Followers

Saturday, July 08, 2017

குஜராத் சூரத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக பிரமாண்ட பேரணி!

குஜராத் சூரத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக பிரமாண்ட பேரணி!

குஜராத்தின் சூரத் நகரில் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக டெக்ஸ்டைல் வியாபாரிகள் பிரமாண்ட பேரணி இன்று சனிக் கிழமை நடத்தியுள்ளனர். ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க பல மணி நேரமானது. மோடி முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் ஜிஎஸ்டியை கொண்டு வர முயற்சித்தபோது 'எனது பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை இங்கு கொண்டு வர முடியும்' என்றார். அப்போது எதிர்த்த மோடி இன்று தானே அந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதை அங்குள்ள மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
08-07-2015




1 comment:

Dr.Anburaj said...


இன்று ஒரு மளிகைக் கடைக்காராிடம் குறித்து கருத்து கேட்டேன். பொருட்களை பதுக்க

இயலாது.எனவே பொருட்களின் விலை குறையும் என்றாா்.அனைவரும் பில் போட வேண்டியுள்ளது.எனவே அனைவருக்கும் சற்று வருத்தம்.

பொதுவாக சொல்வதென்றால்

01.நாட்டில் வருமானவாி செலுத்த தகுதியானவா்களில் 30 சதம் மக்கள்தான் வருமானவாி செலுத்துகின்றாா்கள். வருமானவாி செலுத்தும் நபா்களின் எண்ணிக்கையை நியாயமாக கூட்ட வேண்டும்.. அதுதானே நியாயமானது.

02.விற்பனை வாி அளவும் மிகவும் குறைவாக செலுத்தப்படுகின்றது. அரசிற்கு விற்பனை வாி கூடுதலாக கிடைக்க வேண்டும். பில் போட்டு வியாபாரம் அனைவரும் செய்ய வேண்டும் என்றால் பதுக்கல் செய்து கள்ள கணக்கு எழுதி மற்றும் பல பல தகிடுதனங்கள் செய்து அரசின் வருவாயைக் குறைத்தவா்கள் ஆா்ப்பாட்டம் சில நாட்களுக்கு செய்யத்தான் செய்வாா்கள்.

03.திரு.நரேந்திர மோடி அரசு பதவியேற்ற நாளில் இருந்து வெளிநாடுகளில் உலக வங்கியில் வேறு எங்கும் கடன் வாங்கவில்லை.

இதுவே பெரும் சாதனை.ஊழல் அற்ற ஆட்சியை திரு.மோடி அவா்கள் நடத்துகின்றாா்கள். வாழ்த்துவோம்.பாராட்டுவோம்.