித்தது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். ஷியா பிரிவினருக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, அந்த பயங்கரவாத அமைப்பின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டது.
தலைநகரின் கிழக்குப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி பார்வையிட்டார்.
அந்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஃபலூஜா நகரை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக மீட்ட சில நாட்களிலேயே, தலைநகரில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போர்முனைகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இராக் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றாலும், அந்நாட்டில் மக்கள் வசிக்கும் நகர்ப்புறங்களில் பெருத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் திடீர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர் கதையாக உள்ளது.
இந்த அவலம் நமது நாட்டிற்கு வேணடுமா ?
வேண்டாம் அரேபிய மதம்.
இந்து கலாச்சாரம் அடுத்த பாிணாமத்திற்கு பயணம் செய்ய உதவுவோம்.
அதுதான் நாம் செய்ய வேண்டியது.
பண்பாடு கூறுகளை மதச்சாாபற்ற அரசு என்ற நொண்டிக் காரணம் காட்டி அலட்சியம் செய்து வருவது ஆபத்தானது.
இந்த அவலம் நமது நாட்டிற்கு வேணடுமா ?
வேண்டாம் அரேபிய மதம்.
இந்து கலாச்சாரம் அடுத்த பாிணாமத்திற்கு பயணம் செய்ய உதவுவோம்.
அதுதான் நாம் செய்ய வேண்டியது.
பண்பாடு கூறுகளை மதச்சாாபற்ற அரசு என்ற நொண்டிக் காரணம் காட்டி அலட்சியம் செய்து வருவது ஆபத்தானது.
Post a Comment