'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, July 05, 2016
'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை
'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எனது நண்பன் கருப்பண் செட்டி கூறுவான் 'டேய் நஜீர்... உங்க வீட்டுல எப்போ பிரியாணி செய்தாலும் எனக்கு ஒரு பிளேட் கொண்டு வாடா' என்று ஆசையோடு கேட்பான். இவ்வளவு ஆசைப்படுகிறானே என்று வீட்டில் சண்டை போட்டு பார்சல் கட்டி 2 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று பிரியாணியை கொடுத்து விட்டு வருவேன்.
அதே போல் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கும் போதும் பள்ளி ஆசிரியர்கள் 'டேய் நஜீர்... பிரியாணி வீட்டுக்கு மறந்திட வேண்டாம்' என்று அன்புடனும் அதிகாரத்தோடும் கட்டளையிடுவார்கள். ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் டிபன் கேரியரில் வைத்து நான் சாப்பிடுவதற்கு முன்பாகவே சைக்கிளில் சென்று கொடுத்து விட்டு வருவேன்.
'ஏண்டா பிரியாணி... பிரியாணி என்று அலையிறே... இதுக்கு முன்னாடி சாப்பிடதில்லையா?' என்று நான் எனது நண்பர்களிடம் கேட்டால் 'நிறைய சாப்பிட்டிருக்கேண்டா மாப்ள... ஆனால் உங்க முஸ்லிம் வீடுகளில் செய்யப்படும் பிரியாணிக்கு தனி மணமும் ருசியும் இருக்கிறது... ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் அந்த ருசி ஹோட்டலில் கிடைக்க மாட்டேங்குதுடா' என்று பதிலளிப்பார்கள்.
எனது காலம் முடிந்தவுடன் எனது பிள்ளைகளின் காலத்திலும் இது தொடர்கிறது. கல்லூரியில் படித்து வரும் எனது இரண்டு மகன்களுக்கும் பல இந்து நண்பர்கள். பெருநாள் வந்து விட்டால் 'ஐந்து நண்பர்களுக்கு சேர்த்து சாப்பாடு ஆக்கு' என்று ஒரு மகனும் 'ஏழு பேருக்கு சேர்த்து கறி வாங்கி விடு' என்று மற்றொரு மகனும் கூறி விட எனது மனைவி உதவிக்கு தனது அக்காவையும் அழைத்துக் கொண்டு பிரியாணி செய்ய தயாராகி விடுகிறார்கள். பிரியாணி தயாரானவுடன் நண்பர்கள் வீட்டுக்கும் வருகிறார்கள். சில நேரம் 15 கிலோ மீட்டர் சாப்பாட்டை தூக்கிக் கொண்டு சென்று அவர்கள் வீட்டிலும் கொடுத்து விட்டு வருகிறார்கள்.
வீட்டு வேலைகள் எதையும் கேட்காத இவர்கள் நண்பர்களுக்கு பிரியாணி செய்யும் போது மட்டும் அனைத்து வேலைகளையும் செய்வதை எனது மனைவி ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்.
இந்த அன்பும் பாசமும் பிரியமும் பிரியாணி வரை தொடரும் காலமெல்லாம் ராஜா, மோடி, அமீத்ஷா, ராம கோபாலன் போன்றவர்களின் சதித் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேறப் போவதில்லை என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.
நாளை பெருநாளை சவுதியில் கொண்டாடுகிறோம். இந்தியாவில் நாளை மறுநாள் பெருநாள். சந்தோஷமான இந்த நாளைப் போல் எந்த நாளும் சகோதர சகோதரிகளின் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
tntj celebrate eid on 6th itself, how come you can disobey tntj decision, according to tntj the had seen crescent so only 29 days of fasting in tamilnadu and sixith will be eid. Change your post.
tntj celebrate eid on 6th itself, how come you can disobey tntj decision, according to tntj the had seen crescent so only 29 days of fasting in tamilnadu and sixith will be eid. Change your post.
- திருமாலைமாற்று பண் - கௌசிகம் திருச்சிற்றம்பலம்
துவக்கத்தில் இருந்துவாசித்தாலும் முடிவில் இருந்து வாசிததாலும் அதே பொருள் தரும் பாடல் . இயற்றியவா் திருஞான சம்பந்தா் .என்னே அறிவு. என்னே ஞானம்.
