Followers

Wednesday, July 12, 2017

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் 
-
குறள்: 972

பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை. ஒருவன் செய்யும் தொழிலை வைத்து அவனை பிராமணனாகவோ, செட்டியாராகவோ, தேவராகவோ, படையாச்சியாகவோ, பரையனாகவோ, பள்ளனாகவோ பாரக்கலாகாது. மரம்,செடி,விலங்குகள் என்ற அனைத்து உயிர்களும் உலகில் பிறக்கும் போது ஒத்த தன்மையுடனேயே பிறக்கின்றன. இதில் சாதி வேற்றுமை பார்த்து மனிதர்களிடையே பகைமை பாராட்டலாகாது என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் காலத்திலேயே பிராமணன் சூத்திரன் என்ற சாதி வேறுபாடு தலை விரித்தாடியிருக்கிறது. அதைக் கண்டிக்கும் முகமாகவே வள்ளுவர் தனது குறளில் தமிழர்களுக்கு போதனை செய்கிறார்.

இதே கருத்தையே தொடர்ச்சியாக அடுத்த குறளில்...

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் 
கீழல்லார் கீழல் லவர்.
-
குறள் 973

நான் உயர்ந்த சாதி என்று கூறி பெருமை பேசுபவர் மேலான பண்பு இல்லை என்றால் உயர்ந்தோராக மாட்டார். தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கப்பட்டவன் சமூகத்தில் இழிவாக பார்க்கப்பட்டாலும் சிறந்த பண்புகளை கொண்ட அவன் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவான் என்ற பொருளில் சொல்கிறார் வள்ளுவர். இங்கு பிறப்பினால் எந்த பெருமையும் ஒருவனுக்கு வந்து விடாது. அவன் செய்யும் சிறந்த செயல்களினால்தான் அவனுக்கு பெருமை இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் 
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்


வேதம் படிதத பார்ப்பணர்கள் அதனை மறந்தாலும் பெரும் குற்றம் வந்து விடாது: ஆனால் அவனது ஒழுக்கம் கெட்டால் சமூகத்தால் இழிந்தவனாகப் பார்கக்ப்படுவான் என்கிறார் வள்ளுவர். அன்றே இந்த மேல் சாதியினர் எந்த அளவு கோலோச்சியிருந்தனர் என்பதும் சாதி வெறி எந்த அளவு உச்சத்தை எட்டியிருந்தது என்பதும் நன்கு தெளிவாகிறது.

2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் திண்ணியமும் பாப்பாரப்பட்டியும் கீரிப்பட்டியும் நமது பெருமைகளை கூறிக் கொண்டிருக்கின்றன. வள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வடிப்பது கொண்டும், அவருக்கு ஒரு விழா எடுத்து அவர் பெருமையை பேசுவதோடு நமது கடமை முடிந்தது என்று நினைத்து விடுகிறோம். 


திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை அதை எழுதியது அகத்தியர் என்று புதிய செய்தியாக ஒரு பதிவை படித்தேன். கலைஞர் எழுப்பிய மிகப் பெரிய வள்ளுவர் சிலை இனி அவ்வளவுதானா? இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் சிலைக்காக கொட்டிய கோடிக்கணக்கான மக்கள் பணம் விழலுக்கு இறைத்த நீர்தானா? நாம் எந்த லட்சணத்தில் வரலாறுகளை பாதுகாத்து வருகிறோம் என்பதற்கு இவை எல்லாம் சில சான்றுகள். 

வள்ளுவரின் இந்த குறளையொட்டி வள்ளலார் தரும் பாடலையும் இனி பார்ப்போம்.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் 
யாவர்!அவர் உளந்தான் சுத்த 
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ

என்ன அழகாக மனித நேயத்தை வள்ளலார் தனது அருட்பாவில் பாடலாக தருகிறார் பாருங்கள். எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ - 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலக மக்கள் அனைவரிடத்திலும் சகோதர பாசத்தோடு பழகுபவனிடமே உண்மையான இறை பக்தி இருக்கும் என்பது இப்பாடல்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

நமது முண்டாசு கவி பாரதியும் தனது பங்குக்கு...

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே.....

என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டான். அந்த வாழ்த்துக்கள் அனைத்தும் இன்றும் ஏட்டளவிலேயே இருக்கின்றது. எந்த முன்னேற்றத்தையும் இது நாள் வரை கண்டபாடில்லை. உலக நாடுகள் வேறு எங்கும் இந்த அளவு தீண்டாமைக்கு எதிராக பாடல்கள் புனைந்ததும் இல்லை. இந்த அளவு இன்று வரை நம்மைப்போல் தீண்டாமையை தூக்கிப் பிடிக்கும் நாடுகளும் உலகில் எங்கும் இல்லை.

