Followers

Tuesday, July 12, 2016

குஜராத்தில் மூன்று தலித்கள் அடிபடும் காட்சி!குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ போலீஸார் தலித்துகளை தாக்கிய 6 பேரில் 3 பேரை கைது செய்தனர். மீதி 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித்துகள் ஏற்கெனவே இறந்த பசுமாடு என்று கூறுகையில் தாக்கியவர்களோ அது கொல்லப்பட்டது என்று சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தாக்கியவர்கள் ரமேஷ் கிரி, பல்வந்த் சிமர், ரமேஷ் பக்வான், ராகேஷ் ஜோஷி, ரசிக்பாய் மற்றும் நாக்ஜி பாய் வானியா ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இவர்கள் காரில் வந்துள்ளனர். வரும்போதே பசுத்தோலை உரித்துக் கொண்டிருந்த தலித்துகள் மீது சாதிவெறி வசைகளைப் பொழிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்கள் காரில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் தடிகளால் அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

புகார் அளித்துள்ள வஸ்ரம்பாய் சர்வையா, 3 செல்போன்களையும் தாக்கியவர்கள் திருடிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். 6 குற்றவாளிகளில் ரமேஷ், ராகேஷ், நாக்ஜிபாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த பசுவின் தோலை வயிற்று பசிக்காக உரித்த தலித்களை மிருகத்தை விடக் கெவலமாக நடத்தும் இந்த இந்துத்வா நாய்களை என்ன செய்யலாம். இந்து மதம் போதிப்பது இதைத்தானா? இந்துக்களே இந்த நாய்களை கண்ட இடத்தில் அடிக்க ஆரம்பித்தால்தான் தான் பசு பைத்தியம் இவர்களை விட்டு நீங்கும். மோடி பிரதமராக இருக்கும் காலமெல்லாம் இது பொன்ற கொடுமைகள் குறையப் பொவதில்லை.

வளை குடா முதல் உலகம் முழுக்க மாடு ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்து மத உயர் சாதி யினருடையது. பசுவின் மீது உண்மையான பக்தி இருந்தால் 'அல் கபீர்' போன்ற அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களை இவ்வாறு அடிப்பார்களா?

5 comments:

Varatharaj Vijayasundaran said...

This is done by mossad, they are all Israeli agent. Am I correct Mr. Suvanapriyan.

Dr.Anburaj said...

நல்ல பல செய்திகள் நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடையவில்லை என்பது உண்மைதான். வருந்தக்தக்கது.

இந்திய ராணுவ வீரா்கள் காஷ்மீாில் படுகொலை செய்யப்படுகின்றாா்கள். அது குறித்து எந்த பதிவையும் தாங்கள் செய்ய மாட்டீர்கள். ஆனால் காஷ்மீா் அரேபிய காடையா்களுக்கு எதேனும் நடந்து விட்டால் உடனே அண்டப்புளுகு ஆகாயபுளுகு பதிவு களைச் செய்து விடுவீா்கள்.

Dr.Anburaj said...
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில், கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்று, கொடூரமாக 84 பேரை கொன்று குவித்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில்,'பாஸ்டில் தினம்' எனப்படும் தேசிய தினத்தை, ஜூலை 14ம் தேதி, நீஸ் நகர மக்கள் கொண்டாடினர். அப்போது, வாணவேடிக்கையை பார்த்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பாய்ந்தது. இரண்டு கி.மீ., துாரம் வரை சென்று, மக்களை சரமாரியாக நசுக்கி கொன்றது. இத்தாக்குதலில், 84 பேர் உடல் நசுங்கி பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அந்த லாரியை ஓட்டிச் சென்றவனை, பின்னர் போலீசார் சுட்டுக் கொன்றனர். 'இது, பயங்கரவாத தாக்குதல்' என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது; எனினும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும், உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், பிரான்ஸ் தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ்., அமைப்பின் ஆதரவு செய்தி நிறுவனம், இதை உறுதிப்படுத்தியுள்ளது. 'எங்களுக்கு எதிராக சண்டை நடத்தும் கூட்டணி நாடு ஒன்றுக்கு, எங்கள் வீரர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்' என, ஐ.எஸ்., அமைப்பு கூறியுள்ளது.இதற்கிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பாக, கொலையாளியின் நண்பர்கள் நான்கு பேரை, பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இதேபோல், கொலையாளியின், முன்னாள் மனைவியிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பத்திாிகைகளில் வெளியான செய்திகள் படங்களை தாங்கள் ஏன் வெளியிடவில்லை ?
தங்களின் யோக்கியதை நன்கு தொியும்.

Dr.Anburaj said...

The Gujarat Chief Minister condemned the incident and appealed the people to maintain peace.

"It was indeed a despicable act, and no community can tolerate it. Local police was also at fault, as they did not acted swiftly. Apart from arresting the culprits, we have also suspended such policemen yesterday. State government will provide a compensation of Rs 4 lakhs to each of the victims," she said.
குஜராத் மாநில முதல்வா் மேற்படி சம்பவத்திற்கு கடும் கண்டனம் தொிவித்தள்ளாா். பாதிக்கப்பட்வாகளுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணை வழங்கியுள்ளாா். மேலும் குற்றம் செய்தவா்கள் மீது கிாிமினல் வழக்கு போடப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
ஒரு சம்பவத்திற்கு அரசு வேறு என்ன தான் செய்ய முடியும் ? ஏன் இப்படி குஜராத் என்றாலே வெறுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

Dr.Anburaj said...


இந்த சம்பவம் தொடா்பாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன். தலீத் மக்கள் தங்களது கண்டனங்களை ஓங்கி பதிவு செய்துள்ளாா்கள்.அரசு இறங்கி வந்து ஆவன செய்துள்ளது.இது எவ்வளவு பொிய முன்னேற்றம்.