1257
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
3.117.1
1258.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
3.117.2
1259.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
3.117.3
1260.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
3.117.4
1261.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
3.117.5
1262.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
3.117.6
1263.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.
3.117.7
1264.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
3.117.8
1265.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
3.117.9
1266.
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
3.117.10
1267.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
3.117.11
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
முதலில், இந்தப் பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை:
யாம் ஆமா? (நாங்கள் கடவுள்களா? இல்லை)
நீ ஆம் ஆம்! (நீமட்டும்தான் கடவுள், ஆமாம்!)
மா யாழீ, (பெரிய யாழை ஏந்தியவனே)
காமா, (எல்லோராலும் விரும்பப்படுகிறவனே)
காண் நாகா, (நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே)
காணா காமா, (காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே)
காழீயா, (சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே)
மா மாயா, (பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே)
நீ மா மாயா (எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!)
ஆக, இந்தப் பாடலின் பொருள்:
நாங்கள் கடவுள்களா? இல்லை. நீமட்டும்தான் கடவுள், ஆமாம்!
பெரிய யாழை ஏந்தியவனே, எல்லோராலும் விரும்பப்படுகிறவனே, நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே, காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே, சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே, பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே, எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!
முஸ்லீம்களின் சிறப்பு பிாியாணி மட்டும் அல்ல பயங்கரவாதமும்தான்
ஷியா பிரிவினரின் -முஸ்லீம்கள் -புனிதத் தலத்தில் தற்கொலைத் தாக்குதல்: 37 பேர் பலி
By பாக்தாத் First Published : 09 July 2016 12:26 AM IST தினமணி செய்தி
புகைப்படங்கள்
இராக்கில் ஷியாக்களின் புனிதத் தலத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை இரவு நிகழ்த்திய தாக்குதலில் 37 பேர் பலியாகினர்.62 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பாக்தாதுக்கு 80 கி.மீ. தொலைவிலுள்ள பாலாத் நகரில், ஷியா பிரிவினரின் புனிதத் தலமான சையது முகமது மசூதி அமைந்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, அந்த மசூதியில் வியாழக்கிழமை இரவு ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது அந்த மசூதியை நோக்கியும், அருகிலிருந்த சந்தைப் பகுதியை நோக்கியும் தொலைவிலிருந்து எறிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மசூதியின் வாயிலில் காவலுக்காக நின்றிருந்த போலீஸார் அருகே வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தார்.
இதையடுத்து, உடலில் வெடிகுண்டு பொருத்திய மற்றொரு பயங்கரவாதியும், துப்பாக்கிகளுடன் 9 பயங்கரவாதிகளும் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நிகழ்த்தினர். மனித வெடிகுண்டாக வந்த ஒரு பயங்கரவாதி, குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்குள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாக்தாதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 292 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்த நிலையில், மசூதித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, முக்கிய நகரமான ஃபலூஜாவை கடந்த மாதம் இராக் ராணுவத்திடம் இழந்தது.
போர்முனையில் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அந்த அமைப்பு பயங்கரவாதத் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத் தாக்குதலில் ஈடுபட்டவர் காணாமல் போன பல்கலை. மாணவர்'
By டாக்காFirst Published : 09 July 2016 12:25 AM IST தினமணி
வங்கதேசத்தில்
ரம்ஜான் தொழு கைக் கூட்டத்தில் வியாழக்கிழமை தாக்குதல்
நிகழ்த்தி, போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் சில மாதங்கள் முன்பு காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து "டாக்கா டிரிபியூன்' நாளிதழ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஷோலாகியா நகரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையின்போது தாக்குதல் நிகழ்த்தியவர்களில் ஒருவர் போலீஸாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உருவம் இடம்பெற்ற படம் மற்றும் விடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின.