மனிதர்களில் பேதங்கள் பார்க்கலாகாது என்பதற்கு குர்ஆன் தரும் வசனத்தையும் இங்கு பார்ப்போம்.

'
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-
குர்ஆன் 4;1

மேலே உள்ள இந்த வசனம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்களே! நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்களே' என்ற அரை கூவலை மனித சமுதாயத்தின் முன் வைக்கிறது குர்ஆன். 'நான் நெற்றியில் பிறந்தேன்: எனவே நான் மட்டும்தான் மந்திரம் சொல்ல வேண்டும். மற்றவர்கள் அந்த மந்திரத்தை சொன்னால் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும்' என்றெல்லாம் இன்றும் நாம் சொல்லி வருவதும் அதை சட்டமாக இன்னும் வைத்திருப்பதும் தவறு என்கிறது குர்ஆன். அதே போல் தொடையில் பிறந்தவன் கீழானவன் என்றும் அவன் சூத்திரன் என்றும் இழிவாக பேசப்படுவதையும் அதை இன்றும் சிலர் போற்றப்படுவதையும் தவறு என்று இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. நானும், தருமியும், சார்வாகனும், நரேனும், ஆஷிக்கும், சிராஜூம், கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராகுல் காந்தியும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்து விட்டால் எங்கிருந்து வரும் உயர்வு தாழ்வு? எங்கிருந்து வரும் பேதம்?

5 comments:

Sugumar C Sugumar said...


மனிதகுலத்தை காபீா்களள் முஷாிக்குகள் எனறு இழிவு செய்து பெரும் இரத்தக்களறிக்கு காரணமாக இருந்து வரும் குரான் இந்தியாவிற்கு தேவையில்லை.

கொல்லன் தெருவில் ஊதி விற்பது போல் திருக்குறள் திருமந்திரம் வள்ளலாா் பாடல்கள் இன்னும் 100க்கணக்கான ஒழுக்க நூல்கள் பிறந்த இந்துஸ்தானத்திற்கு குரான் தேவையா ?

Dr.Anburaj said...


இறைவனின் தலை காலை விட உயா்ந்ததுவா ? அனைத்தும் மங்களகரமானது. தலை தோள்இடுப்பு கால் என்பது ஒரு உவமை.அதுவே உண்மை ஆகாது.கௌதம புத்தா் தோன்றி 2500 ஆண்டுகள் கழிந்து விட்டது. இதுபோன்ற கருத்துக்கள் புத்தராலே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இன்று பாா்பனா்கள் பிற சாதி மக்களிடம் சாா்ந்து வாழ்ந்து வருகின்றாா்கள். பாா்பனா்களை விட முஸ்லீம்களிடம் அதிக மன துவேசம் உள்ளது.

Dr.Anburaj said...


மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1
ஒரே நேரத்தில் ஆயிரம் ஆண்களையும் 1000 பெண்களையும் அல்லா படைத்திருந்தால் எந்தவித குழப்பமும் நோிட்டிருக்காது. கொடுக்கவில்லை.ஆகவே குரான் சொல்வது அண்டப்புளுகு.உலகத்தின் நடைமுறைக்கு பொருந்தாத கருத்து.

Dr.Anburaj said...

