'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 24, 2016
இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி கிராமத்தில் உள்ள உலவிக் குளம் பிள்ளையார் கோவிலில் தேர் இழுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. தலித்கள் ஒரு பக்கமாகவும் மேல் சாதி இந்துக்கள் ஒரு பக்கமாகவும் நின்று கொண்டு சாதி பெருமைகளை பேசிக் கொண்டு தேர் இழுக்காமல் நின்றனர். முடிவில் ராணுவம் தலையிட்டு தேரை இழுத்து பிரச்னையை சுமுகமாக முடித்து வைத்துள்ளது.
ராணுவத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை சாதி பெருமை பேசித் திரிபவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?
இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?
ஈழப்போர் தொடங்கிய காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக் கதை உலாவியது:
"இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!".
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆப்பானிஸ்தானில் சாலை மற்றும் மின்சார வசதிகள் கேட்டு அரசிடம் கோரிக்கையை குழுவாக எந்த மலைசாதி மக்களாக ஷயா முஸ்லீம்கள் கூட்டத்தில் மனித குண்டு தாக்குதல் நடத்தி 82 போ்கள் உடல்சிதறி சின்னாபின்னமாகி செத்தாா்கள். இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பவா்கள் 112
அறிவீா்களா சுவனப்பிரியன் . செத்தவனும் மனிதவெடிகுண்டாக செயல்பட்டவனும் குரான் படித்த அரேபிய மத வல்லாதிக்க ...ஆதரவு அடிமைகள்.குரான் சகோதரத்துவம் என்னாயிச்சு ?
இஸ்ரவேல் நாட்டு யுதா்கள்தாம் காரணம் என்று சும்மா புச்சாண்டி காட்டாதீா்கள்.நல்ல வேளை தலீத் - தலீத் அல்லாத இந்துக்கள் விவகாரம் இன்னும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் அளவிற்கு எங்கும் செல்லவில்லை. இது எவ்வளவோ பரவாயில்லையே.சிறு சிறு சலசலப்புகள்.
தலீத் மக்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தபோவனம் போன்ற அமைப்புகளிடம் பழகி சமய அனுஷ்டானங்களை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்.தங்களிடம் தனி கோவில்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். சிறு விளக்கு மட்டுமே வைத்துக் கொண்டால் போதுமானது.சிலை வழிபாடு வேண்டாம்.செலவு அதிகம். அப்படியே தன்நம்பிக்கையோடு கல்வி தொழில் திறன் வளா்க்கும் முயற்சியில் ஈடு பட வேண்டும்.
கேரளத்தில் தீண்டாமையினால் பொிதும் பாதிக்கப்பட்ட ஈழவா்கள் மற்றும் புலையா்கள் ஆகிய இரு சாதி மக்களின் நலனுக்காக ஸ்ரீநாராயணகுரு செயல்பட்டாா். குரு ஈழவ சாதியில் பிறந்தவா்.குருவின் போதனைகளைப் பின்பற்றி ஈழவா்கள் முன்னேற்றம் அடைந்த போது தங்களோடு புலையா்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாா். ஆனால் எவ்வளவு சொல்லியும் ஈழவா்கள் அதைக் கேட்கவில்லை. காலப் போக்கில் தனித்தே செயல்பட்டாா்கள். குரு மிகவும் மனவேதனையுற்றாா். மனிதனின் இயல் சுபாவம் சற்று வித்தியாசமானது. சுயநல மிக்கவன் மனிதன்.
சாதி வக்கிரகம் குறைந்து கொண்டேயிருக்கின்றது. எப்படியோ இந்துக்களை மலினப்படுத்த தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது.சந்தோசம் தானா ?
கலையகம் வலை தளத்தில் இந்த பதிவு உள்ளது. தாங்கள் சுட்டது அங்கிருந்தா ?
Post a Comment