அவற்றைப் பார்த்த பலர், சுட்டுக் கொல்லப்பட்டது டாக்காவிலுள்ள "நார்த் செளத்' பல்கலைக்கழகத்தில் "பி.பி.ஏ.' இறுதி ஆண்டு பயின்று வந்த அபீர் ரகுமான் என்று தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக அவரைக் காணவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கிஷோர்கஞ்ச் மாவட்டம், ஷோலாகியா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு கூட்டுத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.
2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது 7 அல்லது 8 மர்ம நபர்கள் வெடிகுண்டுகள், கத்திகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தினர்.
இதில் இரு காவலர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸாருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையிலான துப்பாக்கி சண்டையில் தோட்டா பாய்ந்து,
ஹிந்துப் பெண் உயிரிழந்தார்.
போலீஸாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், தாக்குதல் நிகழ்த்திய
அபீர் ரகுமான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இசுலாமிய இலக்கியங்களில் இதுபோன்ற கவிதைச் சிறப்பு உள்ள பாடல்களை படித்தவா்கள் பதிவு செய்யலாமே !
காஷ்மீாில் இன்றுள்ள நிலைமை குறித்து சற்று எழுதுங்கள் சுவனப்பிாியன்.
பயங்கரவாத இயக்கததின் முக்கிய உறுப்பினா் இவன் தலைக்கு ரூ.பத்து லட்சம் பாிசு என்று அறிவிக்கப்பட்டவன் கொல்லப்பட்டதற்கு முஸ்லீம் சமூகம் கலவரம் செய்கின்றது. அமா்நாத் யாத்திரை நிறுததப்பட்டது. முஸ்லீம் வரலாறு படித்தவன் -அதை நம்புகின்றவன் -சற்று உணா்ச்சி வசப்படுபவன் ஷகித் ஆகிசாவதை விரும்புவான்.
அரேபிய மத வரலாறு முழுவதும் மதத்திற்காக முஸ்லீம் சமூகத்திற்காக செத்து போகின்றவன் தன் உயிரை அளிப்பவன் ஷகித்தாகி போகின்றவன் பெரும் புகழுக்கு பாத்திரனாகின்றான். அதனால்தான் இசுலாமிய சமூகம் என்றும் பயங்கரவாதசெயல்களில் ஈடுபடக் கூடிய நிலையில் உள்ளது.பயங்கரவாத நடவடிக்கைகளை ஷகித் ஆவதாக நினைக்கும் நிலை உள்ளது.இரண்டிற்கும் வேறுபாட்டை இன்றும் சாியாக இனம் கண்டு கொள்ளவில்லை.
Mr. Suvanapriyan why are u not replying now a days. I feel it is your duty to ansuwr our questions because all our queries arise from your post, so kindly reply for our cooments
காஷ்மீா் குறித்து எழுதுங்கள் என்று பதிவு செய்தேன்.எழுதி விட்டீர்கள். அரேபிய மத விசுவாசம் என்று தங்களை பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் செயல்பட வைக்கும்.
இந்தி ராணுவத்தின் மனிதாபிமான செயல் என்று ஒரு வீடியோவைபே பதிவேற்றி விட்டீர்கள். விஜய சுந்தரம் பாா்த்து மகிழுங்கள். முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.
முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஷகித் ஆவதாக நினைக்கும் நிலை உள்ளது.இரண்டிற்கும் வேறுபாட்டை இன்றும் சாியாகமுஸ்லீம்கள் இனம் கண்டு கொள்ளவில்லை.
இசுலாம் ஒரு இனிய மாா்க்கம் என்று எழுதினால் உடனே பதில் அளிப்பாா்.இந்துமதத்தில் குறை கண்டால் உடனே பதில் அளிப்பாா்.
திரு வரதராஜ்!
//Mr. Suvanapriyan why are u not replying now a days. I feel it is your duty to ansuwr our questions because all our queries arise from your post, so kindly reply for our cooments//
பல வேலைகளுக்கு மத்தியில் பதிவுகள் எழுதி வருகிறேன். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. நான் எழுதும் அனைத்து ஆக்கங்களும் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்படுபவை. மாற்றுக் கருத்து உங்களுக்கும் இருக்கலாம். அதனையும் பதியுங்கள். நேரமிருப்பின் பதிலளிக்கிறேன்.
Post a Comment