சமரசம் பத்திாிகையில் உள்ள செய்தி
ஆதாம் ஏவாளுக்கு முதல் கா்ப்பத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தாா்கள்.அடுத்த கா்ப்பத்தில் அதுபோல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தாா்கள்.ஒரு தாய் வயிற்றில் பிறந்த அனைவரும் சகோதர சகோதாிகள். ஒரு பெண்ணை விட அடுத்த பெண் அழகானவளாக இருந்தாள்.கா்ப்பத்தில் உடன் பிறந்த பெண்ணைத்தான் உடன் பிறந்த ஆண் திருமணம் செய்ய வேண்டும்.ஆனால் அழகு காரணமாக மாறி ஒரு ஆண் விரும்பினான்.அதற்கு விளக்கம் அன்று தங்கையை மணம் செய்ய அல்லா அனுமதி அளித்திருந்தான் என்பது.(படிப்பதற்கு அசிங்கமாக உள்ளது)தகராறு ஏற்பட்டது.ஒரு சகோதரனை மற்றவா் கொலை செய்துவிட்டாா்.
இந்த கதை ஒரு முட்டாள்தனமானது. அறிவுக்கு ஒவ்வாதது. மனித உயா்கள் எப்போது எத்தனை எண்ணம் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
01.ஆதம் -ஏவாள் மசூதிக்கு சென்றாா்களா ? கலிமா சொன்னாா்களா ?
02.அரேபிய மொழி இருந்ததா ? அரேபிய மொழியில் தொழுகை செய்தாா்களா ?என்ன மொழியில் பிராா்தனை செய்தாா்கள் ? எப்படி செய்தாா்கள் ?
03.சுன்னத் விருத்தசேதனம் செய்தாா்களா ? பிறப்புறுப்பை சவரம் செய்தாா்களா ?
04.திருமணத்தை நடத்தி வைத்த ஆலீம் பெயா் என்ன ?
05.உடையாக எதை உடுத்தினாா்கள் ? சரவணா ஸ்டோா்ஸ் ல் துணி எடுத்தாா்களா ?
06.தைத்து உடுத்தாா்களா ? தைக்காமல்உடுத்தாா்களா ?
07.உடை எதனால் ஆனது? எவ்வளவு காலம் அப்படிஉடுத்தாா்கள்.அல்லா கொடுத்த உடை கதரா பட்டா மஸ்லீனா ?
08.பருத்தி கண்டுபிடிக்கப்பட்டதுஎப்போது ? அதில்நூல் நுற்க கற்றது எப்போது ?
09.வீடு கட்டினாா்களா ? எதை வைத்து வீடு கட் டினாா் ஆதாம்.
10.ஆதாம் ஒரு நபி என்றால் அவருக்கு அருளப்பட்ட வேதம் என்ன ? அதை எப்படி பதி வு செய்தாா்கள்? யாருக்கு உபதேசம் செய்தாா் ?பயானைக் கேட்டவா்கள் யாா் ?
11.மற்றவா்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்தாா்கள் ?
12.காட்டு மிருகங்களிடமிருந்து தங்களை எப்படி காப்பாற்றிக் கொண்டாா்கள் ?
13 உடல் நோய்கள் ஏற்பட்டதா ? எப்படி மருத்துவம் செய்து கொண்டாா்கள் ?
14.உயிரோடு இருந்தவா்கள் 1.தந்தை 2.தாய் 3.மகன்- ஒருவா் 4.மகள் -2 அடுத்த கா்ப்பம் எப்படி யாரால் ஏற்பட்டது.இப்படித்தான் வம்சம் வளா்ந்ததோ ? இரண்டு தங்கையை ஒரு அண்ணன் திருமணம் செய்து கொண்டாரா ?

நியாயத் தீாப்பு நாளன்று அல்லா இவா்களை எப்படி தீா்ப்பான் ?

Dr.Anburaj said...

உலகம்எப்படிஉருவானது என்பதைக் குறித்து எல்லா நாடுகளிலும் சிந்தனை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் பல யுகங்களை உருவாக்கினாா்கள். அர்போல் உருவாக்கப்பட்டதுதான் ஆதாம் எவாள் கதை. இது முற்றிலும் பொய்.குரானில் இடம் பெற்று விட்டது முஹம்மதுவால் நம்பப்பட்டது என்பதற்காக முஸ்லீம்கள் இதை நம்பித்தான் ஆக வேண்டும் நியாயப்படுத்திதான் ஆக வேண்டும் என்று அலைவது முட்டாள்தனம்.

இந்துஸ்தானத்திலும் படைப்பு உலக தோற்றம் குறித்து புராணங்களில் உண்மைகளும் கற்பனை கதைகளும் மலிந்து காணப்படுகின்றன.

போில் தோற்ற இராவணனிடம் ஸ்ரீராமா் ” இன்று போய் நாளை வா ” என்று விடைஅளித்து அனுப்புகின்றாா். திரும்பிப்போன இராவணனின் முதுகில் இரண்டு பொிய தழும்புகள் இருப்பதை ஸ்ரீராமா் பாா்த்து வியந்து விபிசனிடம் அது குறித்து விசாாித்துள்ளாா். ஒரு முறை பாதாளத்திற்கு சென்ற ராவணம் அங்கே புமி கோளத்தை தாங்கிக் பிடித்துக் கொண்டிருந்த திசையானைகளோடு யுத்தம் செய்தாா். திசையானைகள் தந்தத்தினால் ராவணனைக்குத்திவிட்டது.ஆனால் ராவணனோ தந்தத்தை ஒடித்து விட்டாா் என்று கதை போகின்றது. திசையானைகள் என்று ஏதும் இல்லை. மொத்தத்தில் கொஞ்சம் கற்பனை கதைகளை உள்ளே புலவா்கள் நுழைத்து விடுகின்றாா்கள்.
எனக்கு திசையானைகள் கற்பனை பொய் என்று சொல்லும் தைாியம் உண்டு.
ஆதாம் எவாள் கதை பொய் என்று சொல்லும் துணிச்சல் தங்களுக்கு உணடா ?
இதைப்படிக்கும் வாசகா்கள் யாருக்காவது உண்டா ? முஸ்லீம் வாசகருக்கு