Followers

Sunday, July 03, 2016

ஸ்வாதி - ராம்குமார் சம்பவங்கள் நமக்கு உணர்த்துவதென்ன?எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!

காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.

பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாராளமாகமாகச் சொல்லலாம்.

சுவாதியின் கொலையானது நமக்கு ஒரு யதார்த்தத்தைப் புரிய வைக்கிறது. பெண்கள் வேலைக்கு சென்று அந்நிய ஆண்களோடு சகஜமாக பழகுவதனால் பல புதிய சிக்கல்கள் உருவாகின்றன. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பான மாற்று வெலைகளை பார்த்துக் கொள்வதுதான் உசிதம். அலுவலகம் ஆனாலும் கல்லூரி பள்ளிகள் ஆனாலும் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்தாலே பல சிக்கல்களை களைந்து விடலாம்.

பெண் விடுதலை என்ற போலி கோஷத்தினால் இன்று சுவாதியை இழந்திருக்கிறோம். நமது நடவடிக்கைகளில் மாற்றம் வராத வரை இது பொன்ற இழப்புகள் தொடரத்தான் செய்யும்.

இஸ்லாம் இது பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்போம்.

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். புஹாரி 3006,

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி புஹாரி 5233

இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும் இந்த அலை பேசி உரையாடல். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வ்தற்கு அனுமதி இல்லை. உலக மக்கள் அனைவரும் பின் பற்றத்தக்க வகையிலேயே இந்த இஸ்லாமிய சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை மற்ற சமூகங்களும் பின்பற்ற முயல வேண்டும்.

இஸ்லாமிய சட்டங்களை ஓரளவு கடைபிடிக்கு சவுதி அரேபியாவில் காதலுக்காக பெண்கள் கொல்லப்படுவதில்லை: காதலுக்காக பெண்கள் முகத்தில் ஆசிட் வீசப்படுவதில்லை: ஈவ் டீஸிங் இல்லை: ராகிங் இல்லை: இரவு நேரத்தில் கூட பெண்கள் சுதந்திரமாக செல்கின்றனர். நமது இந்திய நாட்டவர் தங்கள் குடும்பத்தோடு இரவு 12 மணிக்குக் கூட கடை வீதிகளில் தைரியமாக ஷாப்பிங் செய்வதை பார்க்கலாம். காரணம் பெண்கள் கண்ணியமாக உடை உடுத்துகிறார்கள். அரசின் சட்டமும் கடுமையாக இருக்கிறது.

1 comment:

Dr.Anburaj said...


சவுதி அரேபியா போன்ற நாடுகள் அளவில் சிறியவை.ஜனத்தொகை குறைவு. மேலும் ஒரே மதம் ஒரே கலாச்சாரம் ஒரே மொழி என்று உள்ளது . உள்நாட்டு நிா்வாகம் சற்று எளிது. அங்கும் மதினா மற்றும் காரா நகாில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.தற்கொலை படைத்தாக்குதலாக இருக்கலாம். மேலும் நாட்டின் கலாச்சாரம் முறையாக சிறு வயது முதல் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

நமது நாட்டில் இந்து குழந்தைகளுக்கு கலாச்சாரக் கல்வி கிடைக்க வில்லை. விளைவு அவனவன் பிறந்த சுழ்நிலை மற்றும சினிமா அவனது கலாச்சாரத்தை நிா்ணயம் செய்கின்றது.
ஸ்ரீராமன் பிறந்த நாட்டில் ராம்குமாரும் பிறந்துள்ளான்.

அண்மையில் சிறு குழந்தைகள் கூட பாலியில வக்கிரகத்திற்கு ஆளாகி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றது படிப்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது.இத்தகைய செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறவில்லை என்பதும் வேதனையாக உள்ளது.

பிரம்மா்சாியம் ஒரு வாழ்க்கை நெறி.திருமணம் செய்யும் வரை பிரம்மச்சாியாக வாழ வேண்டும் என்ற இந்து போதனை எந்த இந்துவுக்கும் கற்றுக் கொடுக்கப்படவில்லை.

பிரம்மச்சாிய வாழ்க்கை வீழ்ந்து போனதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

இன்றும் இளைஞா்கள் வாழ்வில் பிரம்பச்சாியம் -கற்பு இடம் பெறவில்லை.

மண்ணில் இந்த காதல் இன்றி வாழும் வாழ்க்கையாகுமா- காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா ? என்ற திரைப்படப்பாடல்தான் இளைஞா்கள் மனதில் அசைபோடப்படுகின்றது.

எதிாி படையின் தளபதியின் பேரழகு மகளை-முஸ்லீம் பெண்ணை - சிவாஜி மகராஜாவின் முன் நிறுத்தியபோது சத்ரபதி சிவாஜி தன் படை வீரா்களிடம் ” எனது தாயாா் இப்பெண்ணைப் போல் பேரழகாகப் பிறந்திருந்தால் நான் இதை விட மிகவும் அழகானவனாகப் பிறந்திருப்பேன் ” என்று தொிவித்தாா்.குமுஸ் பெண்ணாக அப்பெண்ணை கருத சத்ரபதி சிவாஜயின் இந்து பண்பாட்டுணா்வு இடம் கொடுக்கவில்லை. எதிாி படை தளபதியின் மகளைப் பாா்க்கும் போது கூட தாயின் உருவம்தான் நினைவில் இருந்தது.காமசுகம் நினைவுக்கு வரவில்லை.

நமது இளைஞா்களுக்கு இந்த பண்பு பயிற்சி வேண்டும்.சிவாஜியின் இந்த சமபவம் நமது பாடப்புத்தகங்களில் இடம பெற வேண்டும். கலாச்சார விழப்புணா்ச்சி இல்லையெனில் இந்தியாவின் மனித வளம் பாழாகி விடும். தற்சமயம் மனித வளம் சாதிச்சண்டைகளிலும் காமக்களியாட்டங்களிலும் மதுவிலும்பாழாகிக் கொண்டிருக்கின்றது.