Followers

Sunday, July 03, 2016

கொலை செய்யும் அளவுக்கு ராம் குமார் ஏன் போனான்!கொலை செய்யும் அளவுக்கு ராம் குமார் ஏன் போனான்!

ராம்குமார்(24) பொறியியல் பட்டதாரி , அப்பா பிஎஸ்என்எல் ஊழியர், தம்பி , தங்கை என அளவான குடும்பம். கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். ராம்குமார் பேஸ்புக் சாட்டிங்கில் இருந்த போது ஏதோ ஒரு வகையில் ஸ்வாதியின் உறவு கிடைத்துள்ளது. பின்னர் ஸ்வாதியை பார்க்க சென்னை வந்த ராம்குமாரை நேரில் பார்த்த ஸ்வாதி ஒதுங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராம்குமார் பின்னாலேயே தினமும் துரத்தி வாக்குவாதம் செய்துள்ளார்.

ஸ்வாதிக்கு ஏற்கனவே காதலன் இருப்பதும் தெரிந்து ராம்குமார் இன்னும் டென்ஷன் ஆகி தினமும் ஸ்வாதியை நெருக்க ஆரம்பித்துள்ளார். இதை பட்டும்படாமலும் தனது குடும்பத்தாரிடம் ஸ்வாதி கூறியுள்ளார். சூளைமேட்டிலேயே ஏ.எஸ்.என்ற மேன்ஷனில் ரூம் எடுத்து தங்கி மூன்று மாதமாக ஸ்வாதி மனதை கரைக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர்
04-07-2016

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555508

தினமலரின் இந்த செய்தியின் அடிப்படையில் ராம்குமார் சென்னை வருவதற்கு முன்பே சுவாதியோடு முக நூலில் தொடர்பு கொண்டு பழக்கமாகியுள்ளான். அந்த பழக்கத்தின் அடிப்படையில் சுவாதியின் மீது காதல் உண்டாக அந்த பெண்ணை நேரில் சந்திக்க சென்னை வந்துள்ளான். அந்த பெண் தங்கியுள்ள சூளை மேட்டிலேயே இவனும் வாடகைக்கு வீடு எடுத்துள்ளான். நேரில் பார்த்த அவனை சுவாதிக்கு பிடிக்கவில்லை. பிஇ முழுவதும் முடிக்கவில்லை என்ற செய்தியும் தெரிகிறது. மேலும் சுவாதிக்கு வேறொரு காதலன் இருப்பதும் இவனுக்கு தெரியவே தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி அது வன்மமாக மாறி கொலை செய்யும் அளவுக்கு மாறியுள்ளான்.

என்னைப் பொருத்த வரை தவறு இரண்டு பக்கமும் இருப்பதாகவே உணர்கிறேன். ராம் குமாரின் வாக்கு மூலங்கள் தான் இனி பல உண்மைகளை கொண்டு வரும்.

5 comments:

Dr.Anburaj said...

கொலை செய்யும் அளவிற்கு ராம்குமாா் ஏன் போனான் ? தலைப்பே தவறானது.ராம்குமாா் யோககியன் என்ற அடிப்படையில் தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் வாடஸ் அப் டுவிட்டாா் தங்களது பெயரை என் பெண்கள் பதிவு செய்து படத்தை வெளியிடுகின்றாா்கள் என்பது புாியவில்லை.அனாவசியமான சில நடைமுறைகள்தான் பல சிக்கல்களுக்கு காரணம்.படிப்பில்கவனம் இல்லை. கவனச்சிதறல்களுக்கும் காரணம். பேஸ் புக்கில் ஒருவருடைய அறிமுமகம் கிடைத்து விட்டது என்றால் அந்த பெண் தன்னைக் காதலிக்க வேண்டும்.திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று நினைப்து பேராசை.வக்கிரகம்.மடத்தனம்.

ராமகுமாா் தனது தகுதியை உணா்ந்து கொள்ளவில்லை. ரவுடியிசத்தில் நம்பிக்கை கொண்டவா்கள் தகுதிக்கு மீறிய செயல்களில் துணிந்து ஈடுபடுவா்கள்.அதுதான் ராம்குமாா் கொலைகாரனாக மாறியதற்கு காரணம்.

ஆண்களும் பெண்களும் பழகுவதில் சுயகட்டுப்பாடு மிகவும் அவசியம்.
உடை கட்டுப்பாடு மிகவும் தேவை.உடைகள் விசயத்தில் அரசு வளாயிருப்பது நல்லதல்ல.
தனது தங்கையை நேசிப்பது போல் சுவாதியை கண்ணியமான முறையில் ராமகுமாா் அணுகவில்லை.ஒரு கற்பழிப்பவன் மனோநிலையில் ராம்குமாா் இருந்துள்ளான்.அதுதான் நிராசைகாரணமாக கொலை செய்ய முடிவு செய்துள்ளாா். மதசாா்பின்மை பேசி மக்களின் கலாச்சார பழக்க வழக்கங்களை நவீன படுத்தவில்லையெனில் தொடரும் வன்முறைகள்தான்

Dr.Anburaj said...


பாவம் சுவாதி படுகொலை செய்யப்பட்டு இறந்து விட்டாா்...
அவரது கண்ணியத்தை குறைக்கும் எந்த செய்தியையும் நாம் வெளியிட வேண்டாம்.

Adirai Ahmad said...

டாக்டர் சார் ! 'சொல்வதெல்லாம் உண்மை'.
Your wisdom springs out now !

Dr.Anburaj said...


டாக்டர் சார் ! 'சொல்வதெல்லாம் உண்மை'.


Your wisdom springs out now !
நன்றி ஐயா. திரு. ஆதிரை அஹமது தங்களின் மேலான கருத்துக்களை அடிக்கடி பதிவு செய்ய வேண்டுகின்றேன். புகைப்படத்தில் தங்கள் தோற்றம் அருமையாக உ்ளளது.தாங்கள் ஒரு மேடை பேச்சாளரோ?

Noor Mohammed said...

முதல் தவறு பெண்களிடத்தில் உண்டு ஏன் facebook chating ? அதுதானே ஆரம்பம் .
நீ உன்வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை போதாது என்ற போதையில் ஆண்தேடி அலைந்ததால் வந்ததுதானே இந்த நிலை . தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடக்கக்கூடாது என நினைக்க வைத்தது எது ? உன் அழைகை நீ காட்டியது . நானாக இருந்திருந்தாலும் இதைதான் செய்திருப்பேன் .