நமது நாட்டின்
ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் நாச வேலைகளை எப்படி எல்லாம்
நிறைவேற்றினார் என்று தேச பக்தி போர்வையில் சொல்வதைப் பாருங்கள்.
சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?
அஜீத் தோவல் ஐபிஎஸ்:
ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..
'நீ இந்துவா?'
'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.
'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும்
'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்
'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.
'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.
'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'
'ஆம் நான் இந்துதான்'
'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'
'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'
'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?'
'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'
'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.
'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார்.
அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்களும் இந்துக்களும் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் அதற்காக வஞ்சம் தீர்க்க அவர்களின் பிள்ளைகளை குண்டு வைத்து கொல்வது என்ன நியாயம்? இதை பெருமையாக ஒரு ராணுவ அதிகாரி சொல்கிறார். படித்த பல இந்துத்வ மக்கள் கை தட்டி தேச பக்தி என்ற பெயரில் ஆர்ப்பரிக்கிறார்கள்.
2 comments:
சுவனப்பாியன் தாங்கள் ஒரு தேசத் துரோகி.பாக்கிஸ்தானின் கைக்கூலி.தங்களின் மனசு ஒரு வேசியைப்போல் பாக்கிஸ்தானின் உறவுக்கு அலைபாய்கின்றது.
01.திரு.அஷித் தோவல் இன்று தேசிய பாதுகாப்புபற்றி அரசுக்கு ஆலோசனை சொல்லும் மிகத் திறமையான ஒரு அதிகாாி.இத்ததைகய சிறந்த அதிகாாிகளை விமா்சனமன் செய்யும் தகுதி யோக்கியதை தங்களுக்கு கிடையாது.
02.பாக்கிஸ்தானில் இன்றும் ஏராளமான தனியாா் அமைப்புக்கள் ராணுவத்தின் ஆசியோடு அரேபிய மத வெறியுட்டப்பட்ட காடையா்களான இளைஞா்களை இந்தியாவுக்குள் அனுப்பி பயங்கரவாத செயல்களைச் செய்து வருகின்றாா்கள்.
03.பாக்கிஸ்தான் ராணுவத்தினா் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சின பெற்றவா்களைக் கொன்றதற்காக அவா்களது குழந்தைகள் படிக்கும் பள்ளி மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 160 குழந்தைகளைக் கொன்றவா்கள் குரான் படித்த முஹம்மதுவைப்படித்த காடையா்கள்.
04.பாக்கிஸ்தானின் நடவடிக்கைகளைள நோிடையாக தொிந்து கொள்ள ராணுவத்திற்கும் நாட்டிற்கும் பலமான உளவு அமைப்பு தேவை.உளவு பாா்ப்பதில் வல்லமை பெறவில்லையெனில் பின்னேற்றம் தான் பாிசாக கிடைக்கும்.
05. ”உளவு”எவ்வளவு முக்கியம் என்பதற்கு திருக்குறளைப்படித்து பாா்க்கவேண்டும்.முஹம்ம்து என்ற ஆரேபிய மன்னாின் வரலாற்றில் பல பகுதிகளில் உளவு பணி செம்மையாக செய்யப்பட்டு முஹம்மது பல போாில் வெற்றி பெற்றுள்ளதை படித்திருப்பீா்கள்.
06.இன்றும் பாக்கிஸ்தான் அரேபிய மத உணா்வையோ பணத்தையோ மனித பலஹீனத்தையோ பயன் படுத்தி உளவு பணிகளை நமது நாட்டில் -உமக்கு ஏது நமது நாடு -
இந்துஸ்தானத்தில் நடத்தி வருகின்றது.கண்டுபிடித்து தண்டிப்பது நாட்டை விட்டு வெளியேற உத்தரவு அ ளிப்பது போன்றவை அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
07. பரஸ்பரம் பகை உணா்வு கொண்ட நிலையில் பாக்கிஸ்தானையும் சாியான முறையில் உளவு பாா்ப்பது நமது ( இந்தியா்களின் இந்துக்களின் ) கடமை.
08.திரு.அஜில் தோவல் ஒரு தேசபக்தியுள்ள அற்புதமான மாமனிதா். அவா் பாக்கிஸ்தானில் ஒரு தா்காவில் முஸ்லீம்போல் வேடம் அணிந்து அந்த நாட்டில் நடக்கும் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் பொது கூட்டங்கள் சொற் பொழிவுகள் பத்திாிகை செய்திகளை சேகாிக்கும் ஒரு நடவடிக்கையில்தான் ஈடுபட்டாா்.
09. எந்த நாச வேலையிலும் அவா் ஈடுபடவில்லை.தாங்களும் அப்படி செய்தி போடவில்லை.தாங்கள் பதிவுன செய்யப்பட்ட தகவல்களில் அப்படி ஒரு செய்தியும் இல்லை.
10.சுபி போன்று இருந்தவருக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை. சுபியாக இருந்தவா் தனது சொந்த திட்டப்படி செயல்பட்டு வந்தாா்.
11.ஏதோ அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான் பிறகு அவா் சுபியை சந்திக்கவேயில்லை.
12.தயது செய்து பாக்கிஸ்தானின் பயங்கரவாத செயல்களை கடுகளவேனும் கண்டிக்காத சுவனப்பிாியன்
இந்துஸ்தானத்து உயா் அதிகாாிரை இழிவு படுத்தியிருப்பது அசிங்கம்.தாங்களுக்கு பொரு்தமான இடம் பாக்கிஸ்தான்தான். அங்கு சென்று விடுங்களேன்.
இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகா் என்ற முறையில் திரு.அஜத்தோவல் ஐபிஎஸ் அவா்கள் எல்லையில் இந்தியாவோடு முரண்படும் சீனா நாட்.டிற்குச் செனன்று முக்கிய அதிகாாிகள் மற்றும் நாட்டின் அதிபா் ஆகியோரோடு நமது கருத்தைச் சொல்லி விட்டு வந்திருக்கின்றாா்.எவ்வளவு முக்கியப் பொறுப்பைச் சுமந்து வாழும் ஒரு அதிகாாியை எவ்வளவு கேவலமாக பதிவு செய்துள்ளீா சுவனபபிாியன்.உமக்கெல்லாம் அறிவே கிடையாதா ?
Post a Comment